Feb 12, 2016

Ubuntu 14.04 LTS live USB boot error (gfxboot.c32)

மேட்டூரிலிருந்து நண்பர் நா.செல்வகுமார் உபுண்டுவில் VLC media player ஐ நிறுவுவது எப்படி? என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார். நான் உடனே sudo apt-get update அதன் பிறகு sudo apt-get install vlc ஆகிய கட்டளை வரிகளை முனையத்தில் கொடுங்க, அதுவே இணையத்திலிருந்து நிறுவிக்கொள்ளும் எனச் சொல்லி இந்த இரண்டு கட்டளைவரிகளையும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தேன்.

செல்வகுமார் உடனே முனையத்தைத் திறந்து sudo apt-get update கட்டளையை இயக்கியிருக்கிறார் அவருக்கு W: Failed to fetch * என்ற செய்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது. உடனே என்னை மறுபடியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரத்தைச் சொன்னார். நான் உடனே, சார் நீங்க உபுண்டு என்ன பதிப்பு நிறுவியிருக்கீங்க? என்று கேட்டேன். Ubuntu 14.10 என்று கூறினார். சார் Ubuntu 14.10 என்பது End of life version(support நிறுத்தப்பட்டுவிட்டது). ஆகையால் நீங்கள் Ubuntu 14.04 LTS பதிப்பை தரவிறக்கம் செய்து நிறுவுங்கள் பிரச்சனை சரியாகிவிடும் என கூறினேன். அவருடைய மின்னஞ்சல் முகவரிக்கு torrent கோப்பினை அனுப்பி வைத்தேன்.

தரவிறக்கம் செய்து விட்டு ஒரு நாள் கழித்து இன்றைக்கு மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். சார் தரவிறக்கம் பண்ணிட்டேன் பென்டிரைவ் மூலமாக நிறுவுவது எப்படி? என்று கேட்டார். ஏற்கனவே தாங்கள் வைத்திருக்கும் உபுண்டு 14.10 இல் Startup Disk Creator எனும் மென்பொருள் மூலமாக பென்டிரைவை bootable ஆக மாற்றிவிட்டு உபுண்டு 14.04 LTS நிறுவிக்கொள்ளலாம் எனச் சொன்னேன். உடனே பென்டிரைவை bootable மாற்றிவிட்டு BIOS இல் boot device selection option மூலமாக பென்டிரைவை தேர்வு செய்து கொடுத்த போது பிழைச்செய்தி வருவதாகக் கூறினார். அதைப் படம் பிடித்து மின்னஞ்சல் செய்து வைக்கச் சொன்னேன். உடனே அனுப்பி வைத்தார் பிழைச் செய்தி கீழே உள்ள படத்தில் இருக்கிறது.


இதற்கு தீர்வு என்னவென்றால் boot: என்று வந்து நிற்குமிடத்தில் live என தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்த வேண்டியதுதான். முடிந்தது வேலை இப்போது உபுண்டுவின் live desktop வந்து விடும் அதன்பின்பு Install Ubuntu 14.04 LTS என்று Desktop இல் இருப்பதைச் சொடுக்கி நிறுவுதலை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

நன்றி செல்வகுமார்

References:

4 comments:

Sankaraaa said...

பயனுள்ள கருத்துக்கள் கதிர்வேலன் அண்ணா..நானும் லினக்ஸ்-ஐ தமிழில் எழுதி வருகிறேன்..உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்..
என் வலைப்பூ:shankar.Slashprog.com
ஏதேனும் கேள்விகளுக்கு உங்களை அணுகலாமா?

Siva said...

Continuous follow up and good solution

இரா.கதிர்வேல் said...

வாழ்த்துகள் சங்கர மகாதேவன். தொடர்ந்து பணியாற்றுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து தமிழையும், லினக்ஸையும் வளர்த்தெடுப்போம். லினக்ஸ் தொடர்பான எந்த கேள்விகளாக இருந்தாலும் என்னை நீங்கள் தாராளமாக எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். என்னுடைய மின்னஞ்சல் முகவரி linuxkathirvel.info@gmail.com தொடர்பு கொள்ளுங்கள்.

இரா.கதிர்வேல் said...

நன்றி சிவா.