Jun 10, 2010

உபுண்டு 10.4 Netbook Edition எனது அனுபவம்

Netbook Edition னுடைய Desktop
எனக்கும் ரொம்ப நாளாக Ubuntu Netbook Edition ஐ எனது Compaq 515 மடிக்கணினியில் நிறுவி பார்த்துவிடவேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது.

Ubuntu 10.04 Netbook Edition 699 MB அளவு கொண்டது.இதை தரவிறக்கம் செய்வது என்பது கொஞ்சம் கடினமான வேலைதான் ஏனென்றால் இணையத்தினுடைய வேகப் பிரச்சனைதான்.Linux Mint (Elyssa) ற்கு அடுத்து என்னுடைய மடிக்கணினிக்கு எந்த லினக்ஸ் இயங்குதளமும் அனைத்து வசதிகளுடன் அமையவில்லை.

நான் தற்பொழுது பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டு 9.04 கூட ஒலி வசதி இல்லாமல் தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
Netbook Edition -ல் இணையம்
இந்த மாத LINUX For You Magazine உடன் வந்த DVD யில் Ubuntu 10.04Desktop Edition,Kubuntu 10.04,Ubuntu Netbook Edition மூன்றையும் சேர்த்து கொடுத்திருந்தார்கள்.

Ubuntu Netbook Edition ஐ ISO கோப்பாக கொடுத்திருந்தார்கள்.எனது மடிக்கணினியில் நிறுவியிருந்த உபுண்டு 9.04 -ல் Startup Disk Creater மூலம் Pendrive -ல் Ubuntu 10.04 Netbook Edition னுடைய ISO கோப்பினை Live Bootable ஆக மாற்றினேன்.Pendrive -னை USB port -ல் சொருகினேன்.BIOS -ல் F9 key யினை அழுத்தி USB Hard Drive என்பதை தேர்வு செய்து Pendrive -ல் இருந்து boot செய்தேன்.

இதை நான் பென்டிரைவில் வைத்து Live ஆக தான் பயன்படுத்திப் பார்த்தேன்.தொடக்கமே நன்றாக இருந்தது இரண்டு நிமிடத்திலேயே தயாரகி Desktop வந்தது.Desktop னை அட்டகாசமாக வடிமைத்திருக்கிறார்கள்.

Wallpapers களெல்லாம் மிக அழகாக இருக்கிறது.ஒலி வசதி கனகச்சிதமாக வேலைசெய்தது,Bluetooth நன்றாக வேலை செய்தது
Netbook Edition -ல் Aircel,Tata Docoma ற்கான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது
அடுத்த முக்கியமான விஷயம் Mobile Wireless Broadband உபுண்டு 9.04 ல் Aircel, Tata docoma ற்கான தேர்வுகள் கொடுக்கப்படவில்லை ஆனால் Ubuntu 10.04 Netbook Edition -ல் இதையெல்லாம் சேர்த்திருக்கிறார்கள்.(உபுண்டு 10.04 லும் சேர்க்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் நான் உபுண்டு 10.04 ல் இந்த வசதியினை ஏற்படுத்திப்பார்க்கவில்லை)Mobile Broadband ற்க்கான வசதிகளை ஏற்படுத்துவதற்க்கான வழிமுறைகள் எளிமைபடுத்தியிருக்கிறார்கள்.(Airce Sim card ற்கான வழிமுறைகளை வைத்துக்கூறுகிறேன்)
Netbook Edition -ல் இந்த பதிவு எழுதப்பட்டப்பொழுது
WiFi வசதியினை சோதனைச் செய்துப் பார்க்க முடியவில்லை நான் இப்பொழுது பல்கலைக்கழ்கத்தினுடைய தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருப்பதால் நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றால்தான் WiFi வசதியினை சோதனைச்செய்துப்பார்க்க முடியும்.மின்கலனினுடைய (Battery) மின்சக்தியினை ரொம்ப நேரம்(1மணி நேரம் 40 நிமிடங்கள்) பயன்படுத்த முடிந்தது.

ஆனால் என்னுடைய விண்டோஸ் இயங்குதளத்தில் 1 மணி நேரம்தான் பயன்படுத்த முடியும்.இப்பொழுது அமலில் இருக்கும் மின்வெட்டு பிரச்சனைக்கும் உபுண்டு லினக்ஸ் உகந்ததாக இருக்கிறது.

உபுண்டு 9.04 ஐ விட உபுண்டு 10.04 Netbook Edition னில் Mobile Broadband (அதாங்க செல்பேசியில் உள்ள GPRS வசதியினை பயன்படுத்தி இணையத்தைப் பயன்படுத்துவது.) னுடைய இணையத்தின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. Netbook Edition -ஐ உபுண்டு 8.04 ("Hardy Heron") லிருந்து வெளியிட்டு வருகிறார்கள்.

Netbook Edition -ல் Gimp சேர்க்கப்படவில்லை. விளையாட்டுகள் ஐந்துதான் இருந்தது.

OpenOffice Suite இருக்கிறது.மொத்தத்தில் Ubuntu 10.04 Netbook Edition என்னைக்கவர்ந்து விட்டது.மடிக்கணினி வைத்திருப்பவர்கள் ஒரு முறை Live ஆக பயன்படுத்திபாருங்கள்.

Netbook Edition -ஐப் பற்றிய Wikipedia வின் கட்டுரை

Netbook Edition ஐ தரவிறக்க

3 comments:

சந்திரசேகரன் said...

இந்த பதிப்பு மிக பயன்னுள்ளதாக மடி கணினியை பயன்படுத்தும் நண்பர்களுக்கு இருக்கும் நல்ல பகிர்வு நண்பரே

Anonymous said...

ஒலி வேலை செய்கிறதா? மகிழ்ச்சி.
practical problem இருந்தால் அதை எடுத்துக்கொண்டு தீர்வு கண்டு மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறீர்கள். நன்றி.

இரா.கதிர்வேல் said...

//suthanthira.co.cc said...
ஒலி வேலை செய்கிறதா? மகிழ்ச்சி.practical problem இருந்தால் அதை எடுத்துக்கொண்டு தீர்வு கண்டு மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறீர்கள். நன்றி.//

நன்றி சார்.

உபுண்டு 9.04 ல் ஒலிவசதி வேலை செய்யவில்லை சார் , அடுத்தடுத்த 9.10, 10.04 பதிப்புகளை நிறுவக்கூடமுடியவில்லை. மற்றபடி வீடியோ வசதிகள்(ஒலியில்லாமல்) அனைத்தும் வேலைசெய்கிறது.என்னதான் இருந்தாலும் உபுண்டு 9.04 லினக்ஸை விட்டு விர மனமில்லை சார்.