உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 38 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.
Jun 27, 2010
Jun 14, 2010
பென்டிரைவில் பெடோரா லினக்ஸை Live Bootable ஆக உருவாக்குவது எப்படி?
இன்று பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்படும் உபுண்டு லினக்ஸை எப்படி பென்டிரைவில் பயன்படுத்துவது என்று நாம் எல்லோருக்கும் தெரியும்.இதுபோல பெடோரா லினக்ஸையும் நாம் பயன்படுத்தலாம்.இந்த விஷயம் எனக்கு ரொம்ப நாளாக தெரியாது ஒரு நாள் எதார்த்தமாக இணையத்தில் உலாவிக்கொண்டிருந்த பொழுது, உபுண்டு லினக்ஸை பென்டிரைவில் பயன்படுத்தும் போது பொடோராவிற்கும் இந்த வசதி கண்டிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கூகிளில் தேடினேன்.கூகிள் Fedora LiveUSB Creator என்ற மென்பொருள் இருப்பதாக தகவலினைக் கொடுத்தது.இந்த மென்பொருளினைப் பயன்படுத்தித்தான் நாம் பொடோரா லினக்ஸை பென்டிரைவில் LiveBootable ஆகப் பயன்படுத்தப்போகிறோம்.
சரி இவ்வாறு பென்டிரைவில் பயன்படுத்துவதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா
சரி இவ்வாறு பென்டிரைவில் பயன்படுத்துவதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா
- CD யில் Live ஆக பயன்படுத்துவதை விட பென்டிரைவில் Live ஆக பதிந்து பயன்படுத்தும் போது இயங்குதளத்தை விரைவாக பயன்படுத்தலாம்.
- நீங்கள் வைத்திருக்கும் ISO கோப்பினை CD யில் Bootable ஆக எழுதும் நேரத்தை விட பென்டிரைவில் விரைவாக எழுதிவிடலாம்.அதாவது Write பண்ணுவது.
- உங்கள் கணினியினுடைய CD/DVD Drive வேலை செய்யாத பொழுது, பென்டிரைவை பயன்படுத்தி லைவ் வாக பயன்படுத்தலாம்.
- உங்களினுடைய விண்டோஸ் இயங்குதளம் பூட்டாக மறுக்கிறது ஆனால் உங்கள் கணினியில் உள்ள முக்கியமான தகவல் உங்களுக்கு தேவைப்படுகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நீங்கள் Bootable ஆக மாற்றி வைத்திருக்கும் பென்டிரைவை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தகவலை CD/DVD,Pendrive அல்லது Memory Card இவைகளில் சேமித்து விரைவாக எடுத்துச்செல்லலாம்.இது போன்ற சூழ்நிலைகள் உங்களுடைய நண்பர்களுக்கு ஏற்பட்டாலும் இதே முறையினை கடைப்பிடிக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு Click செய்யுங்கள்
இந்த மென்பொருளை பற்றிய விக்கீபீடியாவின் பாக்கம்
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நீங்கள் உங்களினுடைய விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்ளுங்கள். (பெடோரா லினக்ஸில் நிறுவிக்கொள்ளும் வடிவிலும் உள்ளது).
அதன் பிறகு உள்ள வழிமுறைகளை நான் இங்கு விளக்கியுள்ளேன்.- பென்டிரைவினை Fedora Linux Live Bootable ஆக மாற்றுவதற்கு முன்பு பென்டிரைவில் உள்ள முக்கியமான தகவல்கள் அனைத்தையும் Backup எடுத்துவிடுங்கள்.
- விண்டோஸ் இயங்குதளத்தில் All Programes -> Fedora LiveUSB Creator சென்று Fedora LiveUSB Creator ஐ திறந்துகொள்ளுங்கள்.திறந்தவுடன் படம்-1 ல் உள்ளதுப்போன்றுக்காட்டும்.
படம்-2
- Browse Button ஐ அழுத்தி நீங்கள் சேமித்து வைத்திருக்கும்(ISO கோப்பு சி.டி / டி.வி.டி யில் கூட இருக்கலாம்) Fedora Linux னுடைய ISO கோப்பினை தேர்வு செய்து Open Button ஐ அழுத்துங்கள்.(படம்-2 ஐ பெரிதுபடுத்திப்பார்க்கவும்)
- நீங்கள் தேர்வு செய்த ISO கோப்புக்காட்டப்பட்டிருக்கும்.Create Live USB Button ஐ அழுத்துங்கள்.
- ISO கோப்பினை பென்டிரைவில் 100 % எழுதும் வரைக் காத்திருங்கள்.என்னுடைய கணினியில் சரியாக மூன்று நிமிடங்களில் எழுதிவிட்டது.
எனது மடிக்கணினியில் பென்டிரைவில் இருந்து பூட் ஆவதற்காக தேர்வு செய்தபோது
- விண்டோஸ் இயங்குதளத்திலிருந்து Restart செய்யவும்.பென்டிரைவ் USB port லேயே சொருகி வைத்திருங்கள்.
- உங்கள் கணினியினுடைய BIOS க்கு சென்று USB யிலிருந்து பூட் ஆகுமாறு BIOS யினை அமைத்து BIOS யினை சேமித்துவிட்டு மறுதொடக்கம் செய்யுங்கள்.
- உங்கள் கணினி பென்டிரைவில் இருந்து பெடோரா லினக்ஸினை இயக்கும்.
பெடோரா லினக்ஸினை பென்டிரைவில் இருந்து Live ஆக இயக்கி Nokia Xpress Music 5310-c2 அலைபேசியில் Aircel Sim card னுடைய GPRS வசதியினை Mobile Broadband வசதிமூலம் இணையத்தை இணைத்து நெருப்பு நரியில் என்னுடைய வலைப்பூவினை பார்வையிட்டப்பொழுது.
குறிப்பு:
குறிப்பு:
இந்த பதிவு முழுவதும் பொடோரா லினக்ஸினை Live ஆக பயன்படுத்தியும், தமிழில் தட்டச்சு செய்ய iBus வசதியினையும் மற்றும் இணையத்திற்கு Mobile Broadband வசதியினையும் பயன்படுத்தி எழுதப்பட்டது.
Jun 13, 2010
பெடோரா லினக்ஸை நிறுவுவது எப்படி ? PDF வடிவில்
நான் உபுண்டு லினக்ஸிற்கு அடுத்து பயன்படுத்தும் லினக்ஸ் இயங்குதளம் பெடோரா லினக்ஸ் ஆகும்.பெடோரா லினக்ஸினை நிறுவுவதற்கு உண்டான PDF கோப்பினை உருவாக்கியுள்ளேன் இங்கு சென்று நீங்கள் தரவிறக்கி மற்றும் படித்துக்கொள்ளலாம்.இந்த கோப்பினைப்பற்றிய பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறேன்.உங்ளுடைய பின்னூட்டங்கள் என்னுடைய தவறினை திருத்திக்கொள்ள உதவியாகவும் மற்றும் என்னை ஊக்குவிக்கும் விதமாகவும் அமையும்.
பெடோரா லினக்ஸிற்காக http://fedoraintamil.blogspot.com என்ற ஒரு வலைப்பூவினை தோழர் சுபாஷ் அவர்கள் எழுதி ஆவணப்படுத்திவைத்திருக்கிறார்.என்னவென்று தெரியவில்லை தோழர் சுபாஷ் அவர்கள் தொடர்ந்து எழுதவில்லை.இந்த வலைப்பூவிற்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு பெடோரா லினக்ஸினைப் பற்றிய போதுமான தகவலகள் கிடைக்கும்.இந்த வலைப்பூவிலும் பெடோரா லினக்ஸை நிறுவுவது பற்றி சுபாஷ் அவர்கள் எழுதியுள்ளர்.அப்புறம் ஏன் இந்த பெடோரா லினக்ஸை நிறுவுவது பற்றி நான் PDF கோப்பாக உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீகளா.PDF கோப்பாக கொடுத்துவிட்டால் பெடோரா லினக்ஸினை நிறுவுவதற்க்கான ஒரு தமிழ் கையேடாக அமையுமல்லவா அதனால்தான்.நான் இந்த வலைப்பூவினை உருவாக்கும் போதே Ubuntu, Debian, Fedora, Mandriva, Open SUSE, Redhat, Linux Mint போன்ற பிரபலமான லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவுவதற்கான PDF கோப்புகளை உருவாக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன்.நானும் ஒரு காலத்தில் லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை இணையத்தில் தேடி அலைந்திருக்கிறேன்.அனைத்தும் ஆங்கிலத்திலேயே கிடைத்தது இவ்வாறு கிடைத்ததும் எனக்கு உதவவில்லை.லினக்ஸிற்கான தகவல்கள் தமிழில் வடுவூர்குமார்,மயூரான்,சுபாஷ் மற்றும் சுதந்திர இலவச மென்பொருள் இந்த வலைப்பூக்களில் இருப்பதுதான் எனக்கும் முதலில் தெரியும் இந்த வலைப்பூக்களைல்லாம் முதலில் நான் பார்த்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.நான் கடந்த மூன்று வருடங்களாக LINUX For You இதழை வாங்கி படித்து வருகிறேன் மாதாமாதம் இந்த இதழுடன் ஒரு DVD யும் CD யும் கொடுப்பார்கள் இவ்வாறு கொடுக்கப்படும் DVD யில் ஒரு பிரபலமான அப்போதைய லினக்ஸ் இயங்குதளத்தினை கொடுப்பார்கள்.அப்பொழுது என்னிடம் கணினி இல்லை இவ்வாறு எனக்கு கிடைக்கும் வட்டுக்களை நிறுவிப்பார்க்கும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை பிறகு என்னுடைய நண்பர் மேற்பனைக்காடு செ.சந்திரசேகரன் கணினி வாங்கினார் நண்பர் கணினி வாங்கிய பிறகுதான் இந்த லினக்ஸ் இயங்குதளங்களையெல்லாம் நிறுவிப்பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது நானும் எனது நண்பரும் சொந்தமாகவே Ubuntu, Debian, Fedora, Mandriva, Open SUSE, Redhat, Linux Mint இன்னும் பிற லினக்ஸ் இயங்குதளங்களையும் நிறுவிக்கற்றுக்கொண்டோம்.நான் இப்பொழுது இணையத்தைப் பயன்படுத்துவது போல உள்ள வாய்ப்பெல்லாம் நாங்கள் பாலிடெக்னிக் படிக்கும் பொழுது அமையவில்லை வாரத்தில் இரண்டு நாட்கள் இணைய வசதி இருக்கும் மையத்திற்கு செல்வோம் ஒரு மணி நேரத்திற்கு 20 ரூ.ஆகையால் என்னைப்போன்று லினக்ஸ் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு இவ்வாறு உருவாக்கும் PDF கோப்புகள் உதவியாக அமையும் என்று நினைக்கிறேன்.
நான் இவ்வாறு உருவாக்கிய PDF கோப்புகளிலேயே நான் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கியது Debian லினக்ஸை நிறுவுவதற்க்காக உருவாக்கிய கோப்புதான் இந்த கோப்பினைப் பற்றி வாசகர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் கூட கிடைக்கவில்லை.
இதில் நண்பர் மணிகண்டன் அவர்கள் Redhat, Linux Mint இவைகளை நிறுவுவதற்கான PDF கோப்புகளை உருவாக்கி அளித்துவிட்டார்.இந்த முயற்சிக்கு நண்பர் மணிகண்டன் அளித்த உதவி மிகப்பெரியது ஏனென்றால் உண்மையிலேயே இவ்வாறு நிறுவுதலுக்கு உண்டான PDF கோப்புகளை உருவாக்குவதற்கு ஒரு பதிவினை இடுவதை விட பல மடங்கு சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த PDF கோப்பினைக் கூட நான் எழுத ஆரம்பித்தது இரண்டு மாதத்திற்கு முன்பு ஆனால் இதை ஒரு சில காரணங்களுக்காக முழுமையாக எழுதி முடிக்க முடியவில்லை இப்பொழுதுதான் முடிந்தது.
மீதமுள்ள லினக்ஸ் இயங்குதளங்களையும் நிறுவுவதற்கு உண்டான PDF கோப்பினை உருவாக்க முயற்சிக்கிறேன்.
நீங்கள் லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவிக்கற்றுக்கொள்ள விரும்பினால் Sun Virtual Box, VM ware Workstation மென்பொருள்களை நிறுவிக்கற்றுக்கொள்ளலாம்.இந்த இரண்டையும் விண்டோஸ் இயங்குதளத்திலேயே, நிறுவிக்கொள்ளலாம்.லினக்ஸில் Sun Virtual Box, Qemu ஐப் பயன்படுத்தலாம் இந்த மென்பொருள்களுக்கு Virtualisation மென்பொருள்கள் என்று பெயர். அதாவது இந்த மென்பொருள்களை பயன்படுத்தி ஒரு இயங்குதளத்திற்குள் நிறைய இயங்குதளங்களை நிறுவிக்கொள்ளலாம் இந்த மென்பொருள்கள் லினக்ஸை நிறுவிக்கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்.வன்வட்டிற்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.நிறுவுவதற்கு உண்டான வழிகாட்டிகளை படித்துப்பார்த்து எவ்வாறு நிறுவுவது என்று தெரிந்து கொண்டு Sun Virtual Box, VM ware Workstation மென்பொருள்களில் நிறுவி பழகிக்கொள்ளுங்கள்.உண்மையிலேயே ஹார்டுவேர் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ரொம்பவும் பயன்படும்.
இந்த மென்பொருள்களைப்பற்றி நண்பர்கள் மணிகன்டன் மற்றும் இரா.குமரேசன் அவர்களும் எழுதிவிட்டார்கள்.திரும்பவும் நானும் எழுதுவது என்பது தேவையில்லை.
முக்கியமான குறிப்பு:

Ubuntu Linux, Ubuntu Inside Install, Fedora ,Debian லினக்ஸை நிறுவுவதற்கு PDF கோப்புகளை தயாரித்து பதிவாகவும் பதிவுசெய்து விட்டேன்.
நண்பர் மணிகன்டன் அவர்களும் Redhat, Linux Mint லினக்ஸை நிறுவுவதற்கு PDF கோப்புகளை தயாரித்து பதிவு செய்து விட்டார்.
மூதமுள்ள Madriva (Mandrake), Open Suse, FreeBSD, போன்ற வழங்களுக்கு நிறுவுதலுக்குன்டான PDF கோப்புகளைத் தயாரித்தால் பயனுள்ளதாக அமையுமா என்று உங்களுடைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

Jun 10, 2010
உபுண்டு 10.4 Netbook Edition எனது அனுபவம்
எனக்கும் ரொம்ப நாளாக Ubuntu Netbook Edition ஐ எனது Compaq 515 மடிக்கணினியில் நிறுவி பார்த்துவிடவேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது.
Ubuntu 10.04 Netbook Edition 699 MB அளவு கொண்டது.இதை தரவிறக்கம் செய்வது என்பது கொஞ்சம் கடினமான வேலைதான் ஏனென்றால் இணையத்தினுடைய வேகப் பிரச்சனைதான்.Linux Mint (Elyssa) ற்கு அடுத்து என்னுடைய மடிக்கணினிக்கு எந்த லினக்ஸ் இயங்குதளமும் அனைத்து வசதிகளுடன் அமையவில்லை.
நான் தற்பொழுது பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டு 9.04 கூட ஒலி வசதி இல்லாமல் தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

இந்த மாத LINUX For You Magazine உடன் வந்த DVD யில் Ubuntu 10.04Desktop Edition,Kubuntu 10.04,Ubuntu Netbook Edition மூன்றையும் சேர்த்து கொடுத்திருந்தார்கள்.
Ubuntu Netbook Edition ஐ ISO கோப்பாக கொடுத்திருந்தார்கள்.எனது மடிக்கணினியில் நிறுவியிருந்த உபுண்டு 9.04 -ல் Startup Disk Creater மூலம் Pendrive -ல் Ubuntu 10.04 Netbook Edition னுடைய ISO கோப்பினை Live Bootable ஆக மாற்றினேன்.Pendrive -னை USB port -ல் சொருகினேன்.BIOS -ல் F9 key யினை அழுத்தி USB Hard Drive என்பதை தேர்வு செய்து Pendrive -ல் இருந்து boot செய்தேன்.
இதை நான் பென்டிரைவில் வைத்து Live ஆக தான் பயன்படுத்திப் பார்த்தேன்.தொடக்கமே நன்றாக இருந்தது இரண்டு நிமிடத்திலேயே தயாரகி Desktop வந்தது.Desktop னை அட்டகாசமாக வடிமைத்திருக்கிறார்கள்.
Wallpapers களெல்லாம் மிக அழகாக இருக்கிறது.ஒலி வசதி கனகச்சிதமாக வேலைசெய்தது,Bluetooth நன்றாக வேலை செய்தது

அடுத்த முக்கியமான விஷயம் Mobile Wireless Broadband உபுண்டு 9.04 ல் Aircel, Tata docoma ற்கான தேர்வுகள் கொடுக்கப்படவில்லை ஆனால் Ubuntu 10.04 Netbook Edition -ல் இதையெல்லாம் சேர்த்திருக்கிறார்கள்.(உபுண்டு 10.04 லும் சேர்க்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் நான் உபுண்டு 10.04 ல் இந்த வசதியினை ஏற்படுத்திப்பார்க்கவில்லை)Mobile Broadband ற்க்கான வசதிகளை ஏற்படுத்துவதற்க்கான வழிமுறைகள் எளிமைபடுத்தியிருக்கிறார்கள்.(Airce Sim card ற்கான வழிமுறைகளை வைத்துக்கூறுகிறேன்)
WiFi வசதியினை சோதனைச் செய்துப் பார்க்க முடியவில்லை நான் இப்பொழுது பல்கலைக்கழ்கத்தினுடைய தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருப்பதால் நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றால்தான் WiFi வசதியினை சோதனைச்செய்துப்பார்க்க முடியும்.மின்கலனினுடைய (Battery) மின்சக்தியினை ரொம்ப நேரம்(1மணி நேரம் 40 நிமிடங்கள்) பயன்படுத்த முடிந்தது.
ஆனால் என்னுடைய விண்டோஸ் இயங்குதளத்தில் 1 மணி நேரம்தான் பயன்படுத்த முடியும்.இப்பொழுது அமலில் இருக்கும் மின்வெட்டு பிரச்சனைக்கும் உபுண்டு லினக்ஸ் உகந்ததாக இருக்கிறது.
உபுண்டு 9.04 ஐ விட உபுண்டு 10.04 Netbook Edition னில் Mobile Broadband (அதாங்க செல்பேசியில் உள்ள GPRS வசதியினை பயன்படுத்தி இணையத்தைப் பயன்படுத்துவது.) னுடைய இணையத்தின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. Netbook Edition -ஐ உபுண்டு 8.04 ("Hardy Heron") லிருந்து வெளியிட்டு வருகிறார்கள்.
Netbook Edition -ல் Gimp சேர்க்கப்படவில்லை. விளையாட்டுகள் ஐந்துதான் இருந்தது.
OpenOffice Suite இருக்கிறது.மொத்தத்தில் Ubuntu 10.04 Netbook Edition என்னைக்கவர்ந்து விட்டது.மடிக்கணினி வைத்திருப்பவர்கள் ஒரு முறை Live ஆக பயன்படுத்திபாருங்கள்.
Netbook Edition -ஐப் பற்றிய Wikipedia வின் கட்டுரை
Netbook Edition ஐ தரவிறக்க

Jun 5, 2010
Nokia Xpress Music 5310c அலைபேசியில் Aritel GPRS வசதியினைக் கொண்டு உபுண்டு 9.04 ல் Internet Connect செய்வது எப்படி?
இன்று கணினி பயன்படுத்தும் அனைவரும் Internet என்ற இணையவசதியினை பயன்படுத்துகின்றனர்.இந்த இணைய சேவையை நிறைய நிறுவனங்கள் அவர்களுடைய பாணியில் வழங்குகின்றனர்.முந்தைய நாளிலெல்லாம் எனக்கு தெரிந்து இண்டர்நெட்டை பயன்படுத்த Dial Up modem த்தைக்கொண்டு BSNL தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து Dial up account னினை பெற்று அதன்மூலம் இணையத்தை பயன்படுத்தி வந்தோம்.ஆனால் இன்றைய நாளிலோ நிலைமையே வேறு ஏனென்றால் இணையத்தை பயன்படுத்த எத்தனை வசதிகள் Reliance Netconnect stick, Tata Indicam Net Stick, Airtel Net Stick, MTS net Stick, BSNL net Stick, BSNL broadband, Reliance Broadband, Airtel Broadband இன்னும் எத்தனையோ வசதி இது தவிர செல்பேசிகளில் GPRS வசதியின் மூலம் இணைய வசதி இவ்வாறு இணையத்தை பயன்படுத்த எவ்வளவோ வழிகள்.இந்த வசதிகளிலேயே மிகவும் எளிமையாக குறைவான கட்டணத்தில் இணையத்தை பெற ஒரே வழி செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் GPRS வசதிதான்.என்ன ஒன்று உங்களுடைய செல்பேசி GPRS வசதியுள்ள செல்பேசியாக இருக்க வேண்டும்.GPRS வசதியின் மூலம் பெறப்படும் இணைய இணைப்பின் வேகம் குறைவாகத்தான் இருக்கும்.நான் இந்த வலைப்பூவினை படத்துடன் விளக்கி எழுதும் அளவிற்கு வேகம் போதுமானதாக இருக்கிறது.தரவிறக்கம் வேகம் ஒரளவு உள்ளது நான் இறுதியாக எழுதிய நான்கு பதிவுகள் இந்த வசதியினைக் கொண்டுதான் எழுதப்பட்டது.நீங்கள் GPRS வசதியுள்ள எந்த நிறுவனத்தின் செல்பேசி வைத்திருந்தாலும் அந்த நிறுவனத்தினுடைய செல்பேசியுடன் ஒரு வட்டுக்கொடுப்பார்கள் அதில் உள்ள மென்பொருளை நிறுவி விண்டோஸ் இயங்குதளத்தில் உங்கள் செல்பேசியில் உள்ள GPRS வசதிமூலம் விண்டோஸ் இயங்குதளத்தில் இணையத்தில் உலாவலாம்.ஆனால் செல்பேசி நிறுவனங்கள் எதுவும் லினக்ஸ் இயங்குதளத்தில் செல்பேசியினை கணினியுடன் இணைப்பதற்கான மென்பொருளகளை வழ்ங்குவதாக தெரியவில்லை ஆனால் எந்த மென்பொருள்களின் உதவியல்லாமல் உபுண்டு லினக்ஸில் நாம் செல்பேசியில் உள்ள GPRS வசதியின் மூலம் உபுண்டு லினக்ஸில் Internet Connect செய்து பயன்படுத்தலாம்.நான் இங்கு கொடுத்துள்ளது Nokia Xpress Music 5310c செல்பேசி மற்றும் Airtel Sim card க்கானது.ஆனால் நான் சொல்லியிருக்கும் இந்த வழிமுறை Nokia செல்பேசிக்கு மட்டுமல்ல மற்ற நிறுவனங்களினுடைய செல்பேசிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் நான் nokia செல்பேசி மட்டுமில்லாது என் நண்பர் இரா.குமரேசன் அவர்களினுடைய LG மாடல் செல்பேசி, பிரகாஷ் அவர்களினுடைய Samsung மாடல் செல்பேசி, யோகேஷ் அவர்களினுடைய Samsung corby மாடல் செல்பேசி ஆகியவைகளையும் பயன்படுத்தியுள்ளேன்.சரி விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
Nokia Xpress Music 5310c,Airtel GPRS இவற்றைக் கொண்டு எப்படி இணையத்தை இணைத்தேன் என்பதை விளக்கமாக கூறிவிடுகிறேன்.
Nokia Xpress Music 5310c,Airtel GPRS இவற்றைக் கொண்டு எப்படி இணையத்தை இணைத்தேன் என்பதை விளக்கமாக கூறிவிடுகிறேன்.
- முதலில் என்னுடைய செல்பேசியில் Airtel GPRS Setting -யினை Airtel நிறுவனத்திடமிருந்து வாங்கி செல்பேசியில் சேமித்துக்கொண்டேன்.செல்பேசியினை off செய்து on செய்தேன்.
- Menu => internet => Browser சென்று இணையதள முகவரிகளைக்கொடுத்தேன் மிக அழகாக இணைந்ததுடன் இணையத்தில் உலாவ முடிந்தது.சரி செல்பேசி பக்கம் உள்ள வேலைகள் முடிந்து விட்டது.அடுத்து உபுண்டு 9.04 லினக்ஸ் பக்கமாக உள்ள வேலைகள் அதை படத்துடன் காண்போம்.
- செல்பேசியினுடைய Data Cable -னை கணினியுடைய USB port ல் இணைத்தேன்
- System => Preferences சென்று Network Connections என்பதை தேர்வு செய்து Click செய்யுங்கள்.படம் இரண்டில் உள்ளது போன்ற திரைக் காண்பிக்கப்படும்.
- படம்-2 -ல் உள்ள திரையில் Mobile Broadband என்பதை தேர்வு செய்து Add Button ஐ அழுத்துங்கள்.அழுத்தியவுடன் படம்-3 உள்ளது போன்ற திரைக்காண்பிக்கப்படும்
- படம்-3 உள்ள திரையில் Forward Button ஐ அழுத்துங்கள்.Forward Button ஐ அழுத்தியவுடன் படம்-4 -ல் உள்ளது போன்ற திரைக்காண்பிக்கப்படும்
- படம்-4 ல் உள்ளது திரையில் Country என்பதற்கு கீழ் India வையும், Provider என்பதற்கு கீழ் Airtel என்பதையும் தேர்வு செய்யவும் நீங்கள் Airtel அல்லாமல் வேறோரு sim card அதாவது vodafone,BSNL வைத்திருந்தால் அவற்றை தேர்வு செய்யவும்.இவற்றையெல்லாம் தேர்வு செய்து Forward Button ஐ அழுத்துங்கள் அழுத்தியவுடன் படம்-5 உள்ளதுபோன்ற திரைக் காண்பிக்கப்படும்.
படம்-5
- படம்-5 -ல் Apply என்பதை click செய்யுங்கள்.Apply என்பதை click செய்தவுடன் படம்-6 -ல் உள்ளது போன்ற திரைக் காண்பிக்கப்படும்.
படம்-6
- படம்-6 -ல் உள்ள திரையில் Airtel என்பதை தேர்வு செய்து Edit Button ஐ click செய்யுங்கள்.click செய்தவுடன் படம்-7 ல் உள்ள திரைக் காண்பிக்கப்படும்.
படம்-7
- படம்-7 ல் உள்ள திரையில் Connect Automatically எனபதை டிக் செய்து Apply Button ஐ அழுத்துங்கள்.அழுத்தியவுடன் ஒரு சில வினாடிகளில் Connection Establish ஆகி விடும் பார்க்க படம்-8
Jun 3, 2010
Full Cirlce Magazine 37 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் 37 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.
Subscribe to:
Posts (Atom)