Sep 19, 2011

உபுண்டுவின் கூகுள் குரோம் இணைய உலாவியில் இருந்த தமிழ் யுனிகோடு பிரச்சனைக்குத் தீர்வு

உபுண்டு லினக்ஸிலும் சரி, விண்டோஸ் இயங்குதளத்திலும் சரி நாம் இணையத்தில் உலாவுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தும் உலாவி நெருப்பு நரியும், கூகுள் குரோமும் தான். நான் அதிகம் குரோம் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் உபுண்டு இயங்குதளத்தில் கூகுள் குரோம் உலாவியினையும் நிறுவி வைத்திருந்தேன்.

ஏன் குரோம் பயன்படுத்துவதில்லை என்றுக் கேட்டால் தமிழ் எழுத்துருக்கள் பிரச்சனை. தமிழ் எழுத்துருக்கள் பிய்ந்தோ அல்லது கட்டம் கட்டமாகவோ தெரிந்தது. நிறைய தமிழ் வலைப்பூக்களில் Email Subscribe செய்து வைத்திருக்கிறேன். நிறைய நண்பர்கள் தமிழில்தான் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ஆகையால் கூகுள் குரோமினைப் பயன்படுத்துவதில்லை

ஒரு நாள் சரி முயற்சி செய்துதான் பார்ப்போம் என்று முடிவு செய்து கூகுளாரிடம் கேட்டேன் ஏதேதோ காட்டியது, எந்தெந்த இணையதளத்திற்கெள்ளாமோ அழைத்துச் சென்றது தீர்வுக் கிடைக்கவில்லை.

ஒரு வழியாக கூகுள் மூலமே கண்டுபிடித்தேன். ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதும் நண்பர் ஒருவர் இந்த இணைப்பினைக் கொடுத்து உபுண்டுவில் நிறுவியிருக்கும் கூகுள் குரோமினுடைய யுனிகோடு தமிழ் எழுத்துரு பிரச்சனைக்கு தீர்வு கூறியிருந்தார். அதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டேன்.


படம்-1

மிகவும் எளிமையான தீர்வு /usr/share/fonts/truetype/freefont எனும் அடைவிற்குள் உள்ள அனைத்து எழுத்துரு கோப்புகளையும் நீக்கி விட்டால். தமிழ் எழுத்துருக்கள மிக அழகாக உபுண்டுவின் கூகுள் குரோம் உலாவியில் காட்சியளிக்கும். குரோமினை நீங்கள் திறந்து வைத்திருந்தால் ஒரு முறை மூடிவிட்டு திறக்கவும்.

படம் -2
குறிப்பு:
/usr/share/fonts/truetype/freefont எனும் அடைவிற்குள் உள்ள எழுதுருக்களை நீக்க முடியவில்லை என்றால் முனையத்தை திறந்து sudo chmod 777 /usr/share/fonts/truetype/freefont/* எனக் கொடுத்து என்டர் கீயினை அழுத்துங்கள். பிறகு சென்று நீக்குங்கள். எழுத்துருக்கள் நீங்கும்.

எவ்வளவு அருமையாகவும், தெளிவாகவும் கூகுள் குரோம் இணைய உலாவியில் தமிழ் எழுத்துருக்கள் தெரிகிறது பாருங்கள்.




5 comments:

அணில் said...

அருமை

இரா.கதிர்வேல் said...

நன்றி தோழர் ந.ர.செ.ராஜ்குமார்

சரவணன்.D said...

மிகவும் அவசியமான பதிவு!!!
லினக்ஸ் மிண்ட்-இல் இந்த பிரச்சனை இல்லை நண்பா!!! உபுண்டுவில் தான் இந்த பிரச்சனை உள்ளது.
தகவலுக்கு நன்றி நண்பா!!!

//உங்களுக்கு உபுண்டு லினக்ஸ் CD (வட்டு) வேண்டுமா? தோழர் சரவணன் அனுப்பி வைக்கிறார்//
உபுண்டு சிடி பற்றிய பதிவுக்கு இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி தோழா!!!

த.வசந்தகுமார் said...

நன்றி நண்பா.

arulmozhi r said...

நன்றி கதிர்வேல்