Mar 4, 2010

விண்டோஸ் இயங்கு தளத்தை விட லினக்ஸ் ஏன் சிறந்தது ?

  • லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும்.இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • வைரஸ் (நச்சு நிரல்கள்) பிரச்சனைகள் கிடையாது.மைக்ரோசாப்ட்நிறுவனத்தினுடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ்தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.
  • விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்சில் கிடையாது.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது .
  • லினக்ஸ் இயங்குதளத்தின் கோப்பு நிர்வாகம் மிகவும் வலிமையாகஉள்ளது.அதனால் லினக்ஸ் இயங்குதளத்தில் Defragmentation செய்ய வேண்டியஅவசியமில்லை.
  • புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியினை மறுதொடக்கம் செய்யவேண்டிய அவசியமில்லை.
  • லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் Lincense பற்றி கவலைப்படத் தேவையில்லை.
  • லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்ப்பட்ட File System (FAT32,NTFS,EXT3,EXT4,EXT2,VFAT etc...) படிக்க முடியும்.விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System (FAT,NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும்.
  • விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition - ல் மட்டுமே நிறுவ முடியும்.லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition - லும் நிறுவமுடியும்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் PDA,CELL PHONES , SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது.
  • லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகும்.
  • லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம் (Live CD) .
  • லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization (XEN/KVM/VirtualBox/etc..) மென்பொருள்களுடன் வருகிறது.இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • லினக்சினுடைய kernel நிறைய வன்பொருள்களுக்கான Drivers களுடன் வெளியிடப்படுகிறது.ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது.உங்களுடைய மொழியில் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது.

2 comments:

Parameswaran C said...

மரியாதைக்குரியவரே,வணக்கம்.லினக்ஸ் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. வாழ்த்துக்கள்.என Parames Driver / Tamil Nadu Science Forum / Thalavady - Sathy

இரா.கதிர்வேல் said...

///Paramesdriver said..///

மிக்க நன்றி. தங்களின் இது போன்ற ஊக்கப்படுத்துதல் என்னைப் போன்ற மாணவர்களை மென்மேலும் எழுத தூண்டுகின்றது.