Apr 1, 2010

லினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர் - 8

இந்த தொடரில் நாம் பார்க்க போகும் கட்டளை cat இந்த கட்டளை ஒரு கோப்பினை உருவாக்கவும்,ஒரு கோப்பில் உள்ள தகவல்களை பார்வையிடுவதற்கும் அதாவது உள்ளடக்கங்களை திரையிடுவதற்கும் பயன்படுகிறது.சரி செய்முறைக்கு போவோமா.

கோப்பினை உருவாக்க:

cat > கோப்பின் பெயர்

கொடுத்து Enter Key யினை அழுத்துங்கள் அழுத்தியவுடன் நாம் கோப்பிற்கு உண்டான தகவல்களை உள்ளிடலாம்.தேவையான தகவல்களை உள்ளிட்ட பிறகு கோப்பினை சேமிக்க Ctrl + D key களை ஒரு சேர அழுத்துங்கள்.அழுத்தியவுடன் கோப்பு சேமிக்கப்பட்டு விடும்.கோப்பு சேமிக்கப் பட்டு விட்டதா என்று பார்க்க வேண்டுமானால் Ctrl+D களை அழுத்திய பிறகு முனையத்தில் ls -l என்ற கட்டளையை கொடுங்கள் .

கோப்பில் உள்ள தகவல்களை பார்வையிட :

cat < கோப்பின் பெயர் (அல்லது) cat கோப்பின் பெயர்

கொடுத்து Enter key யினை அழுத்துங்கள் அழுத்தியவுடன் கோப்பில் உள்ள உள்ளடக்கங்கள் திரையிடப்படும்.

ஏற்கனவே உள்ள கோப்புகளை பார்வயிட வேண்டுமானால் cat ஏற்கனவே உள்ள கோப்பின் பெயர் கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.மேலே உள்ள படத்தை சொடுக்கி பெரிது படுத்தி பார்த்திர்களேயானால் உங்களுக்கு தெளிவாக புரியும்.

cat கட்டளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள man cat என்ற கட்டளையை முனையத்தில் கொடுங்கள் cat கட்டளை பற்றிய அனைத்து தகவலும் உங்களுக்கு கிடைக்கும்.

குறிப்பு: cat filename அதாவது cat > filename என கொடுக்கும் பொழுது இவைகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் single space இருக்கவேண்டும்.

5 comments:

Kumaresan Rajendran said...

லினக்ஸ் அடிப்படை கட்டளைகளை தொடர்து எழுதவும்,

இரா.கதிர்வேல் said...

// R said...

லினக்ஸ் அடிப்படை கட்டளைகளை தொடர்து எழுதவும்,//

பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி லினக்சில் அடிப்படை கட்டளைகளை தொடர்ந்து எழுதுவேன்.

Pragash said...

நன்றி நண்பரே! லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவும் விதத்தை அழகான தமிழில் தந்துள்ளீர்கள். இன்று தான் உபுண்டு 9.10 குறுவட்டு என் கையில் கிடைத்தது. இனி சொந்தமாக நிறுவிவிடுவேன்.

Pragash said...

வணக்கம் கதிர்வேல்! எனது விண்டோஸ் இயங்குதள மடிக்கணணியில் வன்தட்டின் மொத்த அளவு 320GB. அது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே C 78GB, D 119GB, E 118GB. இதில் D டிரைவில் எனது உபுண்டு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்ய விரும்புகின்றேன்.ஆகவே அதில் உபுண்டு லினக்ஸுக்கு என்ன மாதிரியான அளவுகளில் வன்தட்டு பிரிக்கலாம்? D டிரைவில் எந்த கோப்புகளும் இல்லை ஆகவே BACKUP அவசியமா? நிகழ்வட்டாக இயக்கி பார்த்துள்ளேன். உபுண்டு எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

Pragash said...

DVD RAM 4GB என்பதை குறிப்பிட மறந்து விட்டேன். தங்களின் மின்னஞ்சலையும் ஒருமுறை பார்த்துவிடுங்கள்.