Apr 14, 2013

பைத்தான் - உள்ளீடு பெறுதல்

கணினி என்றாலே உள்ளீட்டினைப் பெற்று அதற்கான வெளியீட்டினை தரக்கூடிய ஒரு இயந்திரம் தானே. பயனாளர்களினுடைய உள்ளீட்டினைப் பெறுதல் என்பது நிரல் மொழிகளைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமான ஒன்று. C மொழியில் scanf() பயன்படுத்தப்படுகிறது. அதுபோல பைத்தானில் raw_input() எனும் function பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் கொடுக்கக்கூடிய  உள்ளீடு a எனும் variable -ல் store ஆக வேண்டுமானால்,


a=raw_input('Enter a value:')

எனக் கொடுத்தால் போதும் நீங்கள் உள்ளீடாக கொடுத்த மதிப்பு a எனும் variable -ல் சேமிக்கப்பட்டு விடும். a என்பதற்கு பதிலாக நீங்கள் எந்த variable name ஐயும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதை திரையில் print செய்ய வேண்டுமானால்  

print a  எனக் கொடுத்தால் போதும்.


உதாரணத்திற்கு ஒரு நிரலைப் பார்ப்போம்.

a=raw_input('Enter Your Name:')
b=raw_input('Enter Your Father Name: (with single space)')
print a+b

Enter Your Name: என்பதில் நீங்கள் கொடுக்கும் பெயர் a -ல் சேமிக்கப்பட்டு இருக்கும்.
Enter Your Father Name : என்பதில் நீங்கள் கொடுக்கும் தந்தை பெயர் b-ல் சேமிக்கப்பட்டு இருக்கும்.



இறுதியாக a+b என்பது இரண்டையும் சேர்த்து வெளியிடும்.



1 comment:

ash said...

தொடர் நிறுத்தப்பட்டுவிட்டதா சார்? தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறோம்