இதுவரையிலும் பைத்தானைப் பற்றி அடிப்படையான செய்திகளைப் பார்த்தோம். இப்பொழுது நாம் control flow வைப் பற்றி பார்க்கப் போகிறோம். சூல்நிலைகளுக்கேற்ப ஒரு சில முடிவுகளை எடுப்பதற்கும், வெவ்வேறு நிலைகளில் அதற்கு தகுந்த மாதிரியான முடிவுகளை எடுப்பதற்கும். இந்த control flow statements கள் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஒரு நாளினுடைய நேரத்தைப் பொருத்து 'Good Morning', 'Good Evening', 'Good Night' என சொல்கிறோமே அது போல.
பைத்தானில் மூன்று விதமான control flow statements கள் பயன்படுத்தப்படுகிறது. அவைகள்
1.if
2.for
3.while
IF statement:
IF statement ஆனது கொடுக்கப்பட்டுள்ள condition true என்றால் அதன் கீழ் உள்ள block of statements களை இயக்குகிறது. இல்லையென்றால் வெறொரு block of statements களை இயக்குகிறது. இது else block என அழைக்கப்படுகிறது. else என்பது optional ஆகும். கொடுக்காமலும் இருக்கலாம்.
if statement பயன்படுத்துதல்:
a=100
b=400
if a>b:
print "'a' is greater than 'b'"
elif b>a:
print "'b' is greater than 'a'"
else:
print "'a,b' are equal"
print 'Done'
நிரல் எப்படி வேலை செய்கிறது?
இரண்டு எண்களில் எது பெரியது என கண்டுபிடிக்க இந்த நிரலை எழுதியுள்ளோம். a,b என இரண்டு variable களுக்கும் மதிப்புகள் முறையே 100,400 என கொடுத்துள்ளோம். இங்கு கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் எந்தெந்த நிரல்வரிகள் எந்தெந்த block -ன் கீழ் வருகிறது என்பதை நாம் சொல்ல வேண்டும். C,C++,JAVA நிரல்களில் பொதுவாக { , } பயன்படுத்தப்படுகிறது. இதற்காகத்தான் Indentation level பயன்படுத்தப்படுகிறது அதற்கு Single Tab பைத்தானில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற கணினி மொழிகளில் { } பயன்படுத்துவது போல. single tab பயன்படுத்தவில்லையெனில் நிரலில் பிழைச் செய்தி காண்பிக்கும்.
அடுத்ததாக கவனிக்க வேண்டிய விஷயம் if, elif மற்றும் else ஆகிய statement களின் முடிவில் : (colon) வைக்கப்பட்டுள்ளது. C, C++, JAVA போன்ற மொழிகளில் இது கிடையாது. elseif என்பதைதான் பைத்தான் elif என எடுத்துக் கொள்கிறது.
elif மற்றும் else இரண்டும் optional. குறைந்தது ஒரு if இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
a>b யா என சோதித்து பார்க்கிறது. உண்மையென்றால் 'a' greater than 'b' என வெளியீட்டினைக் கொடுக்கிறது.
இல்லையென்றால் elif(else-if) மூலம் b>a என பார்க்கிறது, உண்மையென்றால் 'b' is greater than 'a' என வெளியீட்டினைக் கொடுக்கிறது.
இல்லையென்றால் 'a,b' are equal என வெளியிடுகிறது. இறுதியில் Done என print செய்கிறது.
ஒவ்வொரு Condition னும் சோதனை செய்யப்படும். சோதனை செய்யப்படும் Condition தவறு என்றால் அடுத்த Condition அல்லது block ற்கு சென்றுவிடும்.
C/C++ நிரலாளர்களின் கவனத்திற்கு:
பைத்தானில் switch statement கிடையாது. if..elif..else statement ஐத்தான் switch statement செய்யக்கூடிய வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்த பதிவில் for loop ஐப் பற்றி பார்ப்போம்.