Jun 12, 2014

OpenSSH மூலமாக இரண்டு உபுண்டு இயங்குதளங்களுக்கிடையே கோப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்

எனது மடிக்கணினியில்(Kubuntu 14.04 LTS) 50GB அளவிற்கு வீடியோக்கள் வைத்திருந்தேன் அந்த வீடியோக்கள் அனைத்தையும் எனது நண்பரினுடைய மேசைக்கணினியில் (Ubuntu 12.04.2 LTS) சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பென்டிரைவில் Copy செய்து மேசைக்கணினிக்கு கோப்பிகளை மாற்றுவது கொஞ்சம் நேரத்தை வீணடிக்கும் செயல் ஆகையால் LAN அமைப்பு மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளுமாறு வசதி செய்து விட்டால் நேரம் மிச்சமாகும் என யோசித்து செய்த ஏற்பாடுதான் இது. samba server மூலமாகவும் இதைச் செய்யலாம் இருந்தாலும் openssh முறை எனக்கு எளிமையாக தெரிந்தது. அண்ணனிடம் BSNL Broadband இணைப்பு இருந்தது அதற்காக வழங்கப்பட்ட மோடத்தில் நான்கு கணினிகள் வரை இணைத்துக்கொள்ளலாம். Modem ஆக செயல்படும் அந்த கருவி Switch ஆகவும் செயல்படும் ஆகையால் அதன் மூலமாக இரண்டு கணினிகளையும் இணைத்தேன். அதன்பின் என்னுடைய மடிக்கணினியில் openssh-server and openssh-client இரண்டு பொதிகளையும் நிறுவினேன்.


கோப்புகளை சேமிக்க வேண்டிய மேசைக்கணினியில் Nautilus File Manager ஐத் திறந்தேன். அதனுடைய Menubar இல் File => Connect to Server க்குச் சென்றேன்


அதன்பின் எனது மடிக்கணினியின் IP Address ஐ ifconfig கட்டளையின் உதவியுடன் தெரிந்துகொண்டேன்.


Connect to Server ஐ சொடுக்கியவுடன் அடுத்ததாக கிடைத்த Window வில்


Server Details என்பதில் கீழ்காணும் உள்ளீடுகளை கொடுத்தேன்
Server: 192.168.1.8
Port: 22
Type: SSH
Folder: /

User Details என்பதில் கீழ்காணும் உள்ளீடுகளை கொடுத்தேன்
User name: kathirvel
Password: எனது பயனர் கணக்கின் கடவுச்சொல்லை கொடுத்தேன்


மேற்காணும் தகவல்களை கொடுத்து Continue Button ஐ அழுத்தினேன். உடனடியாக எனது மடிக்கணினியின் Kubuntu வினுடைய root folder திறந்தது. பிரதியெடுக்க வேண்டிய வீடியோ உள்ள பார்ட்டிசியனை எனது மடிக்கணினியில் திறந்து கொண்டேன். அதன்பின் மேசைக்கணினியில் உள்ள Nautilus File Manager இல் SFTP on 192.168.1.8/media/kathirvel/LEARNING/ எனும் அடைவிற்குச் சென்று பிரதியெடுக்க வேண்டிய வீடியோ கோப்புகளை  மேசைக்கணினிக்கு பிரதியெடுத்தேன்.


No comments: