Sep 4, 2012

பாஸ்போர்ட் அலுவலகமும் - விண்டோஸ் இயங்குதளமும்


நான் கடந்த வாரம் தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.  ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தேன்.  பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் 6-மணி நேரம் இருந்தேன்  அவ்வளவு நேரம் அலுவலர்கள் எடுத்துக்கொண்டணர்.  சிறப்பான சேவையினை, மிகவும் கனிவாக விண்ணப்பத்தாரர்களோடு பழகி செய்கின்றனர்.  பாராட்ட வேண்டிய விஷயம். பொதுவாகவே பெரும்பாலான அரசு அலுவலகங்களில் விண்ணப்பதாரர்களிடம் கனிவு, பணிவெல்லாம் அலுவலர்கள் காட்டுவதில்லை.

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பாஸ்போர்ட்  அலுவலகத்தில் உள்ள கணினியில் நிறுவியிருக்கும் இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம், பதிப்பு XP Professional.  அனைத்துக் கணினிகளுமே  நெட்வொர்க்கில் இணைத்திருப்பதால்  பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் உலாவி... Internet Explorer அதைவிட இன்னொரு கொடுமை Internet Explorer மேம்படுத்தப்பட்ட பதிப்புக் கூட கிடையாது.  விண்டோஸ்  எக்ஸ்.பி இயங்குதளம் கூடவே வரும் அந்த Internet Explorer.

இந்தவிஷயங்களையெல்லாம் நான் விண்டோஸ் இயங்குதளத்தைக் சிறுமைப் படுத்துவதற்காக கூறவில்லை, விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள குறைகளை ஒரு பாதுகாப்பு விஷயங்கள் அதிகம் இருக்க வேண்டிய ஒரு அலுவலகத்தில் நேரில் கண்டேன் அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காக கூறுகிறேன் அவ்வளவுதான்.

விண்டோஸ் இயங்குதளத்தில் நான் கண்ட அந்த பிழைச் செய்தி..  விண்டோஸ் இயங்குதளம் ஏதாவது ஒரு பயன்பாட்டினை விரைவாக இயக்கும் பொழுது ஸ்தம்பித்து நிற்குமல்லவா அதுதான்.  அதன் பின்பு Ctrl+Alt+Delete கீகளை ஒரு சேர அழுத்தி TaskManager சென்று பயன்பாட்டினைத் தேர்வு செய்து  EndNow பொத்தானை அழுத்துவோம், அதன் பின்பு புதிதாக நமக்குத் தேவையான Application-களை இயக்குவோம்.  இதை அங்கு வேலைப் பார்த்த அலுவலரும் செய்தார்.

என்னுடைய விண்ணப்பத்துடன் இணைத்திருந்த சான்றிதழ்களின் நகல்களையெல்லாம் வருடுவதற்காக(Scan) Internet Explorer உலாவியில் Scan Button அழுத்திய  பொழுது விண்டோஸ் இயங்குதளம் ஸ்தம்பித்தது,  உடனே Ctrl+Alt+Del கீயினை அழுத்தி TaskManager மூலம் பயன்பாட்டினை கொன்று விட்டு, மறுபடியும் தொடங்கினார்.

என்னைப் புகைப்படம் எடுக்கும் பொழுது  இது போல மறுபடியும் ஸ்தம்பித்தது, மறுபடியும் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து என்னுடைய விண்ணப்பத்திற்குண்டான பணிகளை செய்து முடித்து அனுப்பினார்.

இங்கு இன்னொரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்தாக வேண்டும் என்னுடைய கையெழுத்தினை கணினியில் வருடுவதற்காக போட்ட பொழுது ... 'என்னங்க நீங்க தமிழ்லதான் கையெழுத்து போடுவீங்களா என வியப்போடு கேட்டார்' நான் ஆமாம் என்று கூறி விட்டு நகர்ந்தேன்.

Pre-Processing Counter, Processing Area(A), Verification Counter(B), Granting Officers Counter(C) என நான்கு உள்ளது. அதில் முதல் இரண்டு Counter -களில் பணியாற்றுவது TCS(Tata Consultancy Services) நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள்.

என்னுடைய கருத்து என்னவென்றால்:

1. பாஸ்போர்ட் அலுவலகங்கள் அனைத்தும் ஒன்றாக நெட்வொர்க் மூலம் இணைத்திருக்கும் தருவாயில் பாதுகாப்பு அம்சங்களை சிரத்தையோடு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  அப்படி இருக்கும் பொழுது நெட்வொர்க் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு நல்ல ஒத்திசைவு கொடுக்கும் லினக்ஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்தி  பணிகளை ஏன் அரசு மேற்கொள்ளக்கூடாது?  லினக்ஸ்  தொழில்நுட்பம் தெரிந்த இந்தியர்களே நாட்டில் இல்லையா? அல்லது லினக்ஸ் தொடர்பான Application களை உருவாக்கும் நிறுவனங்களே இந்திய  நாட்டில் இல்லையா?

2. லினக்ஸ் இயங்குதளங்கள் விண்டோஸ் இயங்குதளத்தைவிட நெட்வொர்க் தொடர்பான வேலைகளுக்கு நன்றாய செயலாற்றும்.  அப்படி இருக்கும் பொழுது நெட்வொர்க் தொடர்பான பணிகளுக்கு விண்டோஸ் இயங்குதளங்களை காட்டிலும் நன்றாக, நிலைத்தன்மையுடன் விரைவாக பயன்படுத்த உதவும் லினக்ஸ் இயங்குதளங்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

3.  இது போன்று அடிக்கடி ஓவ்வொரு விண்ணப்பத்தாரருக்கும் 1-நிமிடங்கள் வீதம் இயங்குதளம் ஸ்தம்பிப்பதால் வீணானால்,(தோராயமாக 500 விண்ணப்பத்தாரர்கள் என்றால் 500X1=500 நிமிடம் . 500/60=8.3 மணிநேரம்)  பாதிக்கப்படுவது மக்களே.  நேரம் போதாமையால் மறுநாளும் வரச்சொல்லுவார்கள். (நேரமின்மையால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பத்தாரர்களை மறுநாளும் வரச்சொல்லி அனுப்பினார்கள் மாலை 3.30 மணிக்கு மேல்)

4.  Internet Explorer உலாவி அவ்வளவு பாதுக்காப்பு மிகுந்த ஒன்று கூறிவிட முடியாது. அது பயன்படுத்தும் அனைவருக்குமேத் தெரியும்,  நெருப்பு நரி உலாவியினையாவது பயன்படுத்தியிருக்கலாம்.

5.  இந்தியாவின் வெளியிறவுத் துறை இணையதளம், உளவுத்துறை இணையதளங்களே சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கணினி உளவாளிகளால் சிதைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி நாளிதழ்களிலும்  கூட வெளிவந்தது.  ஆகையால் அரசு இவற்றெயெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

6.  இவ்வளவு பாதுகாப்பும் செய்துமே போலி பாஸ்போர்ட் தயார் செய்து நாள்தோறும் வெளிநாடுகளுக்குச் சென்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை,  அரசின் கவனக்குறைவா இல்லை இது போன்ற கணினி தொடர்பான விஷயங்களில் உள்ள பாதுக்காபு ஓட்டைதான் காரணமோ?

அண்டை மாநிலமான கேரளம் கணினி தொடர்பான விஷயங்களில் இந்தியா நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.  கேரளாவில் பால் சேகரிக்கும் மையங்கள் கூட லினக்ஸ் மற்றும் FOSS தொடர்பான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயல்படுகிறது.  ஆனால் தமிழக அரசு வரக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கும் தகவல் தொழிநுட்ப பணிகளை மேற்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  கொஞ்சம் நமது அரசின் கொள்கைகளை கொஞ்சம்  யோசித்துப் பாருங்கள்.

அரசு மடிக்கணினியினைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள ஒரு கட்டுரை.

எவ்வளவோ எடுத்துக்கூறியும் இலவச மடிக்கணினியில் விண்டோஸ்-7 இயங்குதளத்தை நிறுவிக்கொடுத்து தமிழக மக்களின் பலகோடி ரூபாய் பணத்தை தமிழக அரசு மைக்ரோசாப்ட் என்ற பராகாசுர நிறுவனத்திற்கு  அள்ளிக்கொடுத்துள்ளது.

எல்காட் நிறுவனம் உமாசங்கள் ஐ.ஏ.எஸ் இருந்த பொழுது முழுவதும் லினக்ஸைப் பயன்படுத்திதான் அரசு தொடர்பான தகவல் தொழில்நுட்ப வேலைகளை மேற்கொண்டது.

இப்பொழுது இருக்கும் ரஷ்ய அரசு போன வருட பட்ஜெட் அறிவிப்பின் போதே நாடு முழுமையும் GNU/Linux, FOSS, OpenSource ஆக மாறுவதற்கு பல கோடி ரூபாய்களை ஒதுக்கியிருப்பாதாக  அறிவித்து  அத்துடன் இரண்டு வருடங்களில்  இந்த திட்டம் நாடு முழுமைக்கு செயல்படுத்தப் படும் என வும் கூறியது.  இதை ஒரு கூடுதல் செய்திக்காக கூறுகிறேன்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் பாதுகாப்புடன் இயங்க வேண்டியது அவசியம்.   இந்தியாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் லினக்ஸைப் பயன்படுத்தும் காலம் என்று வரும்? காத்திருப்போம் அந்த தருணத்திற்காக.

***********************
கட்டற்ற இயங்குதளங்கள், மென்பொருட்கள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவோம் சுதந்திரம் பெறுவோம்.
***********************

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சமீபத்தில் சென்னை பதிவர் விழாவிற்கு பின் நண்பர் ஆளுங்க அருண், லினக்ஸ் தொழில்நுட்பம் பற்றி நிறைய சொன்னார்... நிறைய தெரிந்து கொண்டேன்...

லினக்ஸ் தொழில்நுட்பம் அறிந்து கொள்ள பலருக்கு ஆர்வம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்... இல்லை பலருக்கு நேரமில்லாமல் இருக்கலாம்...

இரா.கதிர்வேல் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

லினக்ஸைப் பயன்படுத்த ஆர்வம் ஏற்படுத்த வேண்டியது. நம்மைப் போன்ற லினக்ஸ் ஆர்வலர்களின் கடமை. அதற்கான பணிகளை தொடர்ந்து செய்வோம். நம்முடைய நண்பர்கள் வட்டத்தில் லினக்ஸினை முதலில் பரப்பி ஆர்வத்தை ஏற்படுத்தினால் போதும்.. லினக் ஸ் இன்னும் வேகமாக பரவும். எதிர்காலம் லினக்ஸிற்கே, மகிழ்வோம்.

mani said...

பெருசா எதாச்சும் பிரச்சனை வந்தாத்தான் திருந்துவாங்க..!!

இரா.கதிர்வேல் said...

ஆமாம் மணி. இந்தியாவைப் பொறுத்த வரையில் தீவிரவாதம் ,ஊழல், பிரச்சனை என்று எதையெடுக்கிட்டாலும் பெருசா ஏதாவது பிரச்சனை வந்தாதான் மாற்றுவழி தேடுவாய்ங்க..

நன்றி மணி.