பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் செல்வதற்காக பேருந்து முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. இருக்கைகள் ஏதேனும் காலியாக இருக்கின்றதா என்று பார்ப்போம்? என்பதற்காக http://tnstc.in/ தளத்தில் பயனர் பெயரையும்(login name), கடவுச்சொல்லையும்(password) உள்ளிட்டேன். பயனர் பெயர் அல்லது கடவுச்சொல் தவறாக இருக்கலாம் எனச்சொல்லிவிட்டது. ஏதாவது விழாக்காலங்களில்தான் முன்பதிவு செய்து ஊருக்குச் செல்வேன். மற்ற நாட்களில் கோயம்பேடு சென்றால் நேராக பேராவூரணிக்கு செல்லும் பேருந்து இருக்கும் அதிலேயே சென்றுவிடுவேன். இதை எதுக்குச் சொல்ல வருகிறேன் என்றால் எப்போதாவது விழாக்காலங்களில்தான் நாம http://tnstc.in/ இணையதளத்துக்குச் செல்கிறோம். நீண்ட நாட்களுக்கு ஒருமுறைதான் பயன்படுத்துவதால் என்ன கடவுச்சொல் கொடுத்தோம் என்று நமக்கு ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது அதான் பிரச்சனை. அப்புறம் வேற வழி இல்லேயே. எப்போதும் போல Forgot Password தேர்வினை பயன்படுத்தி கடவுச்சொல்லை reset செய்தேன். புதிய கடவுச்சொல் எனக்கு மின்னஞ்சலில் வந்து சேர்ந்தது மகிழ்ச்சியடைந்தேன். புதியக் கடவுச்சொல்லைப் பயனபடுத்தி உள்நுழைந்தேன். கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து விடுகிறோம், இனிமேலாவது நன்கு நினைவில் இருப்பது போன்ற ஒரு கடவுச்சொல்லை அமைத்து விடுவோம் என நினைத்து change password தேர்வினைச் சொடுக்கி. பழைய மற்றும் புதிய கடவுச்சொல் ஆகியவைகளை உள்ளிட்டேன்.
இங்கேதான் பிரச்சனையும், பிழையும் ஆரம்பமானது. Current Password, New Password, Confirm New Password இவைகளை உள்ளீடு செய்து Change Password கொடுத்தால், "New Password and Confirm-New Password are not matching" என்ற பிழைச்செய்திதான் கிடைத்தது.
காரணம் என்னவென்றால், New Password மற்றும் Confirm New Password இல் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் போது, New Password க்கான textbox இல் 25 character வரை உள்ளீடு செய்ய முடிகிறது. ஆனால் Confirm New Password க்கான textbox இல் 12 character வரை மட்டுமே உள்ளீடு செய்ய முடிகிறது. நான் கொடுத்த கடவுச்சொல் 13 எழுத்துக்களை கொண்டிருந்ததால் Confirm New Password Textbox 12 எழுத்துக்களை மட்டுமே எடுத்துக்கொண்டது. New Password Textbox இல் 13 எழுத்தக்களையும்(இதில்தான் 25 எழுத்துக்கள் வரை கொடுக்க முடியுமே அதனால் பிரச்சனையில்லை), Confirm New Password Textbox இல் 12 எழுத்துக்களையும் மட்டுமே எடுத்துக்கொண்டது. இரண்டு Textbox களுக்கிடையில் ஒரு எழுத்து வித்தியாசப்பட்டதால் "New Password and Confirm-New Password are not matching" என்ற பிழைச்செய்தி கிடைத்துக்கொண்டிருந்தது.
இதை சரிசெய்வது எப்படி?
எனது நண்பர் பிரபாகரனிடம் இதைப் பற்றி சொன்னபோது அவர், Mozilla Firefox உலாவியில் F12 பொத்தானை அழுத்தி Inspect Element தேர்வின் மூலமாக சரிசெய்யலாம் எனக்கூறினார். நான் உடனே Change Password பக்கத்திற்குச் சென்ற பிறகு Inspect Element கொடுத்து Confirm New Password Textbox களை கண்டுபிடித்து அதனுடைய maxlength property யில் 25 எனக்கொடுத்து Enter key யை அழுத்தினேன் இப்போது Confirm New Password Textbox 25 எழுத்துக்கள் வரை அனுமதித்தது. அதன்பின் என்னுடைய 13 எழுத்துக்களைக் கொண்ட புதிய கடவுச்சொலைக் கொடுத்து, கடவுச்சொல்லை மாற்றினேன். இந்த பிழை குறித்து commercial@tnstc.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பாரக்கவேண்டும்.
பிழையை சரிசெய்ய உதவிய நண்பர் ச.பிரபாகரனுக்கு நன்றி.
3 comments:
Without admin permission how it worked out sir?
We no need admin password to change the front end content. Password is need for server changes. If database field has limited length characters, it will not work.
Oh I see. Thanks for ur information sir
Post a Comment