நாம் எந்த மொழியில் நிரல் எழுதினாலும் அவைகளில் பெரும்பாலும் இருப்பவை Expressions. உதாரணமாக 2+3 என்பது ஒரு Expression. இதில் 2,3 ஆகிய இரண்டும் Operands, + என்பது Operator. Operators and Operands இரண்டும் Expressions க்கு அவசியம் தேவை.
Operators களுக்கு Operands கள் கண்டிப்பாக தேவை. தனக்கான வேலையை Operators கள் செய்ய வேண்டுமானால் , Operands கள் இல்லாமல் செய்ய முடியாது.
Operators:
மேலே கொடுத்திருக்கும் Expression ஐ நீங்கள் Python prompt -ல் செய்து பார்க்கலாம்.
Operators களும் அதன் பயன்பாடுகளும்:
பைத்தானில் மற்ற நிரல் மொழிகளில் பயன்படுத்தப்படுவதைப் போலவே Operators -களும் பயன்படுத்தப்படுகிறது.
கீழ்காணும் Operator-கள் பைத்தான் நிரலில் பயன்படுத்தப்படுகிறது.
Operator : +
Name : Plus - கூட்டல்
Explanation: இரண்டு மதிப்புக்களை கூட்டுகிறது.
Examples : 100+100, 200 என்ற மதிப்பைக் கொடுக்கும். 'a'+'b' 'ab'எனும் வெளியீட்டைக் கொடுக்கும்.
Operator : -
Name : Minus - கழித்தல்
Explanation : எதிர்மறை எண்களை கொடுக்கும் அல்லது ஒரு எண்ணை வெறொரு எண்ணிலிருந்து கழித்த மதிப்பைக் கொடுக்கும்.
Examples : -6.7 எதிர்மறையான மதிப்பைக் கொடுக்கும். 100-50 என்பது 50 ஐ வெளியீடாக கொடுக்கும்.
Operator : *
Name : Multiply - பெருக்கல்
Explanation : கொடுக்கப்படும் இரண்டு எண்களின் பெருக்கற்பலனை கொடுக்கும் அல்லது எழுத்துக்களை பல முறை வெளியிடும்.
Examples : 20*3 என்பது 60 என கொடுக்கும். gnu*3 என்பது 'gnugnugnu' என்பதை கொடுக்கும்.
Operator : **
Name : Power - அடுக்கு
Explanation : x -ன் அடுக்கு y என்றால் அதன் மதிப்பைக் கொடுக்கும்.
Examples : 2**4 என்பது 16 என்ற விடையினைக் கொடுக்கும். 2**4=2*2*2*2
Operator : /
Name : Divide - வகுத்தல்
Explanation : x ஐ y ஆல் வகுத்தால் என்ன விடையோ அதைக் கொடுக்கும்.
Examples : 4/3 என்பதை 1 என வெளியிடும் (இரண்டு முழு எண்களை வகுத்தால் விடையும் முழு எண்தான்). 4.0/3 அல்லது 4/3.0 ஆகியவைகள் 1.333333333333 என முழு வெளியீட்டையும் கொடுக்கும்.
Operator : //
Name : Floor Division
Explanation : Returns the floor of the quotient.
Examples : 4//3.0 என்பது 1.0 என வெளியீட்டைக் கொடுக்கும்.
Operator : %
Name : Modulo
Explanation : வகுத்தலில் மீதியினைக் கொடுக்கும்.
Examples : 8%3 என்பது 2 எனும் வெளியீட்டைக் கொடுக்கும். 25.5%2.25 என்பது 1.5 எனும் வெளியீட்டைக் கொடுக்கும்.
Operator : &
Name : Bit-wise AND - உம்மை
Explanation : Bitwise AND of the numbers
Examples : 5&3 என்பது 1 என வெளியீடு கொடுக்கும். (5,3 ஆகிய இரண்டையும் Binary Numbers ஆக மாற்றி அதற்கு AND Operation செய்தால் வெளியீடு 1 என கிடைக்கும்.)
Operator : |
Name : Bit-wise OR - அல்லது
Explanation : Bitwise OR of the numbers
Examples : 5|3 என்பது 7 என வெளியீடு கொடுக்கும். (5,3 ஆகிய இரண்டையும் Binary Numbers ஆக மாற்றி அதற்கு OR Operation செய்தால் வெளியீடு 1 என கிடைக்கும்.)
Operator : ~
Name : Bit-wise invert
Explanation : The Bitwise Inverstion of x is -(x+1)
Examples : ~5 என்பது -6 என வெளியீடு கொடுக்கும்.
Operator : ^
Name : Bit-wise XOR - விலக்கும் அல்லது
Explanation : 5^3 என்பது 6 என வெளியீடு கொடுக்கும்.
Operator : <
Name : Less Than - விடக்குறைவு
Operator : >
Name : Greater Than - விட மிகல்
Explanation : x>y என்பது சரியென்றால், True எனவும் இல்லையென்றால் False எனவும் வெளியீடு கொடுக்கும்.
Examples : 5>3 என்பது True எனவும். 3>5 என்பது False எனவும். 5>10>3 என்பது False எனவும் வெளியீடு கொடுக்கும்.
Operator : <=
Name : Less Than or Equal - விடக்குறைவு சமம்
Explanation : x<=y என்பது சரியென்றால், True என வெளியீடு கொடுக்கும்.
Examples : 3<=6 என்பது True என வெளியீடு கொடுக்கும்.
Operator : >=
Name : Greater Than or Equal - விடமிகல் சமம்
Explanation : x>=y என்பது சரியென்றால் , True என வெளியீடு கொடுக்கும்.
Examples : 100>=50 என்பது True என வெளியீடு கொடுக்கும்.
Operator : ==
Name : Equal To- சமம்
Explanation : இரண்டு மதிப்புக்கள் சமமாக இருக்கிறதா என பார்க்கிறது.
Examples : x=200; y=200; x==y எனபது True என வெளியீடு கொடுக்கும். a='linux'; b='liNux'; a==b என்பது False என வெளியீடு கொடுக்கும்.
Operator : !=
Name : Not Equal To - சமமில்லை
Explanation : இரண்டு பொருள்கள் சமமில்லையா என்பதை ஒப்பிட்டு பார்க்கிறது.
Examples : x=2; y=3; x!=y என்பது False என்ற வெளியீட்டைக் கொடுக்கும்.
Operator : not
Name : Boolean NOT - பூலியன் not
Explanation : x என்பது True என்றால் False எனவும், x என்பது False என்றால் True எனவும் வெளியீட்டைக் கொடுக்கும். நேர்மாறாக என்பதுதான் அர்த்தம்.
Operator : and
Name : Boolean AND - பூலியன் உம்மை
Explanation : இரண்டு மதிப்புகளும் சரியென்றால்தான் விடை True என கிடைக்கும். ஒன்று மாறுபட்ட மதிப்பென்றாலும் False எனதான் விடை கிடைக்கும்.
Operator : or
Name : Boolean OR - பூலியன் அல்லது
Explanation : இருக்கும் மதிப்பில் ஒரு மதிப்பு Tru என்றாலும் விடை True எனக் கிடைக்கும்.
No comments:
Post a Comment