Mar 31, 2012

முனையத்தில் தட்டச்சு செய்யும் கட்டளைகளை மறைப்பது எப்படி?

லினக்ஸ் இயங்குதளம் என எடுத்துக்கொண்டாலே எல்லாமே முனையம்தான். முனையத்தைப் பயன்படுத்தி விரைவாகவும், சிறப்பாகவும் நம்மால் செயல்படமுடியும்.

முனையத்தில் நாம் தட்டச்சு செய்யும் கட்டளைகள் நமக்கு தெரியும் Enter பொத்தானை அழுத்தியபின், அதற்கான வெளியீடு கிடைக்கும். இது இயல்பாக முனையத்தில் நடைபெறுவது.

கடவுச்சொல்லை முனையத்தில் உள்ளிடும் தருணத்தில் , என்ன கடவுச்சொல் உள்ளிடுகிறமோ அது நமக்கு தெரியாது மறைக்கப்படும். சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளும் இல்லையென்றால் தவறு என்று காண்பிக்கும்.

இதுபோல நாம் முனையத்தில் உள்ளிடும் அல்லது தட்டச்சு செய்யும் கட்டளைகளையும் தெரியாமல் மறைக்கலாம். எப்படியென்றால்

முனையத்தை திறந்து stty -echo எனத் தட்டச்சு செய்து Enter Key னை அழுத்துங்கள் , அழுத்திய பின் நீங்கள் எந்த கட்டளையினைத் தட்டச்சு செய்தாலும், கட்டளைக்குண்டான வெளியீடுகள் தெரியுமேயொழிய உள்ளிட்ட கட்டளை என்னவென்பது தெரியாது. (பார்க்க படம் -1)


படம் - 1

முனையத்தை மூடி விட்டு மறுபடியும் திறந்தால், முனையத்தில் ஏற்கனவே இருந்ததுபோல நீங்கள் தட்டச்சு செய்யும் கட்டளைகள் தெரியும்.

முனையத்தை மூடாமலையே செய்ய வேண்டுமானால் stty echo என தட்டச்சு செய்து Enter Key னை அழுத்துங்கள்.(பார்க்க படம் -2)

படம்-2