Mar 28, 2012

முகநூல்(Facebook) - ல் இருந்து வரும் Notification மின்னஞ்சல்களை (E-mail), மின்னஞ்சல் முகவரிக்கு வராமல் தடுத்து நிறுத்துவது எப்படி?

பெரும்பாலும் இணையத்தினைப் பயன்படுத்தும் அனைவரும் முகநூலை பயன்படுத்துகிறோம். முந்தைய நாட்களில் இணைய மையத்திற்கு ஏதாவது தகவலினை தேடுவதற்காகவோ அல்லது வேறு அலுவலாகவோ சென்றோமானால், நமக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்ப்போம். ஆனால் இன்று நிலைமையேவேறு, முகநூலைத்தான் பார்க்கிறோம்.

முகநூலுக்கு அடிமையான நண்பர்கள் நிறைய பேர். ஆனால் இந்த முகநூலைப் பயன்படுத்திதான் லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் புரட்சியாளர்கள் தகவல் பரிமாற்றத்தையும், பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்.

முகநூலில் நம்முடன் இணைந்து இருக்கும் நண்பர்கள் ஏதாவது புகைப்படங்களை இட்டாலோ, பின்னூட்டங்கள் ஏதாவது தெரிவிதாலோ, கருத்துக்களை மற்றும் இதர செய்திகளை விரும்பினாலோ, புதிய நண்பர்களின் கோரிக்கைகள் அளிக்கப்பட்டாலோ உடனே அது நமது மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும், இது தேவையில்லை முகநூலுக்குண்டான விஷயங்களை ஏன் மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது சில தோழர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் (குறிப்பாக எனக்கு ஏற்பட்டது).

இதை எப்படி தடுப்பது என்பதைப் பார்ப்போம்.

சுருக்கிய வடிவம் : Home -> Account Settings -> Notifications -> All Notifications -> Click Sub Headings -> Click Edit -> Undick All The Dicks -> Click Save Changes. Thats All

படம் -1

Home - ற்கு அருகில் இருக்கும் சிறிய முக்கோண வடிவ குறியினை சொடுக்கி (Click) அதில் Account Settings என்பதை தேர்வு செய்து சொடுக்கவும். (பார்க்க படம் -2)

படம் - 2

படம் -3

Account Settings -னை சொடுக்கியவுடன், இடது புறத்தில் Notifications என்பதை சொடுக்கவும். (பார்க்க படம் -3). சொடுக்கியவுடன் Notifications க்குண்டான தேர்வுகள் நமக்கு கிடைக்கும், அதில்

படம் -4
All Notifications எனும் தலைப்பின் சிறு, சிறு உட்பிரிவுகளுடன் தெரிவுகள் இருக்கும், அந்த உட்தலைப்பிற்கு நேர் எதிராக உள்ள Edit எனும் இணைப்பை சொடுக்கி ,

அதன் பின் கிடைக்கும் அமைப்புக்களில் உள்ள அனைத்து டிக்(Tick) குகளையும் அன்டிக் (UnTick) செய்து Save Changes பொத்தானை மறக்காமல் சொடுக்கி. மாற்றங்களைச் சேமிக்கவும்.

ஒவ்வோரு உட்பிரிவையும் Edit கொடுத்து UnTick செய்யவும்.

படம் -5

முடிந்தது வோலை , ஒழிந்தது தேவையில்லாத மின்னஞ்சல் தொல்லை. என்னைப் போன்ற அவதிப்பட்ட தோழர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

குறிப்பு: நீங்கள் ஏதாவது குழுக்களில் (Groups) இணைந்திருந்தால் , Groups னை சொடுக்கி Notifications னை Off செய்யவும்.

3 comments:

த.வசந்தகுமார் said...

நன்றி நபர்களே என் வலைப்பூற்கு விருது கொடுத்தமைக்கு ஆனால் இந்த விருது எனது ஆருயிர் நண்பராகிய இரா.கதிர்வேல் (http://gnutamil.blogspot.in/) அவருக்கு தான் சேரும். நான் இந்த அளவுக்கு வந்தமைக்கு காரணம் அவர் தான். நன்றி நண்பா உன் வாழ்த்து எனக்கு எப்பவும் கிடைக்க வேண்டும்.

இரா.கதிர்வேல் said...

நன்றி வசந்தகுமார்.உன் உழைப்புக்கு கிடைத்த விருது.

Anonymous said...

என் மின்னஞ்சலில் face book noti-e-mail வந்து கொண்டே தான் உள்ளது ..

தடுக்க நல்ல வழி சொல்லி இருக்கிறீர்கள் நன்றி நண்பா