Mar 10, 2014

VirtualBox இல் Windows7 இயங்குதளம் நிறுவுதல் - பகுதி-2

VirtualBox தொடர்பாக ஏற்கனவே இரண்டு பதிவுகளை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவை பதிவு செய்கிறேன். இந்த பதிவை படிப்பதற்கு முன், நான் ஏற்கனவே எழுதிய இரண்டு பதிவுகளையும் அவசியம் படித்து விடவும். அதற்கான சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


VirtualBox ற்குள் விண்டோஸ் 7 இயங்குதளத்தை நிறுவுதல் பற்றி இங்கு காண்போம்.








Base Memory Size ஐ பொறுத்தவரையில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கணினியில் இருக்கக்கூடிய RAM(முதன்மை நினைவகம்) இன் அளவைப் பொறுத்து இங்கு கொடுக்கப்படும் மதிப்புகள் மாறுபடும். உதாரணமாக என்னுடைய மடிக்கணினியில் 2GB RAM உள்ளது. உபுண்டு இயங்குதளத்திற்கு 1GB போதுமானது என்பதால், VirtualBox ற்குள் நிறுவப்போகும் விண்டோஸ் இயங்குதளத்திற்கு 984 MB ஐ Base Memory Size ஆக கொடுத்துள்ளேன். உங்கள் கணினியில் 3GB, 4GB என RAM இருந்தால் நீங்கள் தாராளமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கு 2GB கொடுத்துக்கொள்ளலாம்.  பொதுவாக பச்சை வண்ணத்தின் எல்லையை மீறி கொடுக்க வேண்டாம். அதுதான் உங்களது கணினிக்கு பரிந்துரைக்கப்படும் Base Memory Size இன் அளவு. அதாவது RAM Size. கொடுத்து விட்டு Next Button அழுத்தவும்.


இதில் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. ஏற்கனவே ஒரு கணினியில் இருக்கும் VirtualBox இன் Hard Disk இதில் பயன்படுத்துவதாக இருந்தால் Use existing hard disk என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த தேர்வின் மூலம் உங்கள் நண்பரினுடைய கணினியில் இருக்கும் Windows7 இயங்குதளத்தில் Virtual Disk Image ஐ பிரதி எடுத்து வந்து உங்களுடைய Virtual Box ற்குள் அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு நாம் புதிதாக நிறுவ இருப்பதலால், Create new hard disk Option ஐ தேர்வு செய்துள்ளோம். Create new hard disk என்பதை தேர்வு செய்த பிறகு Next Button ஐ அழுத்தவும்.



Storage Details என்பதற்கு கீழே Dynamically allocated, Fixed size என இரண்டு தேர்வுகள் உள்ளது. Dynamically Allocated என்பதை தேர்வு செய்வதன் மூலம் Hard Disk இல் இடத்தை சேமிக்கலாம். உதாரணமாக நாம் உருவாக்கப் போகும் Windows7 க்கான Hard Disk ற்கு 10 GB கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். 10GB யில் விண்டோஸ்7 இயங்குதளமானது 6GB ஐத்தான் பயன்படுத்துகிறது எனில், மீதமுள்ள 4GB அளவினை விண்டோஸ்7 இயங்குதளம் பயன்படுத்தாதவரையில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு தேவைப்படும் போது அது பயன்படுத்திக்கொள்ளும். யார் முந்தியோ அவர்களுக்கு அந்த இடம். Fixed size என்பதை தேர்வு செய்தால் ஒதுக்கப்பட்ட இடம் முழுவதையும் Virtual Box பயன்படுத்திக் கொள்ளும். தேர்வு செய்தபின் Next Button ஐ அழுத்தவும்.


Virtual Disk எங்கு சேமிக்கப்பட வேண்டும் மற்றும் அதற்கான அளவுகள் போன்றவற்றை இங்கு கொடுக்க வேண்டும். Size என்பதன் கீழ் இருக்கும் Slider ஐ இழுப்பதன் மூலம் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். அளவுகளை கொடுத்த பின் Next Button ஐ அழுத்தவும்.


Create Button ஐ அழுத்தவும்.


Create Button ஐ அழுத்தவும்.


Summary பக்கத்தில் உள்ள Create Button ஐ அழுத்திய பிறகு மேற்காணும் திரை போல உங்களுக்கு கிடைக்கும். இந்த திரை கிடைத்து விட்டால், நீங்கள் Virtual Box இல் இயங்கக்கூடிய Windows 7 Machine ஐ வெற்றிகரமாக உருவாக்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

Machine ஐ உருவாக்கியாச்சு. அடுத்து நாம் செய்ய வேண்டியது, இயங்குதளத்தை நிறுவ வேண்டும். அதற்கு Boot Sequence, Boot Device போன்றவைகளை நாம் தயார் செய்ய வேண்டும். அதன்பின் அவைகளை Configure செய்ய வேண்டும். Virtual Box ஐ பொறுத்தமட்டிலே இரண்டு வழிகளிலே விண்டோஸ் 7 இயங்குதளத்தை நிறுவலாம். இயங்குதளத்தை நீங்கள் எதில் வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து Configure செய்வதில் மாற்றம் இருக்கும். CD/DVD களில் வைத்திருந்தால் அதிலிருந்து நீங்கள் நேரடியாக Boot செய்துகொள்ளலாம். ISO கோப்பாக வைத்திருந்தால் ISO கோப்பிலிருந்து நேரடியாக Boot செய்து கொள்ளலாம்.

நான் விண்டோஸ் 7 இயங்குதளத்தை ISO கோப்பு வடிவில் வைத்திருப்பதால், இங்கு அது தொடர்பான செய்திகளை விளக்கி இருக்கிறேன்.

Virtual Box இல் Windows 7 Settings க்குச் சென்று, Storage என்பதை Click செய்யவும். அதில் வலது புறமாக Storage Tree என்பதற்கு கீழ் இருக்கும் IDE Controller என்பதில் அதன் கீழ் இருக்கும், Empty என்பதை Click செய்யவும்.



Attributes என்பதன் கீழ் இருக்கும் CD/DVD Drive: என்பதற்கு நேரில் அமைந்திருக்கும் வட்டு போன்ற Icon இல் ஒரு கீழ் நோக்கிய முக்கோண வடிவ குறியீடு இருக்கும். அதை Click செய்யவும். அதில் Choose Virtual CD/DVD disk file என்பதை Click செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் திரையில் மூலம் உங்களது Windows7 ISO கோப்பினை தேர்வு செய்யவும். தேர்வு செய்த பின் Open Button ஐ அழுத்தவும்.


அடுத்ததாக windows 7 -settings இன் திரையின் Ok Button ஐ அழுத்தவும்.




அதன்பின் முதன்மைத்திரைத் தெரியும் அதில் Windows 7 ஐ அழுத்தி அதன்பின் Start Button ஐ அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களது Windows 7 Virtual Machine boot ஆக ஆரம்பிக்கும். அதன்பின் நீங்கள் எப்பொழுதும் போல விண்டோஸ் 7 இயங்குதளத்தை எப்படி நிறுவ வேண்டுமோ அதுபோல நிறுவிக்கொள்ளலாம்.










இது தொடர்பாக எந்தவிதமான சந்தேகம் இருந்தாலும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் அல்லது மின்னஞ்சல் செய்யுங்கள். என்னால் இயன்றவரையில் சந்தேகங்கங்களுக்கு பதிலளிக்கிறேன். யாரும் தயக்கம் கொள்ள வேண்டாம்!

3 comments:

fosstamil said...

Very interesting article. I have found some error on some snapshot which you have uploaded. The the error message is "No optimal settings detected". Please explain error message with solution.

fosstamil said...

Very interesting article. I have found some error on some snapshot which you have uploaded. The the error message is "No optimal settings detected". Please explain error message with solution.

இரா.கதிர்வேல் said...

நன்றி fosstamil.