![]() |
Mac Theme தோற்றத்தில் Terminal(முனையம்) |
உபுண்டுவில் அடிக்கடி நமக்கு பிடித்தமான Theme களை மாற்றும் போது அந்த Theme க்கு ஏற்ப முனையத்தின் பின்புல நிறமும், அதிலுள்ள எழுத்துக்களின் நிறமும் மாறிவிடும். ஆனால் எனக்கு பிடித்தமான நிறம் உபுண்டுவுடன் இயல்பாகவே வரும் நிறம்தான்.
![]() |
உபுண்டுவின் இயல்பான தோற்றத்தில் Terminal(முனையம்) |
அண்மையில் உபுண்டு 14.04 இல் Mac Theme ஐ நிறுவினேன். மிகவும் அழகா இருந்தது. ஆனால் முனையத்தின் நிறத்தோற்றம் மட்டும் எனக்கு பிடிக்கவில்லை அதனால் Profile Preferences, Color க்குச் சென்று Custom என்பதைச் சொடுக்கி கீழ்காணும் Color Code ஐ உள்ளீடு செய்தேன். அவ்வளவுதான் முனையத்தின் பழைய தோற்றம் கிடைத்தது. RGB Code: (48, 10, 36) இந்த RGB Code ஐ இந்த தளத்திற்குச் பதினாறு அடிமான(Hexadecimal) எண்ணாக மாற்றினேன்.