இந்தியா முழுவதும் பள்ளிகளில் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களை பயன்படுத்த மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. இதை அமல்படுத்துவதில் மாநில பள்ளி கல்வி துறைக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேரள மாநில அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். கேரள பள்ளிகளில் ஒப்பன் சோர்ஸை் மென்பொருள்களை வெற்றிகரமாக பயன்படுத்து வருகின்றனர்.
மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை இங்கே.
தமிழகத்திலும் பல்வேறு அரசு துறைகளில் லினக்ஸ் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறுது. இனிமேல் கீழ்காணும் அலுவலகங்களுக்கு நீங்கள் சென்றால் அங்கு இருக்கும் கணினியின் திரையை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் அங்கு லினக்ஸ் ஒய்யாரமாக குந்தியிருக்கும்.
- மின்சார அலுவலகங்கள்
- அரசு மருத்துவமனைகள்
- ஆரம்ப சுகாதார நிலையங்கள்
- எல்.ஐ.சி அலுவலகம் (மத்திய நிறுவனம்)
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- எல்காட்
No comments:
Post a Comment