Nov 6, 2013

உபுண்டுவில் Desktop Screen Recording(video) பிரச்சனைக்கான தீர்வு

உபுண்டுவில் திரையினை காணொளியாக பதிவு செய்வதற்கு recordMyDesktop மற்றும் Istanbul மென்பொருள்கள் பயன்படுகின்றது[1][2]. நான் முதலில் பயன்படுத்திப் பார்த்தது Istanbul மென்பொருளைதான். அது நன்றாக வேலை செய்தது ஆனால் பதிவாகிய காணொளியில் சாளரங்கள், தட்டச்சு செய்பவைகள் அனைத்தும் உடைந்து சிதறி காட்சியளித்தது. சில மணி நேரம் Istanbul உடன் போராடிப்பார்த்து விட்டு அடுத்ததாக recordMyDesktop ஐ பயன்படுத்த முடிவு செய்தேன்.


சரியாக பதிவு செய்யப்படாத திரை

recordMyDesktop ஐ நிறுவ முனையத்தில் sudo apt-get install recordmydesktop gtk-recordmydesktop கொடுக்கவும். recordMyDesktop லும் திரையினை பதிவு செய்த பொழுது Istanbul லில் பதிவாகியது போலவே திறக்கப்படும் சாளரங்களெல்லாம் உடைந்து சிதறி பதிவாகியது.

இந்த பிரச்சனைக்கான காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்து பார்த்ததில் Display Driver தான் காரணமென்று தெரிந்தது.  விவாதக் களங்களில் பல்வேறு விதமான தீர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் செய்து பார்த்து, மொத்தமாக உபுண்டு இயங்குதளத்தையே பயன்படுத்த முடியாமல் போய் விட்டால் என்னசெய்வது? சில நேரங்களில் கடினமான முயற்சிகளை உபுண்டுவில் மேற்கொள்ளும் போது  இந்த பயம் தானாக வந்து விடுகிறது.

இந்த பிரச்சனைக்கு மிகவும் எளிமையான தீர்வு ஒன்றினை விவாத களத்தில் கொடுத்திருந்தார்கள். அது என்னவென்றால் Display Resolution ஐ மாற்றிவிட்டு திரையினை பதிவு செய்வது.  இந்த முறையைக் கையாண்ட பொழுது தெளிவாக எந்த பிரச்சனையும் இல்லாமல் பதிவு செய்ய முடிந்தது.



Display settings க்குச் சென்று 1366x768(16:9) என்பதை 1360x768(16:9) என மாற்றம் செய்து சேமித்தேன். அதன்பிறகு recordMyDesktop -ல் பதிவு செய்த பொழுது தெளிவாக பதிவாகியது.

5 comments:

Anonymous said...

very useful, thanks

Anonymous said...

very useful, thanks

இரா.கதிர்வேல் said...

Thanks Anonymous

த. சீனிவாசன் said...

Try eidete or kazam.

They will record nice video with zero processing time.

Record and save easily.

இரா.கதிர்வேல் said...

நன்றி ஸ்ரீனிவாசன் சார்.
நிறுவி பயன்படுத்திப் பார்த்தேன். eidete and kazam இரண்டுமே சரியாக வேலைசெய்யவில்லை.