லினக்ஸ் இயங்குதளங்களை பயன்படுத்துபவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல் லினக்ஸ் வன்வட்டினுடைய partition களுக்கு எப்படி பெயரிடுகிறது என்று.கணினியில் அனைத்து device களை பற்றிய தகவல்களும் /dev என்ற அடைவினுள் இருக்கும்.லினக்ஸ் இயங்குதளம் வன்வட்டினுடைய partition களுக்கு இவ்வாறு பெயர் கொடுத்து இருக்கும்.
IDE connector உடன் கூடிய வன்வட்டாக இருந்தால்:
உதாரணமாக:
/dev/hda1
/dev/hda2
/dev/hdb1
/dev/hdb3
SATA connector உடன் கூடிய வன்வட்டாக இருந்தால்:
உதாரணமாக:
/dev/sda1
/dev/sda2
இவ்வாறு பெயரிட்டு இருக்கும்.
இதை எவ்வாறு இடுகிறது என்று பார்ப்போம்
இரண்டு படி நிலைகளில் இடுகிறது
1.கணினியில் உங்களினுடைய வன்வட்டு (Hard Disk) எப்படி இணைக்கப்பட்டுள்ளது (IDE or SATA)
2.வன்வட்டில் உள்ள partition , primary partition யனா அல்லது logical partition யனா என்பதை பொறுத்து
-----------------------------------------------------------------------------------------------
1.கணினியில் உங்களினுடைய வன்வட்டு (Hard Disk) எப்படி இணைக்கப்பட்டுள்ளது (IDE connector -ல் இருந்தால்)
வன்வட்டு ----------- லினக்ஸ் கொடுக்கும் பெயர்
Primary Master ------> hda
Primary Slave ------> hdb
Secondary Master------> hdc
Secondary Slave ------> hdd
SATA connector -ல் இருந்தால் sda,sdb என்று குறிக்கும்.
------------------------------------------------------------------------------------------------
2.வன்வட்டில் உள்ள partition , primary partition யனா அல்லது logical partition யனா என்பதை பொறுத்து
உதாரணமாக இவ்வாறு எடுத்துக்கொள்வோம் உங்களினுடைய வன்வட்டு (IDE) Primary Master ஆக இணைத்து இருந்து நீங்கள் விண்டோஸ் இயங்குதளம் நிறுவியிருந்து வன்வட்டை C: ,D:, E:, F: என பிரித்து இருந்தால் (விண்டோஸ் இயங்குதளம் எப்பொழுதுமே C: ஐ primary partition ஆகவும் மற்ற D:, E:, F:, போன்றவைகளை logical partition ஆகவும் உருவாக்கும்)லினக்ஸ் இயங்குதளமானது கீழ்கண்டவாறு பெயரிட்டு இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------
விண்டோஸ் இயங்குதளத்தில்--------> லினக்ஸ் இயங்குதளத்தில்
-----------------------------------------------------------------------------------------------
C: ---------> /dev/hda1
D: ---------> /dev/hda5
E: ---------> /dev/hda6
F: ---------> /dev/hda7
இதை கவனித்து பார்த்திகளேயானால் /dev/hda1 றிற்கு பிறகு /dev/hda5, /dev/hda6, /dev/hda7 என்று பெயரிட்டு இருக்கும்.காரணம் ஒரு வன்வட்டில் நான்கு primary partition களை நாம் உருவாகிகொள்ள முடியும்.விண்டோஸ் இயங்குதளத்தில் C: மட்டுமே Primary Partition அத்துடன் விண்டோஸ் இயங்குதளத்தினால் ஒரேயொரு Primary Partition ஐ மட்டுமே உருவாக்கிக்கொள்ள முடியும்,லினக்ஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தும் fdisk , Gparted ,pdisk கருவிகளின் மூலம் நான்கு Primary Partition களை உருவாக்கிக்கொள்ள முடியம்.நான்கு Primary Partition கள் இருந்தால் /dev/hda1 யைத்தொடர்ந்து /dev/had2, /dev/hda3, /dev/hda4 என்று பெயரிட்டு இருக்கும்.
No comments:
Post a Comment