Spoken Tutorial எனும் திட்டம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி மற்றும் ஆலோசையுடன் ஐ.ஐ.டி மும்பையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினுடைய நோக்கம் தகவல் தொடர்பு மற்றும் கணினி தொழில்நுட்பங்களை அனைத்து மக்களும் அவரவர் மொழிகளில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே.
அனைத்து வீடியோக்களும் FOSS ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது மகிழச்சிக்குரிய செய்தி. பல்வேறு தலைப்புகளில் மொத்தமாக 542 க்கு மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், தமிழ் என பல்வேறு மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலை பயனாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைவரும் அவசியம் பார்த்து பயன்பெற வேண்டிய தளம்.
லினக்ஸைப் பற்றி அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவைகளை லினக்ஸ் எனும் தலைப்பில் 13 தமிழில் வீடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உபுண்டு இயங்குதளத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. கற்றுக்கொள்ள மொழி ஒரு தடையல்ல முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்.
தரவிறக்கம் செய்து அனைவரும் பயன்பெறவும். http://www.spoken-tutorial.org தளத்தை ஆராய்ந்தால் நீங்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment