பழைய 500, 1000 ரூபாய் நோட்டு பிரச்சனையைப் பற்றி ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். எனது நண்பர் பிரபாகரனிடம் 2000 ரூபாய் பணம் கேட்டிருந்தேன். அவர் என்னுடைய வங்கி கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாக அனுப்பி வைத்திருந்தார். அதை எடுப்பதற்காக இன்று மதியம் மறுபடியும் வங்கிக்குச் சென்றிருந்தேன். வங்கிக்குள் நுழைந்தவுடனையே ஆச்சரியம் காத்திருந்தது. வங்கியில் மொத்தமே 5-வாடிக்கையாளர்கள்தான் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். ஒருவேளை பணத்தட்டுப்பாடு தீர்ந்துவிட்டதோ என நினைத்தேன்.
வங்கி ஊழியரிடம் சென்று சார் பணம் எடுக்கனும் எனக்கு இங்குதான் வங்கி கணக்கு இருக்கிறது என்று கூறினேன். அவர் உடனே அதெல்லாம் இருக்கட்டும் முதலில் கவுண்டருக்குச் சென்று பணம் கொடுப்பவரிடம் எனக்கு 2,000 ரூபாய் பணம் தேவை பணம் இருக்கிறதா என கேட்டு வாருங்கள். அவர் இருக்கிறது என்று கூறினால் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என கூறினார்.
சார் பணம் இருக்கிறதாம் என்று கூறினேன். அதன்பிறகு அவர் 'சார் 100 ரூபாய் நோட்டு கிடைக்காது. 2000 ரூபாய் நோட்டு மட்டும்தான் இருக்கிறது. சம்மதம் என்றால் செக் எழுதி எடுத்துக்கொள்ளுங்கள்' எனக்கூறினார். வேறு என்ன செய்வது அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் என் கையில் புதிய 2,000 ரூபாய் நோட்டு இருந்தது.
அப்படினா ப.சிதம்பரம் கூறியது போல பணம் அச்சடித்து முடிக்க இன்னும் 7-மாதங்கள் ஆகும்னு சொன்னது உண்மைதான். கடல்லையே இல்லையாம்ங்கிற மாதிரி பேங்குலேயே பணம் இல்லையாம்.
நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னாடி நின்றுக்கொண்டிருந்தவர் பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து வங்கி கணக்கில் செலுத்தச்சொன்னார். உடனே கவுண்டரில் இருக்கும் ஊழியர் இது யாரோட கணக்கு உங்களுடையதா? அல்லது வேறு யாரோ ஒருவருடையதா எனக்கேட்டார். அவர் அதற்கு என் மருமகனுடையது என்று பதில் கூறினார். உடனே வங்கி ஊழியர் நீங்கள் பணம் செலுத்த முடியாது. ஏன் என்பதற்கான விளக்கத்தை அதோ அங்கு நிற்பவரிடம் சென்று கேளுங்கள் என்று வங்கி மேலாளரிடம் அனுப்பி வைத்தார். வங்கி மேலாளர் அவரிடம் 'ஐயா பழைய 500, 1000 ரூபாய் நோட்டை மற்றவர்கள் கணக்கில் செலுத்துவதற்கு வங்கி கணக்கு வைத்திருப்பவரிடம் அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும் இல்லையென்றால் செலுத்த முடியாது. புதிய 2000 ரூபாய் நோட்டு, பழைய 100 ரூபாய் நோட்டுக்கு அனுமதி கடிதம் தேவையில்லை' என்று கூறினார்.
நான் மாத இறுதியில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டால் அம்மாவிடம் சொல்லி 1000 ரூபாய் பணம் அனுப்பி வைக்கச் சொல்லுவேன். தம்பிதான் அனுப்பி வைப்பான். ஆனால் இப்போது இருக்கும் நிலைமையில் என்னுடைய அனுமதி கடிதம் தம்பிக்குச் சென்று, அதன்பிறகு அவன் என்னுடைய கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும். அப்பாவும், சித்தப்பாவும் வட மாநிலங்களில் இருக்கிறார்கள் அவர்கள் எப்படி எங்களுக்கு பணம் அனுப்புவார்கள்? இங்கு இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் எப்படி அவர்களுடைய குடும்பத்திற்கு பணம் அனுப்பி வைப்பார்கள்? அரசாங்கம் இதைப்பற்றியெல்லாம் யோசித்ததா?
நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு 56-இஞ்ச் அகலம் நெஞ்சை கொண்ட பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி கேட்டு பிரதமர் பதில் கூறியதாக இது நாள் வரை நான் அறியவில்லை. ஆனால் வானொலியில் வாய்கிழிய பேசுகிறார். அவருக்கு ஒன்வே கம்யூனிகேசன்தான் பிடிக்கும் போல.
புதிய இந்தியா பிறக்கும், பெட்ரோல் விலை குறையும், பொருளாதாரம் உயரும், மைக்ரோசாப்ட் லினக்ஸ் இயங்குதளம் வெளியிடும்னு பி.ஜே.பி காரர்களும், ஆர்.எஸ்.எஸ் காரர்களும் உளறிக்கொண்டே இருக்கின்றனர். அதற்கு இந்த இருவரின் சிலீப்பர் செல்லுகளும் ஆமா போடுகிறார்கள். இல்லையென்றால் 'எல்லையில் இராணுவ வீரர்கள்.... JIO SIM-ற்காக வரிசையில்.... கபாலி டிக்கெட்டிற்காக வரிசையில்.....' என பீலா விடுகிறார்கள். என்னதான் ஆகிறதுனு பொறுத்திருந்து பார்க்கலாம் ?
இதுக்குத்தான் மோடி வரணும்னு சொன்னவனுங்களையெல்லாம் நல்லா வச்சு செய்யுறாப்புல பிரதமரு! சாவுங்கடா! மீதம் இருக்கும் 30-மாதங்களிலும் இதைப்போன்ற அடாவடிகள் பி.ஜே.பி ஆட்சியில் தொடரும் என்பது மட்டும் உறுதி!
சரி வாங்க தேசத்துரோகி பட்டத்தையும் அப்படியே பின்னூட்டத்தில் வந்து கொடுத்துவிட்டு போங்க!