Feb 11, 2017

TP-LINK WN823N WiFi USB Adapter

சென்னையில் எங்கள் அறையில் ACT நிறுவனத்தின் இணைய இணைப்பு கொடுத்திருக்கிறோம். அவர்கள் இணைப்பு கொடுத்த போது RJ45 LAN Connector மட்டும் கொடுத்தனர். அதனைக்கொண்டு ஒரு கணினியில் மட்டும்தான் இணையத்தை பயன்படுத்த முடியும். எங்கள் அறையில் ஐந்து பேர் இருக்கிறோம். அனைவரிடமும் மடிக்கணினி, திறன்பேசி இருக்கிறது. எப்படி சமாளிப்பது? ஆகையால் WiFi Router வாங்கினோம். RJ45 LAN Connector ஐ WiFi router இல் இணைத்தோம். பிரச்சனை முடிந்தது ஆனால் என்னால் இணையத்தை பயன்படுத்த முடியவில்லை. என்னுடைய மடிக்கணினியில் WiFi வசதி இல்லை. ஆகையால் ஒரு USB WiFi Adapter வாங்கலாம் என முடிவு செய்தேன்.

நான் விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்துவதில் ஆகையால் கணினி தொடர்பாக எது வாங்கினாலும் அது உபுண்டுவில் வேலை செய்யுமா என உறுதிசெய்துவிட்டே வாங்குவேன். அப்படித்தான் WiFi Adapter -க்கும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். TP-LINK WN823N மாடல் உபுண்டுவில் நன்கு வேலே செய்வதாக கூறியிருந்தார்கள். அதை Amazon தளத்தின் மூலமாக வாங்கினேன். அந்த தளத்திலும் உபுண்டு 16.04 LTS உடன் இது நன்கு வேலை செய்யும் என போட்டிருந்தனர். 

ஓரிரு நாட்களில் கைக்கு அது கிடைத்தது. கிடைத்த அடுத்த நிமிடமே என்னுடைய உபுண்டு 14.04 LTS இல் இணைத்துப் பார்த்தேன் வேலை செய்யவில்லை. அப்போதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. இது லினக்ஸில் வேலை செய்யாது என நினைத்துக்கொண்டேன். ஒருவேளை 16.04 LTS இல் வேலை செய்யலாம் என நினைத்து 16.04 இல் இணைத்துப் பார்த்தேன் அதிலும் வேலை செய்யவில்லை. இதை நினைத்து ஒரு பக்கம் கோபமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இதை எப்படியாவது உபுண்டுவில் வேலை செய்ய வைத்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அன்று முழுவதும் இது தொடர்பாக இணையத்தில் தேடினேன். ஒருவழியாக தீர்வு கிடைத்தது.

இந்த இணைப்பில் வழிமுறைகள் உள்ளது.

TP-LINK WN823N-க்குத் தேவையான driver ஐ உபுண்டுவில் நிறுவ

sudo apt-get update
sudo add-apt-repository ppa:hanipouspilot/rtlwifi
sudo apt-get update
sudo apt install rtl8192eu-dkms

மேற்கண்ட  package இன் நிறுவுதல் முடிந்தவுடன் கணினியை மறுதொடக்கம்(restart) செய்துவிட்டு உள்நுழைந்தால். அற்புதமாக WiFi குச்சி வேலை செய்தது.




உபுண்டு 16.04 -க்கு WiFi குச்சி வாங்க வேண்டும் என நினைத்தால் TP-LINK WN823N குச்சியை வாங்கலாம். நான்கு வேலை செய்கிறது. Amazon-இல் வாங்க இங்கு செல்லவும்.

2 comments:

Anonymous said...























It is very happy to note that you are continuously writing in your blog about linux.so many bloggers discontinued their blogs even during 2009,10,11,and 12. i congratulate your efforts and wish you all the best. keep it up. Namadevan from Dindigul.





இரா.கதிர்வேல் said...

நன்றி சார். உங்களைப் போன்ற சான்றோர்களின் ஊக்கம்தான் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. லினக்ஸ் தொடர்பானவற்றை தமிழில் முடிந்தளவு ஆவணப்படுத்துவோம்.