- ஷெல் என்பது ஒரு நிரல் ஆகும்
- பயனாளர் மற்றும் லினக்ஸ் இவை இரண்டுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படும்
- நீங்கள் முனையத்தில் ஒரு கட்டளையை கொடுத்தவுடன் அந்த கட்டளை லினக்ஸினுடைய ஷெல்லினால் செயல்படுத்தப்பட்டு ,லினக்ஸினுடைய கெர்னலுக்கு செலுத்தப்படும்.
- கெர்னலினுடைய வெளியீடு ஷெல்லுக்கு கொடுக்கப்படும்,அதை பெற்று ஷெல் பயனாளருக்கு தெரிவிக்கும்.
- பயனாளரால் நேரடியாக கெர்னலை தொடர்புகொள்ள இயலாது.
- ஷெல்லானது சொந்தமாகவே கட்டளைகளை வைத்திருக்கும்.
- நீங்கள் முனையத்தில் ஒரு கட்டளையை கொடுத்த உடனே அந்த கட்டளை தனது உள்ளிருப்பான கட்டளையா என ஷெல் முதலில் பார்க்கும், இருந்தால் அதை செயல்படுத்தும்.இல்லையென்றால் அது ஒரு பயன்பாட்டு நிரலா(Application program) என்று பார்க்கும்.இருந்தால் அதை செயல்படுத்தும்.இல்லையென்றால் நீங்கள் கொடுத்த கட்டளை தவறான கட்டளை என்ற செய்தியினை தெரிவிக்கும்.
- நிறைய ஷெல்கள் லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ளன.அவற்றில் பிரபலமானவை
- Bourne shell (sh)
- c shell (csh)
- korn shell (ksh)
- இவையில்லாமல் tcsh,zsh,rsh,pdsksh போன்ற ஷெல்களும் பயன்படுத்தப்படுகின்றன.
- பெரும்பான்மையான லினக்ஸ் இயங்குதளங்களில் GNU bash(Bourne Again Shell) ஷெல் இருப்பியல்பாக பயன்படுத்தப்படுகிறது.
- நீங்கள் உங்களினுடைய லினக்ஸ் இயங்குதளத்தில் வெவ்வேறு வகையான ஷெல்களை பயபடுத்திக்கொள்ளலாம்.ஆனால் அது உங்களினுடைய லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவியிருக்கப்பட வேண்டும்.
- நீங்கள் கொடுக்கும் ஷெல் நிறுவப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள which என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.
which bash
உபுண்டு லினக்ஸில் sh,bash,rsh இந்த மூன்று ஷெல்களும் இருப்பியல்பாக இருக்கும்.
நீங்கள் ஒரு ஷெல்லிலிருந்து வேறொரு ஷெல்லுக்கு மாற விரும்பினால் chsh என முனையத்தில் கட்டளையை கொடுங்கள்.கடவுச்சொல்லைக் கேட்கும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.கடவுச்சொல்லை உள்ளிட்டப்பிறகு
Enter the new value or press ENTER for the default
Login shell[/bin/bash]:
என்று கேட்கும் நீங்கள் மாற விரும்பும் ஷெல்லை உள்ளிட்டு Enter key யினை அழுத்துங்கள்.
உதாரணமாக rsh ஷெல்லுக்கு மாற விரும்பினால் /usr/bin/rsh என்று கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.
1 comment:
தகவலுக்கு நன்றி,
GNU,KDE என்றால் என்ன?
Post a Comment