Oct 30, 2010

Full Cirlce Magazine 42 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 42 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

Oct 8, 2010

உபுண்டு 10.10 லினக்ஸில் ஜாவா மொழி ( JAVA Language ) மிகவும் நன்றாக இயங்குகிறது

சி,சி++,ஜாவா இந்த மூன்று மொழிகளையும் கணினி அறிவியல் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக படித்தாக வேண்டும்.இந்த மூன்று மொழிகளையுமே கல்லூரி ஆய்வகத்தில் விண்டோஸ் இயங்குதளத்திலேயே செய்துப் பார்ப்போம்.இந்த மூன்று மொழிகளையுமே லினக்ஸிலும் செய்து,இயக்கிக்கொள்ளலாம்.

லினக்ஸ் பயன்படுத்தும் பயனாளர்கள் முதலில் கேட்கும் கேள்வியே விண்டோஸ் இயங்குதளத்தில் செய்வதையெல்லாம் செய்ய முடியுமா என்பதுதான்.செய்ய முடியும் என்பதே என்னுடைய பதில் இதில் பிரச்சனை எங்கு இருக்கிறது என்றால் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போல இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதுதான்.இந்த சிந்தனையில் இருந்து விடுப்பட்டாலே நாம் லினக்ஸ் இயங்குதளத்தை விரும்பி,மகிழ்ச்சியாக பயன்படுத்துவோம்.

என்னைப் பொறுத்தமட்டில் கணினி அறிவியலை பிரதான பாடமாக கற்கும் மாணவர்கள் அனைவரும் லினக்ஸ் இயங்குதளத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான லினக்ஸ் இயங்குதளத்தில் சி,பைத்தான் இந்த இரண்டு மொழிகளுக்கும் உண்டான Compiler கள் ஏற்கனவே நிறுவியிருக்கப்படும்.உபுண்டு லினக்ஸிலும் சி,பைத்தான் மொழிகளை நாம் எந்த விதமான பொதிகளையும்(packages) நிறுவாமலே இயக்கிக்கொள்ளலாம்.ஆனால்

உபுண்டு லினக்ஸில் சி++,ஜாவா இந்த இரண்டு மொழிகளும் நிறுவியிருக்கப்படாது.நாம் தான் நிறுவிக்கொள்ள வேண்டும்.இந்த packages களை நிறுவ உங்களிடம் லினக்ஸில் இணைய இணைப்பு இருந்தால் மிகவும் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.

பொதுவாக நாம் ஜாவா நிரலை இயக்க இரண்டு கருவிகள் அவசியம் தேவை அவை javac,java இதில் javac கட்டளை .java புரோகிராமை கம்பைல் செய்கிறது(java+compile -> javac). java கட்டளை கம்பைல் செய்யப் பட்ட .class fileஐ interpret செய்கிறது.நீங்கள் ஜாவா மொழியினைப் பற்றி தெரிந்துக்கொள்ள நண்பர் ந.ர.செ.ராஜ்குமார் அவர்களின் வலைப்பூ வை பார்வையிடுங்கள்.மிகவும் அருமையாக எழுதிக்கொண்டு இருக்கிறார்.



உபுண்டு 10.10 லினக்சில் ஜாவா மொழியினை நிறுவுதல்:

முனையத்தில் javac என கொடுங்கள் உபுண்டு லினக்சே நீங்கள் எந்தெந்த Packages களை நிறுவ வேண்டும் என கூறும்.இதில் ஏதாவதொரு package நிறுவினால் போதும்.நீங்கள் java நிரலை எழுதி பயன்படுத்தலாம்.உதாரணமாக என்னுடைய கணினியில் உபுண்டு லினக்சில்,முனையத்தில் javac என தட்டச்சு செய்து Enter key -யினை அழுத்தினேன்.அதுவே openjdk-6-jdk ,ecj ,gcj-4.4-jdk, gcj-4.5-jdk நன்கு packages களை பட்டியலிட்டது.இதில் ஒன்றான gcj-4.5-jdk யைத்தான் நான் நிறுவி பயன்படுத்துகிறேன்.இதை நிறுவி எப்படி ஜாவா நிரல்களை compile செய்வது, compile செய்த பிறகு நிரலை எப்படி இயக்குவது என்று பார்ப்போம்.சாதாரமாக நாம் விண்டோஸ் இயங்குதளைத்தில் இயக்குவது போலத்தான் வேறொன்றுமில்லை. சரி packages ஐ நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.
  1. முனையத்தை திறந்து கொள்ளுங்கள்
  2. sudo apt-get install gcj-4.5-jdk எனக் கட்டளையினை கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.உங்களுடைய கடவுச்சொல்லை கேட்க்கும், கடவுச்சொல்லை உள்ளிட்டு Enter key யினை அழுத்துங்கள்.
  3. உங்களுடைய இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்து நிரலானது விரைவாக நிறுவப்படும்.
  4. Package நிறுவி முடிக்கப்பட்டவுடன் நாம் நிரலினை எழுத தொடங்கலாம்.

நிரலை எழுதி எப்படி Compile மற்றும் Run செய்வது :

Application => Accessories சென்று Text Editor ஐத திறந்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு தேவையான நிரலை எழுதி home folder க்குள் சேமித்துக்கொள்ளுங்கள்.

சேமித்து முடித்தப்பிறகு முனையத்தில் javac Filename.java எனக்கொடுத்து compile செய்துக்கொள்ளுங்கள். java Filename எனக்கொடுத்து நிரலினை இயக்கி நிரலினுடைய வெளியிட்டைப் பெறுங்கள். நான் இங்கு Filename எனக்கொடுத்திருக்கும் இடத்தில் நீங்கள் ஜாவா நிரலை எந்த பெயருடன் சேமித்திர்களோ அந்த பெயரைத்தான் கொடுக்க வேண்டும்.

Oct 1, 2010

முனையத்தின் மூலம் நாம் Folder மற்றும் Sub-Folder னுடைய அளவுகளைக் கண்டுபிடிக்கலாம்

முனையத்தின் மூலம் நாம் Folder மற்றும் Sub-Folder னுடைய அளவுகளைக் கண்டுபிடிக்கலாம்.முனையத்தில் நீங்கள் எந்த Folder னுடைய அளவினை கண்டுபிடிக்க வேண்டுமோ அந்த Folder க்குள் மாறிக்கொள்ளுங்கள்.மாறிக்கொண்டு முனையத்தில் Folder Size ஐக் கண்டுபிடிக்க du -sh எனக் கொடுங்கள்.Sub-Foler Size ஐக் கண்டுபிடிக்க du * -sh எனக் கொடுங்கள்.

-sh என்பதில்

s என்பது Summarise என்பதையும், h என்பது human readable format என்பதையும் குறிக்கிறது.