May 11, 2014

Kubuntu 14.04 LTS + Libreoffice Writer இல் தமிழ் தட்டச்சு

குபுண்டு 14.04 LTS இல் Libreoffice Writer 4.2.3.3 பதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Libreoffice Writer இல் தமிழை தட்டச்சு செய்வதில் இரண்டு பிரச்சனைகள். ஒன்று தமிழை தட்டச்சு செய்யமுடியவில்லை, இரண்டு தமிழ் எழுத்துகள் தெளிவாக தெரியவில்லை. குபுண்டுவில் தமிழை தட்டச்சு செய்வது தொடர்பாக ஏற்கனவே ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

நான் குபுண்டுவில் தமிழை தட்டச்சு செய்வதற்கு ibus ஐயும், தமிழ் 99 தட்டச்சு முறையினையும் கடைபிடிக்கிறேன். குபுண்டுவில் இந்த தமிழ் தட்டச்சு பிரச்சனை அவ்வளவாக என்னை தலைசுற்ற வைக்கவில்லை, காரணம் ஏற்கனவே இது தொடர்பாக எனக்கு இருந்த அனுபவம்தான். கூடுதலாக இந்தமுறை மகிழ்ச்சியே கிடைத்தது. அதற்கான காரணம் இங்கே.

முனையத்தில் sudo apt-get install libreoffice-gtk எனக் கொடுத்து libreoffice-gtk எனும் பொதியை நிறுவிபின் Home அடைவிற்குள் .bashrc கோப்புவில் கீழ்காணும் வரிகளை இணைத்த பின்

export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus
export OOO_FORCE_DESKTOP=gnome

கோப்புவை சேமித்துவிட்டு, Logout செய்துவிட்டு திரும்பி Login செய்யும் போது Libreoffice Writer இல் தமிழை தட்டச்சு செய்ய முடிந்தது.

ஏம்பா கதிர்வேலு இந்த மாதிரி சின்ன சின்ன பிரச்சனைகளுக்கான தீர்வையே எழுதிக்கிட்டு இருக்கிறீயே, பெரிய லெவல்ல எதுவும் எழுத மாட்டியாப்பானு கேட்கிறீங்க அப்படித்தானே? காரணம் விண்டோஸ் இயங்குதளத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல நம்ம லினக்ஸ் என்பதை நிரூபிப்பதற்காகத்தான் இதுபோன்ற பதிவுகள். அதோடு அடிப்படையான வேலைகளையே உபுண்டுவில் சரிவர செய்ய முடியாது என்கிற சிந்தனை வந்துவிட்டால், அப்புறம் எப்படிங்க லினக்ஸை பரப்புவது? ஆகவே விண்டோஸில் செய்கின்ற வேலைகளை எல்லாம் லினக்ஸிலும் செய்ய முடியும், அதற்கு மேலும் செய்ய முடியும். ஆனால் லினக்ஸில் செய்வதையெல்லாம் விண்டோஸில் செய்ய முடியாது. என்பதை நிரூபிப்பதற்காகவும்தான். இதுபோன்ற பதிவுகளை எழுதி வருகிறேன்.

5 comments:

seetha said...

உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன். விண்டொஸை விட மிக சிறந்த OS லினக்ஸ் என்பதை என்னுடைய மாணவர்களிடம் நிறுபித்து அவர்களையும் பங்கு பெற செய்கிறேன். இதில் ஒரளவு வெற்றி பெற்று இருக்கிறேன். என்னுடைய ஆவல் தமிழ்நாட்டில் கணினி பயன்படுத்தும் அனைவரும் மாறவேண்டும் என்பதே.

இரா.கதிர்வேல் said...

நன்றி சார். நாம் அனைவரும் கூட்டாக உழைத்து லினக்ஸை வளர்த்திடுவோம்.

Shyam said...

வணக்கம்,

உங்களது http://gnutamil.blogspot.in/ வலைப் பதிவை பார்த்தேன். மிகவும் உதவிகரமாக இருந்தது.

குபுண்டு (KUbuntu) 14.04 நிறுவிய பின்பு என்னுடைய கணினியில் Open Office-ல் தமிழில் தட்டச்ச இயலவில்லை. பல முறை முயன்றுவிட்டு மீண்டும் 12.04க்கே சென்று விடலாமா என்று நினைத்தேன்.

என்னிடம் மற்றொரு கணினியும் உள்ளது. அதை லினெக்ஸ்-க்கு மாற்ற வேண்டும் என நினைத்திருந்தேன். மேற்சொன்ன மாதிரியான Configuration பிரச்சனைகளாலும், லினெக்ஸ்சில் ஒரு பிரச்சனைக்கு நூறு தீர்வுகள், அதிலும் மிகச்சரியான தீர்வை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாலும் விண்டோசிலேயே தொடர்கிறேன்.

நான் கீழுள்ள முறையை பின்பற்றி பார்த்தேன் ஆனாலும், Open Office-ல் தமிழில் தட்டச்ச இயலவில்லை. உங்களால் உதவ முடியுமா?

sudo apt-get update
sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n
sudo apt-get install ibus-qt4
sudo apt-get install libreoffice-gtk

Edited .bashrc file in the 'Home' folder and Added following
export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus
export OOO_FORCE_DESKTOP=gnome

மேலும், குபுண்டு (KUbuntu) வை விட XUbuntu, light-ஆகவும் வேகமாவும் இருக்கும் என்கிறார்களே? அது உண்மையா? அதில் (XUbuntu) ibus ஒழுங்காக வேலை செய்யுமா?

நன்றியுடன்,
சியாம்.

இந்த முறையை பயன் தரவில்லை. office writer, Firefox இவற்றில் தமிழில் உள்ளீடு செய்ய இயவில்லை. தயவு செய்து உதவுங்கள்.