Dec 18, 2018

கேஉபுண்டுவில் Number Lock பொத்தானை தொடக்க நிலையில் தானாக இயங்க செய்வது எப்படி?

இரண்டு விதமான தட்டச்சு பலககைகளுடன் மடிக்கணினிகள் சந்தையில் கிடைக்கிறது. எண்களுக்கான பொத்தான்களை தனியாக கொண்ட பலகைகள், எண்களுக்கான பொத்தான்கள் தனியாக இல்லாத பலகைகள்.

Without Numeric Keys


With Numeric Keys
எண்களுக்கான பொத்தான்களை தனியாக கொண்ட மடிக்கணினிகளில் எண்களை விரைவாகவும், எளிமையாகவும் உள்ளீடு செய்யலாம். இந்த பொத்தான்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கென 'Num Lock' என்கிற பொத்தான் பலகையில் தனியாக இருக்கும். அதை அழுத்திவிட்டு, நாம் எண்களை உள்ளீடு செய்ய ஆரம்பிக்கலாம்.

Num Lock பொத்தானை நாம் ஒவ்வொரு முறையும் அழுத்திவிட்டு எண்களை உள்ளீடு செய்வது கடினமாக தோன்றினால் இதை கணினியின் தொடக்க நிலையிலேயோ அல்லது இயங்குதளத்தின் தொடக்க நிலையிலேயோ தானாக செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம்.

கணினியின் தொடக்க நிலையிலேயே கொண்டு வருவதற்கு BIOS அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டி வரும். நீங்கள் கேஉபுண்டு பயன்படுத்துபவராக இருந்தால் BIOS அமைப்பிற்குச் செல்லாமலேயே செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். எப்படி?

System Settings -> Input Devices -> Keyboard -> Hardware Tab -> Click 'Turn On' in NumLock on Plasma Startup -> Click 'Apply'


Dec 16, 2018

ஜிமெயில் மின்னஞ்சல் அறிவிப்புகளை செயல்படுத்துவது எப்படி?

தகவல் தொழில்நுட்பம் மட்டும்மல்லாது அனைத்துத்துறை வேலைகளிலும் மின்னஞ்சல் என்பது ஒரு முக்கியமான தகவல் தொடர்பு கருவி. சில மின்னஞ்சல்களுக்கு ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். நாம் ஏதாவது ஆழ்ந்த வேலைகளில் மூழ்கியிருக்கும் போது நமக்கு வந்திருக்கும் முக்கியமான மின்னஞ்சல்களை கவனிக்காமல் விட்டுவிடக்கூடும்.

அந்த மாதிரியான சூழலில் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களை அறிவிப்புகளாக கூறினால் நன்றாக இருக்குமல்லவா. ஜிமெயில் இந்த வசதியினை கொண்டிருக்கிறது.

இந்த வசதியினை செயல்படுத்த, உங்களுடைய ஜிமெயில் கணக்கின் அமைப்புக்குச்(settings) சென்று General என்பதைச் சொடுக்கி அதில் Desktop Notifications எனும் பிரிவில் உள்ள New mail notifications on என்பதைத் தேர்ந்தெடுத்து கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்தவும்.




இனிமேல் உங்களுக்கு புதிய மின்னஞ்சல் வந்தால் அது அறிவிப்பாக காட்டப்படும். நான் கேஉபுண்டு(Kubuntu) 18.04.1 LTS பயன்படுத்துகிறேன். இந்த வசதி நன்றாக வேலை செய்கிறது.

Dec 4, 2018

பணம் செய்ய விரும்பு

சிறு துளி பெரும் பணம் - எழுத்தாளர் சோம.வள்ளியப்பன்

 

பணம் செய்ய விரும்பு - நிதி.ஆலோசகர் வ.நாகப்பன்

 

நிதி நலம் - எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமி