ஓராண்டு காலமாக நான் Kubuntu இயங்குதளத்தை பயன்படுத்தி வருகிறேன். Gnome சூழலை விட KDE சூழலே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று customization. கேடீஇ சூழலை நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படி customize(தனிப்பயனாக்கலாம்) செய்து கொள்ளலாம்.
லினக்ஸ் இயங்குதளங்களில் குறிப்பிடத்தக்க சூழல்கள் Gnome, KDE, XFCE, LXDE. இந்த நான்கு சூழல்களிலும் நான் லினக்ஸை பயன்படுத்தியிருக்கிறேன். இறுதியில் என்னை கவர்ந்துள்ளது KDE தான்.
லினக்ஸ் இயங்குதளங்களில் குறிப்பிடத்தக்க சூழல்கள் Gnome, KDE, XFCE, LXDE. இந்த நான்கு சூழல்களிலும் நான் லினக்ஸை பயன்படுத்தியிருக்கிறேன். இறுதியில் என்னை கவர்ந்துள்ளது KDE தான்.
உபுண்டு இயங்குதளத்திற்கான KDE சூழல் KUbuntu(KDE + Ubuntu) எனும் பெயரில் கிடைக்கிறது. நன்றாக இருக்கிறது. அண்மையில் இணையத்தில் உலாவியபோது KDE குழுவினர் தனியாக KDE neon எனும் பெயரில் இயங்குதளம் வெளியிட்டு இருப்பதாக அறிந்தேன். KDE குழுவினரின் மேம்படுத்துதல் உடனுக்குடன் அதில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் அது Ubuntu வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
KDE neon வெளியீடுகளை உபுண்டுவின் LTS பதிப்பை அடிப்படையாக வைத்து வெளியிடுகிறார்கள். KDE neon 2019 ஆண்டிற்கான வெளியீட்டை உபுண்டு 18.04 LTS பதிப்பை அடிப்படையாக வைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
லினக்ஸ் ஆரம்பநிலை பயனர்களைவிட, ஓரளவிற்கு லினக்ஸை பயன்படுத்தியவர்களுக்கு மிகவும் ஏற்ற இயங்குதளம் KDE neon. என்னுடைய தேவைகளை அனைத்தையும் KDE neon இல் செய்ய முடிகிறது.

- தமிழ் எழுத்துருக்கள் மிகவும் அற்புதமாக தோற்றமளிக்கிறது.
- IBus உதவியுடன் தமிழ்99 முறையில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது.
- பிழைச்செய்திகள் தோன்றுவதில்லை.
- உறுதியாகவும், நிலையாகவும் இருக்கிறது.
- KDE இன் மேம்படுத்துதல்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன.
தரவிறக்கம் செய்ய KDE neon தளத்திற்குச் செல்லவும். Developer Edition, User Edition என்று இரண்டு விதமாக கிடைக்கிறது. தொடர்ந்து பயன்படுத்த விரும்புவர்கள் User Edition ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
KDE neon பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு FAQ பகுதியில் பதில்சொல்லியிருக்கிறார்கள்.
3 comments:
நாம் தட்டச்சு பயிலகத்தில் தட்டச்சு பயில, தட்டச்சு இயந்திரம் தமிழில் இருந்தாலும் நாம் கணினியில் ஆங்கில எழுத்துக்களையே தட்ட வேண்டியுள்ளதையே ??
உண்மைதான் சிவா. ஆங்கில தட்டச்சை முறையாக பயின்று விட்டு தமிழ்99 முறையில் எளிமையாக தட்டச்சு செய்யலாம். கணினியின் தட்டச்சு ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழ் தட்டச்சு செய்வதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
கருத்திட்டமைக்கு நன்றி..
Post a Comment