Sep 23, 2014

உபுண்டு 14.04 LTS இல் Joomla CMS ஐ நிறுவுதல்


Joomla என்பது ஒரு புகழ்வாய்ந்த Content Management System ஆகும். அதை எப்படி உபுண்டு இயங்குதளத்தில் நிறுவலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Joomla வை நிறுவுவதற்கு முன்பு உபுண்டுவில் LAMP முறைமை நிறுவியிருக்க வேண்டும். அடுத்ததாக உங்கள் உபுண்டு இயங்குதளத்தில் Joomla Package ஐ தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

Joomla வை நிறுவுவதற்கு முன்பு MySQL Database இல் Joomla விற்கென தனியாக ஒரு Database ஐ உருவாக்கிக் கொள்ளவும்.



joomladb, joomlauser ஆகிய இரண்டு பெயர்களுக்கு பதிலாக உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் கொடுத்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் Joomla Package ஐ /var/www/ அடைவிற்குள் Extract செய்து கொள்ளவும்.



Extract செய்த அடைவின் பெயரை உங்களுக்கு விருப்பமான பெயரில் மாற்றிக் கொள்ளவும். நான் joomla என மாற்றிக்கொண்டேன்.

அதன்பின் உங்களுக்கு விருப்பமான இணைய உலாவியினை திறந்து http://localhost/xxxxx என கொடுக்கவும். இங்கு xxxxx என்பது நீங்கள் /var/www/ அடைவிற்குள் Extract செய்த அடைவிற்கு கொடுத்த பெயர். நான் http://localhost/joomla என கொடுத்துக்கொண்டேன்.




Site Name என்பதில் உங்கள் தளத்தின் பெயரை கொடுக்கவும்.
Descripition என்பதில் உங்கள் தளத்தின் விபரத்தை கொடுக்கவும்.
Admin Email என்பதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.
Admin Username என்பதில் Admin பயனருடைய பெயரைக் கொடுக்கவும்.
Admin Password என்பதில் Admin பயனருக்கான கடவுச்சொல்லை கொடுக்கவும்.
Confirm Admin Password என்பதில் Admin பயனருக்கான கடவுச்சொல்லை திரும்பவும் கொடுக்கவும்.
Site Offline என்பதில் Yes என கொடுக்கவும்.
இவையனைத்தையும் கொடுத்த பிறகு Next Button ஐ அழுத்தவும்.

அடுத்ததாக Database ஐ அமைத்தல்




Database Type: MySQLi
Host Name: localhost
Username : root இங்கு நீங்கள் Joomla விற்கென தனியாக பயனர் பெயரை உருவாக்கியிருந்தால் அந்த பெயரை கொடுத்துக்கொள்ளலாம்.
Password: password
Database name: joomladb
Table Prefix: jir43_
Old Database Process: Remove என கொடுக்கவும். இவையனைத்தையும் கொடுத்துவிட்டு Next Button ஐ அழுத்தவும்.

FTP Configuration தேவையிருந்தால் மாற்றங்களை செய்துகொள்ளுங்கள். அடுத்து Next Button ஐ அழுத்துங்கள்.

Install Sample Data: என்பதில் Blog English (GB) Sample Data  என கொடுத்து Install Button ஐ அழுத்தவும்.





Congratulations! Joomla! in Now Installed. என வாழ்த்துச் செய்தி வந்த பின்பு joomla வின் முதன்மை அடைவிற்குள் இருக்கும் installation folder அடைவினை நீக்கிவிடவும். அதன்பின்பு Notice என்பதற்கு கீழ் காணப்படும் Configuration தகவல்களை copy செய்து முதன்மை அடைவிற்குள் configuration.php எனும் கோப்பை உருவாக்கி அதில் Paste செய்யவும். கோப்பினை சேமிக்கவும்.




இறுதியாக Joomla வின் User Dashboard க்குச் செல்ல, உங்களது இணைய உலாவியில் http://localhost/xxxxx என கொடுக்கவும். இங்கு xxxxx என்பது நீங்கள் /var/www/ அடைவிற்குள் joomla package ஐ  Extract செய்த போது அந்த அடைவிற்கு கொடுத்த பெயர். கொடுத்தவுடன் உங்களுக்கு Joomla வின் முதன்மைப் பக்கம் கிடைக்கும்.

நான் http://localhost/joomla என கொடுத்துள்ளேன்.



Sep 14, 2014

உபுண்டு 14.04 LTS இல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

குறிப்பு: கீழே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் அனைத்தும் Unity Environment இல் செய்யப்பட வேண்டியது. Gnome Classic Environment இல் இந்த வழிமுறைகள் வேலை செய்யாது. அதே நேரத்தில் Unity Environment இல் Configure செய்த பிறகு தமிழ் தட்டச்சை Gnome Classic Environment -லும் செய்து கொள்ளலாம்.

உபுண்டுவில் நான் அடிக்கடி செய்யும் முக்கியமான வேலைகளில் ஒன்று தமிழில் தட்டச்சு செய்தல். இன்றைக்கு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதும், தமிழைப் பயன்படுத்துவதும் அனைவரும் மகிழ்ச்சியடையும் விதத்தில் உள்ளது. விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும்தான் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். அதைவிட அருமையாக உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.

உபுண்டுவில் தமிழ் தட்டச்சு செய்வது தொடர்பாக ஏற்கனவே இங்கு பதிவிட்டுள்ளேன். அதுபோல என்னிடம் உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? என கேட்கும் நண்பர்களுக்கு, நான் அடிக்கடி பரிந்துரைக்கும் பதிவுகளில் ஒன்று மயூரன் அவர்கள்ளுடைய பதிவு. இந்த பதிவுகளையும் ஒரு முறை படித்துக் கொண்டால் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நான் தமிழ் 99 - தட்டச்சு முறையை பயன்படுத்துவதால் அதற்குரிய வழிமுறைகளை இங்கு கொடுத்துள்ளேன். ஒலியியல் முறையில் தட்டச்சு செய்பவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வழிமுறைகளை அமைத்துக் கொள்ளலாம்.

முனையத்தில்(Terminal) கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக இயக்கவும்.

sudo apt-get update
sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n

இந்த கட்டளை முழுவதுமாக இயங்கி முடிந்த பின் உபுண்டுவை ஒருமுறை Logout செய்துவிட்டு Login செய்யவும்.  அதன்பின், கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்.


System Settings க்குச் சென்று Text Entry என்பதை திறந்து கொள்ளவும். அடுத்ததாக,


'+' குறியீட்டை அழுத்தவும். அடுத்ததாக,


Tamil(tamil99(m17n)) தேர்வு செய்து Add Button ஐ அழுத்தவும். ஒலியியல் முறையில் தட்டச்சு செய்பவராக இருந்தால் Tamil(phonetic(m17n)) தேர்வு செய்து Add Button ஐ அழுத்தவும். அடுத்ததாக,


Switch to nexxt source using: என்பதற்கு கீழ் உள்ள Input Box ஐ Click செய்தவுடன் New Accelerator என்று வரும் அப்பொழுது Ctrl+Space Key களை ஒரு சேர அழுத்தவும். இது எதற்கு என்றால் தமிழில் தட்டச்சு செய்வதற்கான குறுக்குவழி விசை, இந்த விசையை பயன்படுத்தித்தான் நாம் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி தட்டச்சு செய்ய வேண்டும். இந்த குறுக்கு விசை பிடிக்கவில்லையென்றால் உங்களுக்கு பிடித்தமான விசையை அமைத்துக்கொள்ளலாம்.

அவ்வளவுதான் முடிந்தது வேலை. நீங்கள் அமைத்த குறுக்கு விசையைப் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்ய தொடங்கலாம்.