Apr 15, 2015

இனிமேல்....ஈஸியாக, வாட்ஸ் அப்பில்... போட்டோ அனுப்ப முடியாது! யூ- டியூபில் படம் பார்க்க முடியாது. ஸ்கைபில் பேச முடியாது - வலைநொதுமை – NetNeutrality – சிறுகதை


நேத்திபுரம் பேருந்து நிறுத்தம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியானதோ முக்கியமானப் பேருந்து நிறுத்தமோ அல்ல. இந்தியப் பேருந்து நிறுத்தங்களுக்கே உரியதான தூசியும் தும்புமான ஒன்றுதான் இதுவும். இந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சுற்றி வீடுகளோ கடைகளோ கிடையாது. வெறும் பொட்டல் காடுதான். சுற்றுப்புறத்தில் இருக்கும் நான்கு கிராமங்களில் இருந்து நகரத்துக்கு வேலைக்குச் செல்பவர்களைச் சுமந்து செல்வதற்காக ஆறு பேருந்துகள் ஒரு நாள் முழுவதற்கும் வந்து செல்லும்.  அந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்பு என்ற சிறுவன் ‘ஐந்து ரூபாய்’, ‘ஒரு கப் டீ ஐந்து ரூபாய் என்று கூவி கூவி டீ விற்றுக்கொண்டிருந்தான். அப்பு டீக்கடையெல்லாம் வைத்திருக்கவில்லை. ஒரு தட்டில் டீ கப்களை அடுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்தான்.

இன்று தான் முதல் முதலாக டீ விற்கிறான், மொத்தமாக பதினோரு டீ விற்றிருக்கான். மூன்று வாரங்களுக்கு முன்புதான் பள்ளியை விட்டு இப்படி எதாவது ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக நின்றான். அப்புவின் கிராமத்திலேயே டீக்கடை வைத்திருக்கும் அவனது அப்புவுடைய நண்பரான சஞ்சயின் கடையில் வேலைக்குச் சேர்ந்தான் அப்பு. வயல்வெளிகளில் போய் விவசாய வேலை செய்வதைவிட இது சுலபாமனது என்பது அப்புவின் எண்ணம்.

தினந்தொறும் காலையில் எழுந்து பாலும், தண்ணீரும் கடைக்கு எடுத்துச் சென்று, டீயை வருபவர்களுக்கு பரிமாறி, பாத்திரங்களைக் கழுவ வேண்டும். அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்குக் கொண்டு சென்று டீ விற்கலாம் என்பது அப்புவின் யோசனை, சஞ்சயும் அதற்கு ஒப்புக்கொண்டார். இங்கிருந்து அங்கு எடுத்துச் சென்று விற்கும் டீ சூடாக இருக்க வேண்டும் என்று நினைத்து விரைவாகச் செல்வான்.

அவ்வளவு மந்தமான பொட்டல்காட்டு கூட்ரோடு பேருந்து நிலையத்தில் சூடாகவும் சுவையாகவும் டீ கிடைத்தால் விற்காமலா இருக்கும். விரைவில் அப்புவின் டீ பிரபலமாகிவிட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அப்புவே சிறிது காசைத் தேற்றி சில பழைய பாத்திரங்களை வாங்கி அந்தப் பேருந்து நிறுத்தத்தை ஒட்டி டீக்கடையைப் போட்டுவிட்டான். கூடவே காலையில் இட்லியும் மாலையில் போண்டா, வடை, பஜ்ஜி போன்ற நொறுக்குத் தீணிகளையும் விற்க ஆரம்பித்துவிட்டான். பள்ளிக்குப் போகாத நேரங்களில் இதற்கெல்லாம் அப்புவின் தங்கையும் உதவி செய்தாள். இந்தக் கடையும் பிரபலமாகிவிட கூட்டம் அதிகமாகக் கூடத் தொடங்கிவிட்டது. பக்கத்து ஊர்களிலிருந்து கூட அப்புவின் கடைக்கு வந்து போனார்கள்.

இரண்டு வருடங்கள் வரை ஒரு சிக்கலும் இல்லை. பயங்கர பிரபலமாகிவிட்டது அப்புவின் கடை.அப்போதுதான் ‘முருகா பஸ் சர்வீஸ்’ பேருந்தின் ஓட்டுநர் அப்புவிடம் பிரச்சினை செய்தார். “உங்கடைக்கு வர கூட்டமெல்லாம் எங்க பஸ்ஸை ரொப்பிடுது. அதனால உங்கடைக்கு வர கூட்டத்துக்காக நீ எங்களுக்குக் காசு தரனும்” என்றார். அப்புவுக்கு இது கொஞ்சம் ஏடாகூடமா பட்டது. “உங்கப் பேருந்துல வரவங்கதான் டிக்கெட் எடுக்குறாங்க இல்ல. அப்புறம் ஏன் நான் தரனும்? அதோட கூட்டம் அதிகமா உன் பேருந்துல ஏறினா உங்களுக்குத்தானே லாபம்?” என்பது அப்புவின் கேள்வி. “நேரா டவுனுக்குப் போறவங்க முழு டிக்கெட் எடுப்பாங்க. உன் கடைக்கு கூட்டம் வரதுனால முழு டிக்கெட் காசு எங்களுக்கு வரது இல்ல. பாதிதான் வருது. அதுவுமில்லாம இங்க இருந்து மூனு ஊர் தள்ளி எங்க பஸ் ஓனரே கடை வச்சிருக்காரு. எல்லாக் கூட்டமும் உங்கடைக்கு வரதுனால அங்க கூட்டம் குறையுது. அதனால நீ எங்களுக்குக் காசு தரனும்” என்று ரொம்பவே சத்தம் போட்டார்.

“நீ உன் வருமானத்தில பத்தில ஒரு பங்கை எங்களுக்குத் தரலைன்னா, எங்க பஸ் இனிமே இங்க நிக்காது” என்று கூறிவிட்டு பேருந்தை கிளப்பிகிட்டு போய்ச்சேர்ந்தார். அப்பு பெரிதாக இந்த மிரட்டலைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் பேருந்து நிறுத்தத்தை எக்கச்சக்கமானோர் பயன்படுத்துவதால் அப்படியெல்லாம் நிறுத்தாமல் போக மாட்டார்கள் என நினைத்தான். சில நாட்களிலேயே மற்ற ஐந்து பேருந்துகளில் இருந்தும் இதே போல அப்புவிடம் காசு கேட்க ஆரம்பித்தார்கள். அப்பு தீவிரமாக மறுத்தான். மறு நாள் காலை, முதல் பேருந்து நிற்காமலே போனது. அடுத்த பேருந்தும் அதே போல நிற்காமல் போனது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மொத்த கூட்டமும் ஏன் இப்படி நிறுத்தாமல் போகிறார்கள் எனப் புரியாமல் தவிக்க ஆரம்பித்தனர்.

அடுத்த பேருந்துக்கு மொத்த கூட்டமும் ஆவேசமாக கை காட்டியது. அதுவும் நிறுத்தாமலே போனது. கடைசி பேருந்துக்குப் பிறகு அங்கு ஒரு கார் நின்றது. அதிலிருந்து ராஜன் என்பவர் இறங்கி “நான் இங்கு வந்து செல்லும் பேருந்துகளின் சார்பாகப் பேச வந்திருக்கிறேன். அப்புவின் கடைக்கு வரும் கூட்டம் எங்கள் பேருந்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. எங்களுக்கு இதனால் எங்களுக்கு முழு தொகை கிடைக்காமல் போகிறது. இதனால் எங்களுக்கு அப்பு அவர் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கை வழங்க வேண்டும். அப்படி வழங்காத வரை இங்கு பேருந்துகள் நிற்காது” என்றார்.

கூட்டத்தில் இருந்த வயதானவர் ஒருவர், “பயணிகளை அவர்கள் கேட்கும் இடத்திற்கு அழைத்துப் போவதுதானே உங்கள் வேலை? எதற்காக இங்கே வருகிறோம் என்று கேட்பதெல்லாம் உங்கள் வேலை இல்லை. அரசு உரிமம் பெற்று நீங்கள் பேருந்தை இயக்கும் போது இப்படியெல்லாம் செய்வது சரியல்ல” என்றார்.

“இந்த டீக்கடை எங்கள் பேருந்துகளை விட அதிகமாக லாபம் பார்க்கிறது. உங்களுக்கு இந்த டீயும் இட்லியும் வடையும் கிடைப்பதற்கு நாங்களும் ஒரு முக்கியமான காரணம். நாங்கள் உங்களை இங்கு அழைத்து வராவிட்டால் நீங்கள் எப்படி இங்கு வருவீர்கள்? இங்கு விற்கும் இட்லிக்குத் தரும் காசை விட குறைவான காசே எங்களுக்கு டிக்கெட்டாகத் தருகிறீர்கள். இது நியாயமா?” என்று ராஜன் கேட்டார்.

“பேருந்துப் பயணமும் சாப்பாடும் வேறு வேறு, அவற்றுக்கானக் கட்டணங்களும் வேறு வேறு. நாங்கள் கோதுமையை ஒரு கடையில் வாங்குகிறோம், அதை மில்லில் அரைக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடத்திற்குத்தான் காசு தருகிறோம், அதற்குரிய மதிப்புடைய காசு தான் தருகிறோம். மில்லில் போய் அரைப்பதற்கு முன்பாக கோதுமையை வாங்குகிறோம். அப்புவின் கடையில் நாங்கள் சாப்பிட வருவதற்கு முன்பாக உங்கள் பேருந்தில் வருவதைப் போலவே. அதனால், நீங்கள் கேட்பது சரியானது அல்ல” என்றாள் அங்கு நின்றிருந்த இளம்பெண் ஒருத்தி.

விடாமல் ராஜன், “நாங்கள் அப்புவுக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டு வந்து தருவதன் மூலமாக அவருக்குச் சேவை செய்கிறொம். அதற்கானச் சேவைக் கட்டணத்தைத் தான் கேட்கிறோம்” என்றார்.

“உங்க சேவை எல்லாம் எங்கள ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறதுதான். உம் பஸ்ல வரும் போது நாங்க உங்களுக்குத்தான் வாடிக்கையாளர்கள், நீங்க எங்களுக்குத்தான் சேவை செய்யுறீங்க, அப்புவுக்கு இல்ல. ஏமாந்தா மொளகா அரைக்கப் பாக்குறியே நீ” என்றார் அங்கிருந்த வயதான தாத்தா ஒருத்தர்.

சுற்றியிருந்த கூட்டமும் அந்த தாத்தா சொல்வதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த தாத்தா விபரமாகப் பேசுவதைப் பார்த்த ராஜன் வேறு மாதிரி பேசுவோம் என ஆரம்பித்தார், “பேருந்துல கூட்டம் ரொம்பி வழியுது, கூட்டத்தைக் குறைக்க இன்னொரு புதிய பேருந்தை விட வேண்டியிருக்கு. அந்தப் புதிய பேருந்துகளுக்காக செலவிட தான் இந்தத் தொகை. நாங்கள் சொல்வது மக்களோட நன்மைக்காகத் தான், எங்களுக்காக அல்ல. இப்போ எங்களோட லாபமெல்லாம் இருக்குற பேருந்துகளோட மேம்பாட்டுக்கேப் போயிடுது.”
“சனங்களோட நல்லதுக்குத்தான்னா மூனு வருசமா ஒடைஞ்ச கண்ணாடியை வச்சுகிட்டே இந்த ஓட்டை வண்டி ஓடுதே, அதை ஏன் மேம்படுத்தல? வர லாபமெல்லாம் உன் சொகுசுக் காருக்குத்தானே போவுது” என்றான் அங்கிருந்த ஒரு இளந்தாரி. கூட்டத்துக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“உங்க பஸ்ஸே உருண்டுகிட்டுத்தான் கெடக்கு, இதுல வழில வழில வேற நின்னுத் தொலைஞ்சிடும். முருகா பஸ் ஓனரு நடத்துற கடைல விக்குற இட்லியை வச்சு ஊடே கட்டலாம், அதுக்குத் தொட்டுக்குறச் சட்னிக்கு யானை வெலையும், குதிரை வெலையும் குடுக்கனும். உம்பஸ்ஸு டிரைவரும் டிக்கெட் கிழிக்குறவனும் பேசுற பேச்சுக்கும் ஏச்சுக்கும் வாயுலயேதான் புண்ணு வரும்.” என்றார் இன்னொருவர் கூட்டத்திலிருந்து.

அதுவரை அமைதியாக இருந்த அப்பு, “நீங்க கடையை ஒழுங்கா நடத்துறக்கு சட்டம் போடுங்க நான் அதையெல்லாம் செய்யுறேன். ஆனா, உங்களுக்கு குடுக்க எங்கிட்ட காசும் இல்ல, கவர்மெண்டு ஆபிசுக்கு அலைய நேரமும் இல்லை” என்றான்.

ராஜன் ஒரே அடியாகக் கத்த ஆரம்பித்துவிட்டார். “இந்தப் பேருந்தை ஓட்டுறதுக்கு அரசாங்கத்துக்கு நாங்க எவ்ளோ காசு கட்டனும் தெரியுமா? போனமுறை பஸ் ரூட் வாங்க ஏலம் எடுத்தப்போ எவ்ளோ காசு கட்டினோம் தெரியுமா? அதனால, இப்போ பேருந்துகளை ஒழுங்கா ஓட்ட காசு இல்லாமத் தவிக்குறோம்.”
“ஏலம் எடுக்கும் போதே இவ்ளோதான் லாபம் வரும்னு முடிவு செஞ்சு அதுக்கேத்த மாதிரிதான் எடுத்துருக்கனும். நீங்க அரசுக்கு ஏலத்துல குடுத்த காசு உங்களுக்கும் அரசுக்கும் இருக்கும் சங்கதி. அதுக்கு நாங்களோ இல்ல அப்புவோ எப்படி பொறுப்பாவ முடியும்?” என்றார் கூட்டத்தில் இருந்த ஒரு மத்திய வயது நபர்.

“நாங்க அதிகத் தொகைக்கு ஏலம் எடுத்துட்டோம், இப்போ பின்னாடி போய் எதையும் மாத்த முடியாது. முடிஞ்சது முடிஞ்சதுதான்” என்று இன்னும் கோபமானார் ராஜன். அதே மத்திய வயதுக்காரர் அதற்கு “அரசு உங்ககிட்ட இருந்து அதிகமா வாங்குன தொகையை உங்களுக்கு ஏத்த மாதிரி திரும்ப கொடுக்க அவங்க தான் பாக்கனும். கிராமப் பகுதிகளுக்கு பேருந்து விட ஒரு திட்டம் இருக்குறதா நாங்க கேள்விப்பட்டோமே, அதுல எதாச்சும் செய்து உங்களுக்கு உதவட்டுமே ” என்றார்.

இந்தக் கிராமத்து மக்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், இவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது போல் இருக்கிறதே. வேறு எதாவது யோசிக்க வேண்டும் என முடிவு செய்து அரசாங்கத் திட்டங்கள் பற்றி சேவை பற்றி ஏதேதோ உளற ஆரம்பித்தார் ராஜன்.

கூட்டத்தில் இருந்த வயதானவர், “அவ்ளோதானா உன் பேச்சும் ஏமாத்து வேலையும்? எங்ககிட்ட உன் பருப்பு வேகாது. ஒழுங்கா அரசாங்கத்துகிட்ட போட்ட ஒப்பந்தப்படி பஸ்ஸை ஓட்டு, இல்லைன்னா இருக்குறதும் நக்கிட்டுப் போயிடும் என்றார்.”
ராஜன் இனிமேல் ஒன்றும் முடியாது என்பதைப் புரிந்து கொண்டு, வேக வேகமாக காரில் ஏறிக் கிளம்பிவிட்டார்.
வெளியே எட்டிப்பார்த்து “அப்பு தீவிரவாதிகளுக்கு இட்லியும் டீயும் விற்கிறான்” என்று கத்திக்கொண்டே போனார்.
—–

குறிப்புகள்:
இக்கதை Net Neutrality தொடர்பான நிகழ்வுகளைப் புனைவாக்கம் செய்திருக்கிறது.
இக்கதையில் வரும் பேருந்து உரிமையாளரின் சார்பில் பேசுபவரைப் போலவும் அவர்கள் கோரும் கோரிக்கைகளைப் போலவுமே இந்தியாவின் தொலைதொடர்பு நிறுவனங்கள் பேசுகின்றன, கோரிக்கை வைக்கின்றன.
பேருந்து நிறுவனங்களுக்காக வக்காலத்து வாங்கும் ராஜனைப் போலவே, இந்தியத் தொலை தொடர்பு நிறுவனங்களுக்காக TRAI அமைப்பு ஒரு வரைவை உருவாக்க உதவியிருக்கிறது. நீங்களே அவற்றைப் பின்வரும் இணைப்பிலிருந்து பார்க்கலாம்.

TRAI CP: http://www.trai.gov.in/WriteReaddata/ConsultationPaper/Document/OTT-CP-27032015.pdf
COAI press releases: http://www.coai.com/press-release/news-desk
Warning: செய்திக்குறிப்பைப் படிக்க அங்கு பதிவு செய்திருக்க வேண்டும். (!)
1 On average, TSPs earn ₹0.25p per MB for data, ₹0.85p per MB for voice and ₹1,125 per MB for SMS. (TRAI CP 2.37, 2.38) Judging by numerous ads for data plans, TSPs still make a comfortable profit on data. That means voice is priced high, and SMS prices are simply insane. Note also that data revenue is growing 100% year-on-year (TRAI CP 2.36), enabling TSPs to make more money today than ever before.

2 TRAI CP 1.2: “Telecommunication Service Providers (TSPs) [are] being overwhelmed by online content.” Note TRAI’s biased tone.

3 TRAI CP 1.2: “the term over-the-top (OTT) refers to applications and services which … ride on operators’ networks”

4 TRAI CP 6.9: “the business models of the OTT industry rely on free riding over the network of the TSPs.” The use of the term free ride here and in several other places exposes the TRAI’s bias on this issue.

5 TRAI CP 1.4: “TSPs realise revenues solely from the increased data usage [and] do not realise any other revenues;” Also, CP 5.33: “[OTTs] have a high valuation for customers, consequently, the terminating TSP can demand an extra fee”

6 TRAI CP 1.4: “OTT providers make use of the TSPs’ infrastructure to reach their customers” In reality, consumers use the infrastructure to reach OTT providers, and they pay for this. Nice, TRAI, but no cigar.

7 The Economist, Jan 31, 2015, quoted by TRAI CP p93: “The operators on the other hand argue that the increasing internet traffic can sustained by investments in upgradation of networks which will be possible by increase in profits.”

8 TRAI CP 2.43: Disruption to the existing business of TSPs … would jeopardize the national objective of affordable and ubiquitous telephone and broadband access across the country.

9 TRAI CP 3.4: “The TSPs fall under a regulatory regime whilst OTT players are simply bypassing such a regime”

10 TRAI CP 3.8: “This regulatory imbalance or arbitrage opportunity allows them to offer services or goods that are cheaper or free”

11 TRAI CP compares WhatsApp with SMS, Skype with phone

12 COAI press release: “[COAI] expressed disappointment over the exorbitant winning price points for the operators at the latest spectrum auctions which concluded today.” I’m sorry, who were the bidders again?

13 COAI press release: “…while the industry is solidly behind the government’s ambitious vision of Broadband for All, Smart cities, rural penetration, 
E-governance, etc., and is eager to make this happen; it cannot be achieved by starving the industry of the needed resources to invest in these objectives.” Yes, they really did say “rural penetration.”

14 TRAI CP 3.22: “during a terrorist attack, it becomes extremely complex to intercept such calls [and therefore VoIP should be banned]”
————
அனைத்து இணைய தளங்களும் சமமாக கிடைக்க வேண்டிய இணையத்தை, ஒவ்வொரு தளத்தை அனுமதிப்பதற்கும், தள உரிமையாளரிடமும், பயனரிடமும் கூடுதல் பணம் வசூலிக்க, ISP நிறுவனங்கள் முனைகின்றன.
இதைத் தடுக்காவிடில், அவர்கள் அனுமதிக்கும் தளங்களை மட்டுமே நாம் பார்க்க முடியும்.
இதன் விபரீதங்களை அறிய, இந்த காணொளிகளைப் பாருங்கள்.




இவற்றையும் படியுங்கள்
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=45141&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

http://www.vikatan.com/news/article.php?aid=45179&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

நாம் செய்ய வேண்டியது என்ன?

இந்த பிரச்னை குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் TRAI அமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
http://www.savetheinternet.in/ இங்கு சென்று “Respond to TRAI now” என்ற இணைப்புக்குச் சென்று, TRAI க்கு மின்னஞ்சல் அனுப்புக.
நன்றி!

எழுத்து – மாமூலன்

நன்றி: http://www.kaniyam.com/net-neutrality-short-story/

No comments: