Jun 18, 2014

Youtube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்தல்

இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் தான் விரும்பும் வீடியோக்களை பார்க்க யூடியுப் தளத்தைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். யூடியுப் தளத்தில் இல்லையென்றால் தான் வேறு தளத்தை தேடிச் செல்கின்றனர். அவ்வாறு தாங்கள் பார்வையிடும் காணொளிகளை தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைக்க முடியும். அதற்கென பல்வேறு கருவிகள் உள்ளன அதோடு மட்டுமில்லாமல் யூடியுப் தளத்தின் முகவரியைக் கொண்டு எந்த மென்பொருளின் துணையும் இல்லாமலே கூட இதற்கென தனியாக உள்ள இணையதளத்தின் உதவியோடும் தரவிறக்கம் செய்யலாம். Google Chrome, Mozilla Firefox போன்ற பிரபலமான இணைய உலாவிகளில் Youtube வீடியோக்களைத் தரவிறக்கம் செய்யவதற்கென தனியாக Addon இருக்கின்றன. எந்தனையோ வழிகள் இருந்தாலும் நம்ம உபுண்டுவில் அதற்கு மென்பொருள்கள் இருக்கின்றதா என்று கேட்கிறீங்க அப்படித்தானே. இருக்கின்றது ஒன்றல்ல இரண்டு வழிகள் இருக்கின்றது. ஒன்று youtube-dl கட்டளை வழி மற்றொன்று Minitube கருவி வழி.


youtube-dl கட்டளை வழி:

முதலில் youtube-dl கட்டளையை உபுண்டுவில் நிறுவ வேண்டும். அதற்கு முனையத்தில் sudo apt-get update என கொடுத்து இயக்கியப் பிறகு, sudo apt-get install youtube-dl என கொடுத்து youtube-dl கட்டளையை நிறுவிக்கொள்ளவும். ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் மேற்கண்ட கட்டளையைக் கொடுக்க வேண்டியதில்லை.



எந்த வீடியோவை தரவிறக்கம் செய்ய வேண்டுமோ அதன்மீது வைத்து Right Click செய்து அதனுடைய நடப்பு நேர URL பெறவும்.


முனையத்தைத் திறந்து youtube-dl எனும் கட்டளையைத் தொடர்ந்து single space விட்டு தரவிறக்கம் செய்ய வேண்டிய வீடியோவின் URL ஐ கொடுக்கவும். அவ்வாறு கொடுக்கும் முகவரியில் v=*********** தொடர்ந்து & குறியீட்டிற்குப் பிறகு உள்ள அனைத்து எழுத்துக்களையும் நீக்கிவிடவும். சிகப்பு கட்டம் கட்டி காட்டப்பட்டுள்ளது.



எழுத்துக்களை நீக்கிவிட்டு கட்டளைளை இயக்கினால் நீங்கள் விரும்பிய வீடியோ தரவிறக்கம் ஆகும்.


Minitube வழி:







Jun 16, 2014

Oracle VM VirtualBox இல் Screenshot எடுத்தல்

Oracle VM VirtualBox இல் Screenshot எடுப்பதற்கு என்று தனியாக எந்த கருவியும் கொடுக்கப்படவில்லை. ஆனால் கட்டளை வழியாக VirtualBox ற்குள் 
இயங்கிக்கொண்டிருக்கும் இயங்குதளத்தை நாம் Screenshot எடுக்கலாம்.


Screenshot எடுக்க வேண்டிய இயங்குதளத்தினை முதலில் இயக்கிக்கொள்ளவும் அதன்பின், இந்த கட்டளையை முனையத்தில்(Terminal) கொடுக்கவும்.

VBoxManage controlvm WindowsXP screenshotpng 1.png


WindowsXP என்பதற்கு பதில் நீங்கள் என்ன பெயர் கொடுத்தீர்களோ அதையே கொடுக்கவும். எந்த அடைவிற்குள் இருந்து கொண்டு கட்டளையை இயக்கினீர்ளோ அந்த அடைவிற்குள் Screenshot சேமிக்கப்படும்.


இதை Script வழியாகவும் செய்யலாம்.



இந்த Script ஐ இயக்கியவுடன் Home அடைவிற்குள் Screenshot சேமிக்கப்படும்.


Reference:
http://www.dedoimedo.com/computers/virtualbox-screenshot.html

Jun 12, 2014

OpenSSH மூலமாக இரண்டு உபுண்டு இயங்குதளங்களுக்கிடையே கோப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்

எனது மடிக்கணினியில்(Kubuntu 14.04 LTS) 50GB அளவிற்கு வீடியோக்கள் வைத்திருந்தேன் அந்த வீடியோக்கள் அனைத்தையும் எனது நண்பரினுடைய மேசைக்கணினியில் (Ubuntu 12.04.2 LTS) சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பென்டிரைவில் Copy செய்து மேசைக்கணினிக்கு கோப்பிகளை மாற்றுவது கொஞ்சம் நேரத்தை வீணடிக்கும் செயல் ஆகையால் LAN அமைப்பு மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளுமாறு வசதி செய்து விட்டால் நேரம் மிச்சமாகும் என யோசித்து செய்த ஏற்பாடுதான் இது. samba server மூலமாகவும் இதைச் செய்யலாம் இருந்தாலும் openssh முறை எனக்கு எளிமையாக தெரிந்தது. அண்ணனிடம் BSNL Broadband இணைப்பு இருந்தது அதற்காக வழங்கப்பட்ட மோடத்தில் நான்கு கணினிகள் வரை இணைத்துக்கொள்ளலாம். Modem ஆக செயல்படும் அந்த கருவி Switch ஆகவும் செயல்படும் ஆகையால் அதன் மூலமாக இரண்டு கணினிகளையும் இணைத்தேன். அதன்பின் என்னுடைய மடிக்கணினியில் openssh-server and openssh-client இரண்டு பொதிகளையும் நிறுவினேன்.


கோப்புகளை சேமிக்க வேண்டிய மேசைக்கணினியில் Nautilus File Manager ஐத் திறந்தேன். அதனுடைய Menubar இல் File => Connect to Server க்குச் சென்றேன்


அதன்பின் எனது மடிக்கணினியின் IP Address ஐ ifconfig கட்டளையின் உதவியுடன் தெரிந்துகொண்டேன்.


Connect to Server ஐ சொடுக்கியவுடன் அடுத்ததாக கிடைத்த Window வில்


Server Details என்பதில் கீழ்காணும் உள்ளீடுகளை கொடுத்தேன்
Server: 192.168.1.8
Port: 22
Type: SSH
Folder: /

User Details என்பதில் கீழ்காணும் உள்ளீடுகளை கொடுத்தேன்
User name: kathirvel
Password: எனது பயனர் கணக்கின் கடவுச்சொல்லை கொடுத்தேன்


மேற்காணும் தகவல்களை கொடுத்து Continue Button ஐ அழுத்தினேன். உடனடியாக எனது மடிக்கணினியின் Kubuntu வினுடைய root folder திறந்தது. பிரதியெடுக்க வேண்டிய வீடியோ உள்ள பார்ட்டிசியனை எனது மடிக்கணினியில் திறந்து கொண்டேன். அதன்பின் மேசைக்கணினியில் உள்ள Nautilus File Manager இல் SFTP on 192.168.1.8/media/kathirvel/LEARNING/ எனும் அடைவிற்குச் சென்று பிரதியெடுக்க வேண்டிய வீடியோ கோப்புகளை  மேசைக்கணினிக்கு பிரதியெடுத்தேன்.


Jun 8, 2014

EXT4 கோப்பு முறைமை Partition களை பயன்படுத்துதல்


எனக்கு தெரிந்த அண்ணன் ஓருவரின் பழைய மேசைக்கணினியில் இருந்த வன்வட்டு வேலை செய்யவில்லை. ஆகையால் அந்த கணினியில் 320GB(SATA வகை) அளவு கொண்ட புதிய வன்வட்டு ஒன்றினை வாங்கி இணைத்தேன். அவர் லினக்ஸைத்தான் விரும்பி பயன்படுத்துவார் ஆகையால் பார்ட்டிசியன் பிரிக்கும் போது முதல் பார்ட்டிசியனை மட்டும் NTFS கோப்பு முறைமையிலும் மற்ற பார்ட்டிசியன்கள் அனைத்தையும் EXT4 கோப்பு முறைமையிலும் பிரித்தேன். அதை கீழ்காணும் படத்தில் காணலாம். அதன்பின் அந்த வன்வட்டில் உபுண்டு 12.04.2 LTS பதிப்பை மட்டும் நிறுவினேன். விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவவில்லை.


Nautilus File Manager க்குள் சென்று EXT4 கோப்பு முறைமையில் பிரித்த பார்ட்டிசியன்கள் எதிலும் தகவல்களை சேமிக்க முடியவில்லை. காரணம் என்னவென்றால் root பயனாளர் மட்டும்தான் அதில் கோப்புகளை சேமிக்க முடியும் என்று அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் Read and Write அனுமதிகளை Partition க்கு  அளித்துவிட்டால் முடிந்தது பிரச்சனை.

முதலில் பார்ட்டிசியன்கள் அனைத்தையும் திறந்து(Mount செய்தேன்) கொண்டேன், அதன்பின் முனையத்திற்குச் சென்று sudo chmod 777 /media/volume label or UUID கொடுத்தேன். அதன்பின் அனைத்து பார்ட்டிசியன்களையுன் Unmount செய்து விட்டு திரும்ப Mount செய்த போது கோப்புகளை சேமிக்க முடிந்தது. நான் Volume Label கொடுத்திருந்திருந்ததால் sudo chmod 777 /media/PERIYAR_4 என கொடுத்திருக்கிறேன். Volume Label கொடுக்காமல் Partition ஆனது பிரிக்கப்பட்டிருந்தால் அதனுடைய UUID ஐ கொடுக்க வேண்டும். Partition இன் UUID ஐத் தெரிந்து கொள்ள முனையத்தில் sudo blkid என கொடுக்கவும்.



துணுக்கு:
விண்டோஸ் இயங்குதளம் FAT மற்றும் NTFS ஆகிய இரண்டு கோப்பு முறைமைகள்(File Systems) மட்டும்தான் ஆதரிக்கும். ஆனால் லினக்ஸ் இயங்குதளம் 100 க்கு மேற்பட்ட கோப்பு முறைமைகளை ஆதரிக்கும். பெரும்பாலும் Ext2, Ext3 மற்றும் Ext4 கோப்பு முறைமைகள் லினக்ஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படுகிறது. உபுண்டுவை பொறுத்த வரையில் இயல்பிருப்பாக Ext வகை(Ext2, Ext3, Ext4) கோப்பு முறைமைதான் பயன்பாட்டில் உள்ளது. அண்மைய உபுண்டு பதிப்புகளில்  Ext4 கோப்பு முறைமை பயன்படுத்தப்படுகிறது. FAT மற்றும் NTFS கோப்பு முறைமைகளையும் உபுண்டுவில்  கையாள முடியும். ஆனால் உபுண்டுவினுடைய Home மற்றும் Root Partition கள் Ext வகை கோப்பு முறைமைகளை பயன்படுத்துவதால்தான் விண்டோஸ் இயங்குதளத்தில் அவைகளை காண முடிவதில்லை. காரணம்  FAT, NTFS ஐத் தவிர்த்து வேறெந்த கோப்பு முறைமைகளையும் விண்டோஸ் ஆதரிக்காது. லினக்ஸ் இயங்குதளங்களை மட்டும் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு FAT மற்றும் NTFS கோப்பு முறைமைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் Ext4 கோப்பு முறைமையை பயன்படுத்துவதால் பயனாளர்களுக்கு பல நன்மைகள் உண்டு. லினக்ஸ் இயங்குதளங்களை மட்டும் பயன்படுத்துபவர்கள் தேவைப்பட்டால் ஒன்றிரண்டு பார்ட்டிசியன்களை NTFS கோப்பு முறைமையில் வைத்துக்கொள்ளலாம்.

Jun 7, 2014

Google Chrome உலாவியில் உள்ள அனைத்து Bookmark ஐயும் நீக்குவது எப்படி?



Bookmark Manager க்குச் சென்று ஏதாவது ஒரு Bookmark ஐ தேர்வு செய்த பின் Ctrl+A ஐ அழுத்தி ஏதாவது ஒரு Bookmark ஐ Delete செய்யவும். அனைத்து Bookmark களும் நீக்கப்பட்டுவிடும்.