Feb 27, 2014

VirtualBox இல் Windows7 இயங்குதளம் நிறுவுதல் - பகுதி-1

VirtualBox தொடர்பாக நான் ஏற்கனவே ஒரு பதிவை எழுதியிருந்தேன். அந்த பதிவின் இறுதியில் அடுத்த பதிவில் விண்டோஸ்7 இயங்குதளத்தை நிறுவுவது எப்படி? மற்றும் உபுண்டுவினுடைய கோப்புக்களை  VirtualBox ற்குள் இருக்கும் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்குள் கொண்டு வருவது எப்படி? ஆகியவைகள் தொடர்பான பதிவுகள் அடுத்தடுத்து இடம்பெறும் என குறிப்பிட்டு இருந்தேன். இந்த பதிவுகளை  ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக  நண்பர்கள் தெரிவித்து இருந்தனர். மிக்க மகிழ்ச்சி. முதலில் Virtual Box தொடர்பான சில செய்திகளை பார்த்து விடுவோம்.

Virtual Box ற்குள்  Windows7 இயங்குதளத்தை ஏன் நிறுவ வேண்டும்?

1. நாம் அனைவரும் உபுண்டுவை பயன்படுத்துவதற்கு முன் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக்கொண்டு இருந்தவர்கள்தான். ஒரு சில மென்பொருள்களை விண்டோஸ் இயங்குதளத்தில்தான் பயன்படுத்த முடியும் என்ற கட்டாயம் வரும்போது அதற்காகவே உபுண்டுவிலிருந்து வெளியேறி கணினியை மறுதொடக்கம் செய்து விண்டோஸ் இயங்குதளத்திற்குள் சென்று பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உதாரணமாக: Autocad, Adobe Page Maker, Tally போன்ற மென்பொருள்களை கூறலாம். இவைகளெல்லாம் விண்டோஸ் இயங்குதளத்தில்தான் நன்றாக இயங்கும். இந்த மென்பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது கணினியை மறுதொடக்கம் செய்து விட்டு விண்டோஸ் இயங்குதளத்திற்குள் செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படும், Virtual Box ற்குள் Windows7 இயங்குதளத்தை நிறுவுவதன் மூலம் இதிலிருந்து நாம் தப்பிக்கலாம். இதனால் நேரமும் மிச்சமாகும்.

2. விண்டோஸில் இயங்கும் மென்பொருள்களை, உபுண்டுவில் Wine Software மூலமாக நிறுவி பயன்படுத்த முடியுமென்றாலும், Wine மூலமாக பயன்படுத்தும் போது அவ்வளவு சிறப்பாக இயங்காது என்பதோடு சில மென்பொருள்கள் வேலை செய்வதேயில்லை. இந்நிலையில் Virtual Box ற்குள் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவியிருந்தால், உபுண்டுவில் இருந்துகொண்டே நேரடியாக நாம் Virtual Box ற்குள் இருக்கும் விண்டோஸில் அந்த மென்பொருளை நிறுவி பயன்படுத்த முடியும். இதன்மூலம் Wine இல் நிறுவி சரிவர இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டை நாம் சொல்ல வேண்டியதில்லை.

3. உபுண்டுவில் இணைய இணைப்பு இருந்தால் அந்த இணைப்பு Virtual Box ற்குள் இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்திலும் வேலை செய்யும். ஆகையால் நாம் இணையத்தை விண்டோஸில் பயன்படுத்தி முழு பயனையும் பெற முடியும்.

4. Shared Folder Options மூலமாக உபுண்டுவில் இருக்கும் கோப்புக்கள் அனைத்தையும் மற்றும் Hard Disk இன் அனைத்து Partition களையும் Virtual Box ற்குள் இருக்கும் விண்டோஸிற்குள் கொண்டு வந்து பயன்படுத்தலாம். இதனால் நாம் வேலைகளை விரைவாக செய்ய முடியும். மேலும் இரண்டு இயங்குதளங்களுக்கிடையில் கோப்புக்களையும் எளிமையாக பரிமாறிக்கொள்ள முடியும். மேலும், Pen drive மற்றும் USB Port இல் இணைக்கும் அனைத்து வன்பொருள்களையுமே பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

5. எனக்கு விண்டோஸே வேண்டாம்ங்க முதலில் உபுண்டு, அதில் ஏதாவது செய்ய முடியலனாதாங்க அப்பறம் விண்டோஸ், என அதிரடி முடிவெடுக்கும் பயனாளர்களுக்கு இந்த Virtual Box ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக நண்பர் இரா.குமரேசன் போன்றவர்களுக்கு.

Virtual Box ஐப் பற்றிய சில சந்தேகங்கள்:

Virtual Box என்பது உரிம மென்பொருளா(Licensed Software) அல்லது இலவச மென்பொருளா(Free Software)?

இலவச மென்பொருள். GPL உரிமத்துடன் வெளிவருகிறது.

Virtual Box ற்குள் எந்தெந்த இயங்குதளங்களை நிறுவி பயன்படுத்த முடியும்?

Windows(All Editions), Linux(All Distros)

Virtual Box இல் இயங்குதளங்களை நிறுவும் போது செய்யப்படும் Partition கள், கணினியில் ஏற்கனவே இருக்கும் Partition களுடன் சேர்த்துக்கொள்ளப்படுமா?

சேர்ந்து கொள்ளப்படாது. எந்தவிதமான மாற்றமும் வன்வட்டிலும் ஏற்படாது. தகவல் இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் கொள்ள வேண்டியதில்லை.

Host OS மற்றும் Guest OS என்றால் என்ன?
உதாரணமாக நீங்கள் உபுண்டு இயங்குதளத்திற்குள் Virtual Box ஐ நிறுவி அதனுள்ளே Windows7 இயங்குதளத்தை நிறுவினால், உபுண்டு - Host OS, Windows7 -  Guest OS. உபுண்டுவிற்குள் Windows7 ஐ நிறுவினால், உபுண்டு - Host OS, Windows7 - Guest OS. Windows7 ற்குள் உபுண்டுவை நிறுவினால், Windows7 - Host OS, Ubuntu - Guest OS.

--தொடரும்--

Feb 22, 2014

Conky யில் Mobile Broadband Internet Download மற்றும் Upload வேகத்தை காண்பிக்க வைத்தல்


Conky என்பது ஒரு Text Based System Monitor ஆகும். இதை நிறுவுவதற்கு முனையத்தில் sudo apt-get install conky conky-all எனக் கொடுக்கவும். நிறுவுதல் முடிந்தவுடன் உங்களுடைய Home Directory க்குள் .conkyrc எனும் கோப்பினை உருவாக்கவும். அதில் உங்களுக்கு பிடித்த வகையில் நிரல்களை அமைத்துக்கொள்ளலாம். என்னுடைய conky config கோப்பினை கீழே கொடுத்துள்ளேன்.



அடுத்ததாக Conky யினை நிலையாக தெரிய வைப்பதற்கு Startup applications இல் conky யினை Add செய்யவும்.


நான் Mobile மூலமாக இணையத்தை பயன்படுத்துவதால். அதனுடைய Conky யில் தெரிந்தால் நன்றாக இருக்குமேயென நினைத்தேன்.  அதை செய்யவும் முடிந்தது. கீழ்காணும் நிரலை Home Directory க்குள் இருக்கும் .conkyrc கடைசியாக சேர்த்து விட்டால் போதும். Conky இல் Mobile Broad band இன் வேகம் தெரியும்.



CentOS 6.3 நிறுவுதல்
























Feb 18, 2014

Remastersys இல் Install Ubuntu Option ஐ கொண்டு வருதல்


அண்மையில் Remastersys ஐப் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையினை இங்கு பதிவு செய்திருந்தேன். அதனுடைய தொடர்ச்சியாக இந்த கட்டுரையினை எடுத்துக்கொள்ளலாம். Remastersys மூலம் ISO கோப்பினை உருவாக்கி முடித்த பின்பு அதனை Live ஆக பயன்படுத்தி பார்த்தபோது நன்றாக இயங்கியது. ஆனால் அவ்வாறு கிடைத்த Live Mode இல் Install Ubuntu என்ற Option, Live Mode Desktop இல் கிடைக்கவில்லை.


Dash home Search box இல் Install Ubuntu என தட்டச்சு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து நான் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். இவ்வாறு தயார் செய்த ISO கோப்பினை என்னுடைய நண்பர் தோழர். பா.சக்திவேல் அவர்கள் தன் வகுப்புத் தோழர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவும், நண்பர்களினுடைய மடிக்கணினியில் உபுண்டுவை நிறுவிக்கொடுக்கும் ஆர்வத்திலும் பென்டிரைவில் Bootable ஆக மாற்றி எடுத்துச் சென்றார். ஆனால் Live Mode இல் நன்றாக வேலை செய்த ISO கோப்பில், நிறுவுவதற்கான Option மட்டும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த தோழர் பா.சக்திவேல் அவர்கள் உடனே என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு இந்த பிழையினை சுட்டிக்காட்டினார்.

என்ன நோக்கத்திற்காக Remastersys மூலமாக Ubuntu வை Backup செய்தோமோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்துக்கொண்டே இந்த பிழை தொடர்பான தகவல்களை இணையத்தில் திரட்டினேன்.

இந்த பிழைக்கு காரணம் ubiquity மற்றும் ubiquity-frontend-gtk ஆகிய இரண்டு பொதிகளும் உபுண்டுவில் நிறுவப்படாமல் இருந்ததுதான். இந்த இரண்டு பொதிகளையும் உபுண்டுவில் நிறுவிய பின் மறுபடியும் Remasetersys கட்டளையினை இயக்கி புதியதொரு ISO கோப்பினை தயார் செய்தேன். அவ்வாறு உருவாக்கிய Ubuntu வின் ISO  கோப்பில் Install Ubuntu Option கிடைத்தது.

நிறுவுதல்:

முனையத்தில் கீழ்காணும் கட்டளையினை இயக்கவும்

sudo apt-get install ubiquity ubiquity-frontend-gtk

தோழர் பா.சக்திவேல் அவர்கள் இவ்வாறு உருவாக்கிய உபுண்டுவினை தன்னுடைய கல்லூரி நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களிடம் உபுண்டுவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். Virtual Box மூலமாக Windows 7 இயங்குதளத்தை உபுண்டுவிற்குள் நிறுவிக்கொடுப்பதன் மூலம், உபுண்டுவின் மீதான ஆர்வம் தன் சக வகுப்புத்தோழர்களிடம் அதிகரித்திருப்பதாகவும், நிறைய நண்பர்கள் உபுண்டுவை பயன்படுத்த முன்வருவதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இரவு பகல் பாராமல் என்னுடன் ஒத்துழைத்து Remastersys மூலமாக ஒரு முழுமையான உபுண்டுவை தயார் செய்வதற்கு பேருதவியாக இருந்த பா.சக்திவேல் அவர்களுக்கு என மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

Feb 1, 2014

உபுண்டு 12.04 இல் Guest Account ஐ Disable செய்தல்


மேற்காணும் கட்டளையை இயக்கிவிட்டு, Logout செய்து பார்த்தீர்களேயானால், Login Screen இல் காண்பிக்கப்பட்டு வந்த Guest User Account மறைக்கப்பட்டு இருக்கும்.