Feb 18, 2014

Remastersys இல் Install Ubuntu Option ஐ கொண்டு வருதல்


அண்மையில் Remastersys ஐப் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையினை இங்கு பதிவு செய்திருந்தேன். அதனுடைய தொடர்ச்சியாக இந்த கட்டுரையினை எடுத்துக்கொள்ளலாம். Remastersys மூலம் ISO கோப்பினை உருவாக்கி முடித்த பின்பு அதனை Live ஆக பயன்படுத்தி பார்த்தபோது நன்றாக இயங்கியது. ஆனால் அவ்வாறு கிடைத்த Live Mode இல் Install Ubuntu என்ற Option, Live Mode Desktop இல் கிடைக்கவில்லை.


Dash home Search box இல் Install Ubuntu என தட்டச்சு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து நான் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். இவ்வாறு தயார் செய்த ISO கோப்பினை என்னுடைய நண்பர் தோழர். பா.சக்திவேல் அவர்கள் தன் வகுப்புத் தோழர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவும், நண்பர்களினுடைய மடிக்கணினியில் உபுண்டுவை நிறுவிக்கொடுக்கும் ஆர்வத்திலும் பென்டிரைவில் Bootable ஆக மாற்றி எடுத்துச் சென்றார். ஆனால் Live Mode இல் நன்றாக வேலை செய்த ISO கோப்பில், நிறுவுவதற்கான Option மட்டும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த தோழர் பா.சக்திவேல் அவர்கள் உடனே என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு இந்த பிழையினை சுட்டிக்காட்டினார்.

என்ன நோக்கத்திற்காக Remastersys மூலமாக Ubuntu வை Backup செய்தோமோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்துக்கொண்டே இந்த பிழை தொடர்பான தகவல்களை இணையத்தில் திரட்டினேன்.

இந்த பிழைக்கு காரணம் ubiquity மற்றும் ubiquity-frontend-gtk ஆகிய இரண்டு பொதிகளும் உபுண்டுவில் நிறுவப்படாமல் இருந்ததுதான். இந்த இரண்டு பொதிகளையும் உபுண்டுவில் நிறுவிய பின் மறுபடியும் Remasetersys கட்டளையினை இயக்கி புதியதொரு ISO கோப்பினை தயார் செய்தேன். அவ்வாறு உருவாக்கிய Ubuntu வின் ISO  கோப்பில் Install Ubuntu Option கிடைத்தது.

நிறுவுதல்:

முனையத்தில் கீழ்காணும் கட்டளையினை இயக்கவும்

sudo apt-get install ubiquity ubiquity-frontend-gtk

தோழர் பா.சக்திவேல் அவர்கள் இவ்வாறு உருவாக்கிய உபுண்டுவினை தன்னுடைய கல்லூரி நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களிடம் உபுண்டுவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். Virtual Box மூலமாக Windows 7 இயங்குதளத்தை உபுண்டுவிற்குள் நிறுவிக்கொடுப்பதன் மூலம், உபுண்டுவின் மீதான ஆர்வம் தன் சக வகுப்புத்தோழர்களிடம் அதிகரித்திருப்பதாகவும், நிறைய நண்பர்கள் உபுண்டுவை பயன்படுத்த முன்வருவதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இரவு பகல் பாராமல் என்னுடன் ஒத்துழைத்து Remastersys மூலமாக ஒரு முழுமையான உபுண்டுவை தயார் செய்வதற்கு பேருதவியாக இருந்த பா.சக்திவேல் அவர்களுக்கு என மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

2 comments:

Sivam Sakthivel said...

எனக்கும் உபுண்டு பயன்படுத்த வேண்டு என்று ஆசை மேலிடுகிறது நண்பரே, எனக்கு அடிப்படை ஒன்றுமே தெரியவில்லை, இணையத்தில் உபுண்டு சம்பந்தமான மின்னணு புத்தகங்கள் சிலவற்றைப் பதிவிறக்கம் செய்தேன் நண்பரே,எனக்கு மிகச் சிறிய கணினி அறிவே உள்ளது. இதனை வைத்து கற்றுக்கொள்ள சிரமகவும்,சலிப்பாகவும் உள்ளது நண்பரே. என்ன செய்ய ?
நேரடி வகுப்பு மாதிரி ஏதேனும் நடக்கிறதா நண்பரே ?

இரா.கதிர்வேல் said...

நன்றி sivamsakthivel.
உபுண்டுவை பயன்படுத்த ஆர்வமாக இருக்கும் நீங்கள் மிக எளிமையாக உபுண்டுவை கற்றுக்கொள்ளலாம். இந்த ஆர்வமே உங்களுக்கும் போதும். கணினி அறிவெல்லாம் இதற்கு பிரமாதமாக தேவையில்லை. விண்டோஸ் இயங்குதளத்தை விட உபுண்டுவானது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். உங்களுடைய கணினியில் உபுண்டுவை நிறுவி விட்டீர்களேயானால். நீங்களே சுயமாக உபுண்டுவை பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். உபுண்டுவை உங்களுடைய கணினியில் நிறுவுவதற்கு நான் வழிகாட்ட தயாராக இருக்கிறேன். உங்களிடம் உபுண்டு இயங்குதளம் இல்லையென்றால் நானே அதையும் அனுப்பி வைக்கிறேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு(linuxkathirvel.info@gmail.com) உங்களுடைய விபரங்களையும், பதிலையும் தெரிவியுங்கள். லினக்ஸைப் பற்றி நிறைய வலைப்பூக்கள் தமிழில் உள்ளது.
http://www.tamilgnu.blogspot.com
http://www.kumarlinux.blogspot.com
http://www.kaniyam.com
http://mmauran.net/blog
http://suthanthira-menporul.com

ஆங்கிலத்தில் உபுண்டுவிற்கென சிறப்பான இதழாக Full Circle Magazine வெளிவருகிறது. இலவசமாகவே நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் முகவரி http://fullcirclemagazine.org

தொடர்ந்து ஒரு 3 மாத காலம் உபுண்டுவை பயன்படுத்தினாலே போதும். அனைத்தும் உங்களுக்கு தெரிந்து விடும். இணையத்தின் உதவியுடன் நீங்கள் உபுண்டுவை மிகவும் எளிமையாக கற்றுத்தேறலாம். அடிப்படையை புரிந்து கொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். அது தவிர்க்க முடியாதது. இது எந்தவொரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கும் பொருந்தும்.