தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கிய இலவச மடிக்கணினியில் லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளம் ஆகிய இரண்டு இயங்குதளங்களும் இரட்டை நிறுவலாக நிறுவி கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், நமது மாணவர்கள் இருக்கிறார்களே மிகவும் புத்திசாலிகள் கொடுக்கப்பட்ட மடிக்கணினியில் CD/DVD Drive இல்லாவிட்டாலும் கூட பென்டிரைவ் மூலமாக விண்டோஸ்7 இயங்குதளத்தை மிகவும் எளிமையாக நிறுவி விடுகிறார்கள்.
பெரும்பாலும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இயங்குதளத்தை நிறுவுவதற்காக வேறெங்கும் தனியாக Hardware Service Engineer ஐ தேடிச் செல்வதில்லை. அவரவர்களே நிறுவிக்கொள்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியான செய்திதான் இது!
தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தைப் பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவை எழுதியிருந்தேன்.
ஆனால் கூடவே நிறுவப்பட்டுள்ள BOSS Linux ஐ மீட்டெடுப்பது எப்படி? என்று எனது அருமை சகோதரர்கள் இயந்திர பொறியாளர் பா.சக்திவேலும், கட்டிட பொறியாளர் வே.ஆதவனும் கேட்டார்கள். அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க நானும் அவர்களுடன் சேர்ந்து முயற்சியில் இறங்கினேன்.
நான் ஏற்கனவே, விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு உபுண்டு இயங்குதளத்தை மீட்டெடுப்பது எப்படி? என ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் அந்த முறைகளைப் பின்பற்றிய பொழுது GRUB மீட்டெடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு இயங்குதளங்களும் உள்நுழைவதற்கு மிகவும் அடம்பிடித்தது. காரணம் BOSS Linux க்கு அந்த கட்டளைகள் சரியாக வேலைசெய்யவில்லை.
மறுபடியும் இணையத்தையே உதவிக்கு நாடினோம். BOSS Linux -ன் விக்கி தளத்தில் இதற்கான உதவிகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப் பின்பற்றியும் GRUB ஐ மீட்டெடுக்க முடியவில்லை.
ஆனால் கூகுளின் தேடல் முடிவில் Noobs LAB -ல் Install/Recover Grub from Linux Live CD கட்டுரையின் இணைப்பு காட்டப்பட்டது. இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல கட்டளைகளைப் பின்பற்றிய பொழுது. எங்களால் வெற்றிகரமாக BOSS Linux GRUB ஐ மீட்டெடுக்க முடிந்தது.
GRUB Loader ஐ மீட்டெடுக்க அவசியம் தேவையானவை:
1. உபுண்டு லினக்ஸை(உபுண்டு 9.10 க்கு மேற்பட்ட பதிப்பு) Bootable ஆக மாற்றிய பென்டிரைவ் (தமிழக அரசின் மடிக்கணினிக்கு மட்டும்)
வழிமுறை:

- உபுண்டுவை Bootable ஆக மாற்றிய பென்டிரைவ் மூலம் மடிக்கணினியினை பூட் செய்யவும்.
- Try Ubuntu வை தேர்வு செய்யவும் (நாங்கள் உபுண்டு 12.04 LTS பதிப்பை பயன்படுத்தினோம்)
- முனையத்தை(Terminal) திறந்து கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக இயக்கவும். (மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்ளவும், உங்களுக்கு செய்முறைகள் தெளிவாக புரியும்)
sudo passwd root
su
sudo -i
sudo mount /dev/sda3 /mnt
sudo mount --bind /dev /mnt/dev
sudo chroot /mnt
grub-install /dev/sda
கட்டளைகளுக்கான விளக்கம்:
sudo passwd root - இந்த கட்டளையானது நிகழ்வட்டாக(Live OS) உள்ள உபுண்டுவின் root account னுடைய கடவுச்சொல்லை மாற்றுவதற்கானது. ஏங்க இந்த கடவுச்சொல்லை மாத்தனும்னு கேக்குறீங்களா? இயங்குதளத்தின் அனைத்து கட்டளைகளையும், கணினியினுடைய அனைத்து வன்பொருள்களையும், அனைத்து அனுமதிகளோடும், உரிமைகளோடும் இயக்கக்கூடிய ஒரே நபர் இவர்தாங்க(root user). அவருக்கான கடவுச்சொல்லை நாம் அமைத்துக்கொண்டுதான் வேலையை தொடங்க வேண்டும் (நிகழ்வட்டு என்பதால் - Live OS).
su - Switch User சாதரண பயனரிலிருந்து root பயனருக்கு மாறுவதற்கு.
sudo -i - பயனரின் Home Directory, .profiles and policy notes போன்றவைகளை அணுகிக்கொள்ள.
sudo mount /dev/sda3 /mnt - இந்த கட்டளை BOSS Linux -ன் root directory யினை /mnt அடைவிற்குள்(folder) mount செய்ய. பெரும்பாலும் அரசு மடிக்கணினியில் /dev/sda3 யில்தான் இருப்பியல்பாக BOSS Linux நிறுவப்பட்டு வருகிறது. இதை உறுதி செய்ய இங்கு செல்லவும்.
sudo mount --bind /dev /mnt/dev - /dev அடைவின் அனைத்து கோப்புகளையும் இணைப்பதற்கு மற்றும் அணுகுவதற்கு.
sudo chroot /mnt - /mnt அடைவோடு root பயனராக செயல்பட. (இந்த கட்டளையினை செயல்படுத்திய பின்பு முனையத்தில் நிறம் மாறியிருப்பதை காணலாம்).
grub-install /dev/sda - வன்வட்டில் GRUB Loader ஐ நிறுவுவதற்கு. இந்த கட்டளை இயக்கியவுடன் Installation Finished. No error reported. எனும் செய்தி நமக்கு கிடைக்கும் வேறு ஏதாவது பிரச்சனையென்றால் அந்த செய்திகளும் சுட்டிக்காட்டப்படும்.
அவ்வளவுதான் கணினியினை மறுதொடக்கம் செய்தவுடன். மடிக்கணினி வழங்கிய பொழுது எவ்வாறு BOSS Linux Grub Loader டன் இருந்ததோ அதே போலவே இயங்க தொடங்கியது.
இது தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள் அல்லது உதவிகள் எதுவாக இருந்தாலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
நன்றி:
இந்த கட்டுரையினை எழுதுவதற்கு தங்களது முழு ஒத்துழைப்பையும், மடிக்கணினிகளையும் கொடுத்து உதவியதோடு இந்த பதிவினை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்து ஊக்குவித்த
தோழர் பா.சக்திவேல் D.M.E., Government Polytechnic College, Aranthangi அவர்களுக்கும்
தோழர் வே.ஆதவன் D.C.E., Government Polytechnic College, Aranthangi அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.