உபுண்டுவில் இணைய இணைப்பைக் கொடுக்கவும். உபுண்டுவில் இணையம் வேலைசெய்கிறதா என உறுதிசெய்துவிட்டு. முனையத்தை(Terminal) திறக்கவும்.
கீழ்காணும் கட்டளைவரியினை முனையத்தில் இயக்கவும்.
sudo apt-get update; sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n ibus-gtk ibus-gtk3
இந்த கட்டளை வரி தமிழ் தட்டச்சுக்கு தேவையான பொதிகளை உபுண்டுவில் நிறுவும். முனையத்தை மூடிவிட்டு.
Logout செய்துவிட்டு மறுபடியும் Login செய்யவும்.
Settings -> Region & Language பிரிவுக்குச் செல்லவும். Input Source என்பதற்கு கீழே உள்ள '+' பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு மூன்று புள்ளிகளின் தோற்றத்துடன் இருக்கும் பொத்தானை அழுத்தவும்.
உள்ளீட்டுப் பெட்டியில் 'tamil' என தட்டச்சு செய்த பிறகு Other என்பதை சொடுக்கவும். அதில் உங்களுக்கு பிடித்தமான தட்டச்சு முறையை தேர்ந்தெடுத்து 'Add' பொத்தானை அழுத்தவும். நான் தமிழ் 99 உள்ளீட்டு முறையை தேர்ந்தெடுத்துள்ளேன். உதாரணமாக நான் Tamil(tamil99(m17n)) என்பதை தேர்வு செய்து 'Add' பொத்தானை அழுத்தியுள்ளேன்.
Region & Language சாளரத்தை மூடிவிட்டு. Windows+Space பொத்தானை அழுத்தி தமிழ் தட்டச்சு செய்யலாம் அல்லது வலது பக்க மேல் மூலையில் இருக்கும் 'en' என்பதை சொடுக்கி தமிழ் உள்ளீட்டு முறையை தேர்வு செய்துவிட்டும் தமிழ் தட்டச்சு செய்யலாம். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டுமென்றால் மேற்கண்ட முறையில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.
Text Editor ஐத் திறந்து தமிழில் தட்டச்சு செய்து மகிழுங்கள்.