Mar 31, 2010

முனையம் (Terminal) மூலமாக இணையத்தில் இருந்து நமக்கு தேவையானவற்றை பதிவிறக்கம் செய்வோமா

wget என்ற கட்டளை மூலம் நாம் முனையம் மூலமாகவே இணையத்தில் இருந்து நமக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்யலாம்.இதன் மூலமாக தரவிறக்கம் செய்யப்படும் தகவல்கள் உங்களினுடைய home அடைவினுள் (Directory) சேமிக்கப்படும்.
சரி செய்முறைக்கு போவோமா ,

முனையத்தை திறந்து கொள்ளுங்கள்

முனையத்தில் wget <இணையதளத்தினுடைய முகவரி> கொடுத்து என்டர் பொத்தானை அழுத்துங்கள்.

உதாரணம் :

நான் என்னுடைய வலைப்பூவின் முகப்பு பக்கத்தை தரவிறக்கம் செய்ய கீழ்கண்டவாறு கட்டளை அமைத்துள்ளேன்.

wget http://gnutamil.blogspot.com <என்டர் பொத்தானை அழுத்தினேன்>

சரி ஒரு பாடலை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும்.பாடலை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால்

wget <பாடலினுடைய இணையதள முகவரி> கொடுத்து என்டர் பொத்தானை அழுத்துங்கள்.

சந்தேகம் ஏதேனும் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்த்துக் கொள்ளுங்கள்.

Mar 27, 2010

Top 10 லினக்ஸ் இயங்குதளங்கள்

லினக்ஸ் இயங்குதளங்களை பயன்படுத்தி பார்ப்போம் என நினைப்பவர்களுக்கு
  1. நான் எந்த எந்த லினக்ஸ் இயங்குதளத்தை தேர்வு செய்வது
  2. எந்த லினக்ஸ் இயங்குதளம் சிறப்பாக இருக்கும்
  3. எந்த லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்த எளிமையாக இருக்கும்
  4. தொடக்க நிலை பயன்பாட்டிற்கு எந்த லினக்ஸ் இயங்குதளத்தை தேர்வுசெய்யலாம்
  5. நாம் தேர்வு செய்யும் லினக்ஸ் இயங்குதளத்திற்கு அதிகமானதொழில்நுட்பபஉதவிகள் கிடைக்குமா
போன்ற கேள்விகள் மனதில் எழும்.ஆகையால் இன்றைய Top 10 லினக்ஸ் இயங்குதளங்களை பட்டியலிடுகிறேன். இதில் உங்களுக்கு பிடித்தமான லினக்ஸினை தேர்வு செய்து லினக்சை பயன்படுத்த ஆரம்பியுங்கள்.என்னை பொறுத்தவரை தொடக்க நிலை லினக்ஸ் பயனாளர்கள் Ubuntu, fedora, open suse, debian, mandriva, linux mint இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.(தொலைக்காட்சியில் Top 10 திரைப்படங்கள் ,Top 10 பாடல்கள் போடும்போது நாம் Top 10 லினக்ஸ் போடக்கூடாதா என்ன )

1.Ubuntu லினக்ஸ்
2.Fedora Linux
3.Open Suse Linux

4.Debian Linux

5.Mandriva Linux
6.Linux Mint

7.PCLinux OS

8.Slackware Linux
9.Gentoo

10.CentOs

11.Free BSD
இந்த தகவல் http://distrowatch.com/ இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.இதைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு இந்த சுட்டிக்கு செல்லுங்கள்.

Mar 26, 2010

லினக்ஸில் ஷெல் நிரல்களை (shell program) இயக்குவோமா

படம்-1

படம்-2
படம்-3
லினக்சில் shell script என்பது முக்கியமான பகுதியாகும்.இந்த ஷெல் நிரல்களை எப்படி இயக்குவது என்பதை இப்பொழுது பார்ப்போம்.முனையத்தை திறந்துக்கொள்ளுங்கள் முனையத்தில் nano filename.sh என கொடுத்து Enter key -யினை அழுத்துங்கள்.(பார்க்க படம்-1).இங்கு ஏன் நாம் nano என்று கொடுக்கிறோம் என்றால் nano என்பது ஒரு editor ஆகும்.nano editor தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை vi, gEdit போன்ற editor களைக் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.nano editor பயன்படுத்த எளிமையாக இருக்கும் என்பதால் கொடுத்துள்ளேன்.முனையத்தில் nano என்று கொடுத்து Enter key -யினை அழுத்தியவுடன் nano editor க்குள் சென்று விடும்.இப்பொழுது நாம் நமக்கு தேவையான நிரலை தட்டச்சு செய்ய வேண்டும்.நிரலை தட்டச்சு செய்தால் மட்டும் போதுமா சேமிக்க வேண்டுமல்லவா அதற்கு Ctrl + O key களை ஒரு சேர அழுத்துங்கள் அழுத்தி விட்டு Enter key -யினை அழுத்துங்கள்.அழுத்தியவுடன் நிரல் சேமிக்கப்பட்டு விடும்.இப்பொழுது nano editor விட்டு வெளியேற வேண்டும் அல்லவா அதற்க்கு Ctrl+X களை ஒரு சேர அழுத்துங்கள்.அழுத்தியவுடன் nano editor ஐ விட்டு வெளியேறி முனையத்திற்கு திரும்பி வந்து விடுவோம்.இபோழுது நிரலை தயார் செய்து விட்டாச்சு.இயக்க வேண்டும் அல்லவா,அதற்கு முனையத்தில் sh filename.sh கொடுத்து Enter key -யினை அழுத்துங்கள்.இபோழுது நிரலின் வெளியீடு காண்பிக்கப்படும்.நிரலில் தவறுகள் ஏதேனும் இருந்தாலும் சுட்டி காண்பிக்கப்படும்.

குறிப்பு:நான் இங்கு filename.sh என்று கொடுத்திருக்கும் இடத்தில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான கோப்பின்பெயரை கொடுத்துக்கொள்ளலாம்.கண்டிப்பாக கோப்பின் பெயருடன் .sh என்பது இடம் பெற வேண்டும்.

ஒரு சின்ன நிரலை உதாரணமாக பார்ப்போம்.

$nano myshellpgm.sh

echo "welcome"
echo "periyar"
echo "tamilan"
echo "tamilnadu"

save => Ctrl+O Enter key அழுத்தவும்
exit => Ctrl+X

$sh myshellpgm.sh

இந்த நிரல்

welcome
periyar
tamilan
taminadu

என்ற வெளியிட்டினை கொடுக்கும்

Mar 24, 2010

லினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர்-7

இந்த தொடரில் நாம் பார்க்க போகும் கட்டளை sort . இந்த கட்டளை ஒரு கோப்பில் உள்ளடக்கங்களை alphabetical வரிசையில் வரிசைபடுத்திக் காட்டும்.

கட்டளையின் அமைப்பு:
$sort <கோப்பின் பெயர்>

செய்முறை:
முனையத்தை திறந்து கொள்ளுங்கள் கீழ்கண்டவாறு கட்டளையை அமையுங்கள்

$sort file1 என கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.file1 என்று நான் கொடுத்துள்ள பெயருக்கு பதிலாக உங்களினுடைய file ன் பெயரினை கொடுங்கள்.

Mar 23, 2010

டெபியான் லினக்சை நிறுவுவது எப்படி?

லினக்ஸ் வழங்கல்களில் டெபியான் லினக்ஸ் முக்கியமானதாகும்.Ubuntu,Dam Small Linux(DSL),knoppix போன்ற பிரபலமான வழங்கல்கள் டெபியானில் இருந்து உருவாக்கப்பட்டதே.டெபியான் லினக்சை நிறுவுவதை பற்றி நான் வலைப்பதிவில் பதிய முற்படாததற்க்கான காரணம் முதலில் இணைய வசதி பிரச்சனை ,இரண்டு PDF வடிவில் இருந்தால் இணைய வசதி இல்லாவிட்டாலும் படித்துக்கொள்ளலாம்.

நான் உருவாக்கிய டெபியான் லினக்சை நிறுவுவது எப்படி? PDF கோப்பினை தரவிறக்கம் மற்றும் படிக்க இங்கு சொடுக்கவும்.

டெபியான் லினக்ஸின் இணையதள முகவரி:www.debian.org
மேலும் டேபியானை பற்றி தெரிந்து கொள்ள : இங்கு சொடுக்குங்கள்
விக்கிபீடியாவில் டெபியானை பற்றி

டெபியானை பற்றிய ஒரு சில விபரங்கள்:
kernel version => 2.6.26
Desktop Environment => GNOME,KDE,Xfce
Release Date => February 14 2009

குறிப்பு: டெபியானை நிறுவுதலில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.இந்த கோப்பினை பற்றிய உங்களினுடைய கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Mar 17, 2010

உபுண்டு 10.04 -இன் கொள்ளை கொள்ளும் அழகு

New Gtk Theme

New Gtk theme

ubuntu 10.4 splash screen
இந்த படங்கள் நான் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது பார்த்தது.என் மனதிற்கு பிடித்து இருந்தது.ஆகையால் இதை பதிவு செய்கிறேன்.

மேலும் தெரிந்து கொள்ள :
இங்கு சொடுக்கவும்

Mar 15, 2010

லினக்சும்,லினக்ஸ் வன்வட்டினுடைய(Hard Disk) partition களுக்கு பெயர் சூடும் முறையும்

லினக்ஸ் இயங்குதளங்களை பயன்படுத்துபவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல் லினக்ஸ் வன்வட்டினுடைய partition களுக்கு எப்படி பெயரிடுகிறது என்று.கணினியில் அனைத்து device களை பற்றிய தகவல்களும் /dev என்ற அடைவினுள் இருக்கும்.லினக்ஸ் இயங்குதளம் வன்வட்டினுடைய partition களுக்கு இவ்வாறு பெயர் கொடுத்து இருக்கும்.
IDE connector உடன் கூடிய வன்வட்டாக இருந்தால்:
உதாரணமாக:
/dev/hda1
/dev/hda2
/dev/hdb1
/dev/hdb3
SATA connector உடன் கூடிய வன்வட்டாக இருந்தால்:
உதாரணமாக:
/dev/sda1
/dev/sda2
இவ்வாறு பெயரிட்டு இருக்கும்.

இதை எவ்வாறு இடுகிறது என்று பார்ப்போம்
இரண்டு படி நிலைகளில் இடுகிறது
1.கணினியில் உங்களினுடைய வன்வட்டு (Hard Disk) எப்படி இணைக்கப்பட்டுள்ளது (IDE or SATA)
2.வன்வட்டில் உள்ள partition , primary partition யனா அல்லது logical partition யனா என்பதை பொறுத்து
-----------------------------------------------------------------------------------------------
1.கணினியில் உங்களினுடைய வன்வட்டு (Hard Disk) எப்படி இணைக்கப்பட்டுள்ளது (IDE connector -ல் இருந்தால்)
வன்வட்டு ----------- லினக்ஸ் கொடுக்கும் பெயர்
Primary Master ------> hda
Primary Slave ------> hdb
Secondary Master------> hdc
Secondary Slave ------> hdd

SATA connector -ல் இருந்தால் sda,sdb என்று குறிக்கும்.
------------------------------------------------------------------------------------------------
2.வன்வட்டில் உள்ள partition , primary partition யனா அல்லது logical partition யனா என்பதை பொறுத்து
உதாரணமாக இவ்வாறு எடுத்துக்கொள்வோம் உங்களினுடைய வன்வட்டு (IDE) Primary Master ஆக இணைத்து இருந்து நீங்கள் விண்டோஸ் இயங்குதளம் நிறுவியிருந்து வன்வட்டை C: ,D:, E:, F: என பிரித்து இருந்தால் (விண்டோஸ் இயங்குதளம் எப்பொழுதுமே C: ஐ primary partition ஆகவும் மற்ற D:, E:, F:, போன்றவைகளை logical partition ஆகவும் உருவாக்கும்)லினக்ஸ் இயங்குதளமானது கீழ்கண்டவாறு பெயரிட்டு இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------
விண்டோஸ் இயங்குதளத்தில்--------> லினக்ஸ் இயங்குதளத்தில்
-----------------------------------------------------------------------------------------------
C: ---------> /dev/hda1
D: ---------> /dev/hda5
E: ---------> /dev/hda6
F: ---------> /dev/hda7

இதை கவனித்து பார்த்திகளேயானால் /dev/hda1 றிற்கு பிறகு /dev/hda5, /dev/hda6, /dev/hda7 என்று பெயரிட்டு இருக்கும்.காரணம் ஒரு வன்வட்டில் நான்கு primary partition களை நாம் உருவாகிகொள்ள முடியும்.விண்டோஸ் இயங்குதளத்தில் C: மட்டுமே Primary Partition அத்துடன் விண்டோஸ் இயங்குதளத்தினால் ஒரேயொரு Primary Partition ஐ மட்டுமே உருவாக்கிக்கொள்ள முடியும்,லினக்ஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தும் fdisk , Gparted ,pdisk கருவிகளின் மூலம் நான்கு Primary Partition களை உருவாக்கிக்கொள்ள முடியம்.நான்கு Primary Partition கள் இருந்தால் /dev/hda1 யைத்தொடர்ந்து /dev/had2, /dev/hda3, /dev/hda4 என்று பெயரிட்டு இருக்கும்.

Mar 13, 2010

லினக்சில் பூட் லோடார்கள் (Boot Loader) -(2)

படம் -1
படம் -2

நான் முந்தைய பதிவில் GRUB பூட் லோடாரை பற்றி எழுதியிருந்தேன் .அதன் தொடர்ச்சியினை இந்த பதிவில் இடுகிறேன்.
GRUB பூட் லோடாரானது மூன்று நிலைகளில் செயல்படுகிறது அவை:
  • stage 1
  • stage 2
  • stage 1.5
stage 1 :
பூட் லோடாரினுடைய code ஐ இயக்க தொடங்கும்.பூட் லோடாரானது அடுத்த நிலைக்கு செல்லும்(நிலையின் முகவரிக்கு தாவிவிடும்)(செக்டர் எண்)).இந்த செக்டர் எண்ணை GRUB ஆனது குறிப்பிட்ட முகவரியில் GRUB ஐ நிறுவும் போதே பதிந்து வைத்திருக்கும்.வழக்கமாக stage 1.5 யினை குறிப்பிட்டு இருக்கும்.
stage 1.5:
இந்த நிலையில் வன்வட்டில் ஒரு cylinder க்கு எத்தனை செக்டர்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும்.அதிகபட்சமாக ஒரு cylinder க்கு 63 செக்டர்கள் இருக்கும்(பார்க்க படம்-இரண்டு).Master Boot Record(MBR) நிறுவியபிறகு 62 செக்டர்கள் free ஆக இருக்கும்.இந்த free ஆக இருக்கும் இடத்தில் ஒவ்வொரு partition னும் என்ன FileSystem களை கொண்டு உள்ளன என்ற தகவல் இருக்கும்.(பார்க்க படம்-ஒன்று).stage 2 வினை execute செய்யும்.
stage 2:
இந்த நிலையில் GRUB னுடைய configuration கோப்புகள் point செய்யப்படும்.ஒரு சில படிகளை கடந்த பிறகு பயனாளருக்கு இயங்கு தளங்களை தேர்வு செய்யும் திரை காண்பிக்கப்படும்.
இதை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட முகவரிகளுக்கு செல்லவும்:
http://www.dedoimedo.com/computers/grub.html#mozTocId616834
http://en.wikipedia.org/wiki/GNU_GRUB
http://www.gnu.org/software/grub/manual/grub.html

Mar 12, 2010

லினக்சில் பூட் லோடார்கள் (Boot Loader) - (1)

லினக்சில் பொதுவாக இரண்டு boot loader - கள் பயன்படுத்தப்படுகிறது.அவை
  • LILO -> LInux LOder

  • GRUB -> GRand Unified Bootloader


இதில் GRUB பூட் லோடரை கொண்டே பெரும்பான்மையான லினக்ஸ் இயங்குதளங்கள் வெளியிடப்படுகின்றன.ஏனென்றால் LILO லோடருக்கும் , GRUB பூட் லோடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.அவை
LILO லோடரானது 16 வித்தியாசமான booting தேர்வினை மட்டுமே ஆதரிக்கும்.ஆனால் GRUB பூட் லோடரானது அளவில்லாத பூட்டிங் தேர்வினை ஆதரிக்கும்.
LILO பூட் லோடாரால் network -ல் இருந்து பூட் செய்ய முடியாது.GRUB பூட் லோடாரால் network -ல் இருந்து பூட் செய்ய முடியும்.
நீங்கள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை இரட்டை நிறுவலாக நிருவியிருந்திர்கள் என்றால் கணினியினை தொடங்கியவுடன் விண்டோஸ் இயங்குதள த்திற்குள் செல்லவா அல்லது லினக்ஸ் இயங்கு தளத்திற்குள் செல்லவா என்று உங்களினுடைய தேர்விற்காக ஒரு திரை காண்பிக்கப்படுகிறது அல்லவா அதுதான் GRUB பூட் லோடாரினுடைய திரை.

GRUB பூட் லோடார் எப்படி வேலை செய்கிறது:
GRUB பூட் லோடார் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்பதற்கு முன்பு பூட் லோடார் ப்ரோக்ராம்கள் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.நீங்கள் கணினியினை ஆண் செய்து பூட் ஆகியவுடன் BIOS ஆனது கணிணியினுடைய கட்டுப்பாட்டினை முதல் பூட் device ற்கு கொடுத்து விடும்.முதல் பூட் device ஆனது வன்வட்டு,குறுவட்டு,பிளாப்பி போன்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.நாம் இங்கு வன்வட்டினையே கவனத்தில் எடுத்துக்கொள்வோம்.வன் வட்டினுடையா முதல் செக்டர் ஆனது Master Boot Record (MBR) என்று அழைக்கப்படும்.இந்த முதல் செக்டர் ஆனது 512 bytes அளவு மட்டுமே இருக்கும்.அதில் 446 bytes ஆனது boot loder -க்கும் 64 bytes ஆனது partition table -க்கும் , 2 bytes ஆனது Signature க்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்த 512 bytes அளவில் தான் GRUB பூட் லோடாரானது பதியப்படும்.

--------அடுத்த பதிவில் மீதமுள்ளவற்றை பார்ப்போம்--------

Mar 4, 2010

லினக்ஸ் இயங்குதளங்கள் வைரஸால் (நச்சு நிரல்களால்) பாதிப்படையாமல் இருப்பதற்கான காரணங்கள்

  1. பயனாளர் அனுமதிகள்
  2. Internet Explorer போன்ற மோசமான இணைய உலாவி இல்லாதது
  3. Registry இல்லாமல் இருப்பது
  4. Excutables கோப்புகள் இல்லாமல் இருப்பது.

விண்டோஸ் இயங்கு தளத்தை விட லினக்ஸ் ஏன் சிறந்தது ?

  • லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும்.இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • வைரஸ் (நச்சு நிரல்கள்) பிரச்சனைகள் கிடையாது.மைக்ரோசாப்ட்நிறுவனத்தினுடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ்தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.
  • விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்சில் கிடையாது.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது .
  • லினக்ஸ் இயங்குதளத்தின் கோப்பு நிர்வாகம் மிகவும் வலிமையாகஉள்ளது.அதனால் லினக்ஸ் இயங்குதளத்தில் Defragmentation செய்ய வேண்டியஅவசியமில்லை.
  • புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியினை மறுதொடக்கம் செய்யவேண்டிய அவசியமில்லை.
  • லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் Lincense பற்றி கவலைப்படத் தேவையில்லை.
  • லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்ப்பட்ட File System (FAT32,NTFS,EXT3,EXT4,EXT2,VFAT etc...) படிக்க முடியும்.விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System (FAT,NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும்.
  • விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition - ல் மட்டுமே நிறுவ முடியும்.லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition - லும் நிறுவமுடியும்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் PDA,CELL PHONES , SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது.
  • லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகும்.
  • லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம் (Live CD) .
  • லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization (XEN/KVM/VirtualBox/etc..) மென்பொருள்களுடன் வருகிறது.இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • லினக்சினுடைய kernel நிறைய வன்பொருள்களுக்கான Drivers களுடன் வெளியிடப்படுகிறது.ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது.உங்களுடைய மொழியில் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது.

Mar 2, 2010

உபுண்டு லினக்சை நிறுவுவது எப்படி நான் உருவாக்கியுள்ள PDF வடிவிலான கோப்பு

எனக்கு தெரிந்த,எட்டிய அறிவினை வைத்து உபுண்டு லினக்சை நிறுவுவது எப்படி என்று தமிழில் PDF கோப்பாக உருவாக்கியுள்ளேன்.இந்த PDF கோப்பினை படிக்க,தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள் .

கோப்பில் தவறுகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.இந்த கோப்பினை பற்றிய கருத்துக்களை நீங்கள் தயங்காமல் தெரிவிக்கவும்.

Mar 1, 2010

டெர்மினல் மூலம் ஒரு Process னுடைய Process Id ஐ கண்டுபிடிப்பது எப்படி

டெர்மினல் சென்று pidof [process name] கொடுத்து Enter key அழுத்தவும்.
உதாரணமாக
firefox ற்கு pid -process id கண்டுபிடிக்க வேண்டுமானால் கட்டளையை இவ்வாறு அமைக்கலாம்.

$pidof firefox
7916
இந்த கட்டளையின் வெளியீடாக ப்ராசெஸ் எண் காண்பிக்கப்படும்.