அறிமுகம்:
விண்டோஸ்
இயங்குதளங்களை மட்டுமே
இயங்குதளம் என நினைத்து
பயன்படுத்தி வந்தவர்களிடம்,
லினக்ஸ்
இயங்குதளத்தை அவர்களினுடைய
கணினியில் நிறுவி கொடுத்த
பிறகு அதையே தொடர்ந்து
பயன்படுத்த விரும்புகின்றனர்.
'மீனைக்
கொடுப்பதை விட, மீனைப்
பிடிக்க கற்றுக் கொடு'
என்ற
பழமொழிக்கு ஏற்ப லினக்ஸை
யாருடைய கணினியில்
நிறுவிக்கொடுத்தாலும் அவர்கள்
மாணவர்களாக அல்லது கணினித்துறை
தொடர்பானவர்களாக இருக்கும்
பட்சத்தில் லினக்ஸை எப்படி
நிறுவுவது? எனக்
கற்றுக் கொடுப்பது சாலச்
சிறந்தது. அவர்களுடைய
நண்பர்களிடம் லினக்ஸை பயன்படுத்த
சொல்லி பரிந்துரை செய்வதற்கு
இது போருதவியாக அமையும்.
விண்டோஸ்
இயங்குதளத்தை விட மிகவும்
எளிமையாக லினக்ஸ் இயங்குதளத்தை
கணினியில் நிறுவி விடலாம்.
லினக்ஸ்
இயங்குதளத்தை அடிப்படையிலிருந்தே
புரிந்துக் கொள்வதற்கும்
மற்றும் லினக்ஸ் நிறுவுதலை
முழுமையாக புரிந்து கொள்வதற்கும்
'பார்ட்டிசியன்களையும்,
கோப்பு
முறைமைகளையும்' பற்றி
தெரிந்து கொள்வது அவசியம்.
கருத்தாக்கம்:
கணினியில்
மற்ற எல்லாவற்றையும் விட
வன்வட்டில் (Hard
Disk) இருக்கும்
தகவல்தான் விலை மதிப்பில்லாதது.
வன்வட்டானது
தகவல்களை சேமித்து வைக்கக்
கூடிய ஒரு பெரிய கிடங்கு.
ஒரு
கணினி ஏதோ ஒரு காரணத்தினால்
இயங்கவில்லையென்று நமக்கு
கவலை வருகின்றதென்றால் அது
வன்வட்டில் உள்ள கோப்புகளை
பார்க்க முடியவில்லையே என்பதை
நினைத்துத்தானே தவிர வேறு
எதற்காகவும் அல்ல.
வன்வட்டானது
வழக்கமாக பார்ட்டிசியன்களாக
(Partitions)
பிரிக்கப்படுகிறது.
பார்ட்டிசியன்களை
பற்றிய தகவல்கள் அனைத்தும்
பார்ட்டிசியன் அட்டவணையில்
(Partition
Table) சேமிக்கப்
படுகிறது.
லினக்ஸ்
இயங்குதளங்கள் இயல்பிருப்பாகவே
partition
table களை
விண்டோஸ் இயங்குதளங்கள்
பயன்படுத்திக் கொள்வதற்கு
ஏற்பவே கட்டமைத்து உருவாக்குகிறது.
விண்டோஸ்
இயங்குதளத்தில் அதிகபட்சமாக
நாம் நான்கு Primary
Partition -களை
உருவாக்கிக் கொள்ள முடியும்.
அதற்காகவே
லினக்ஸும் நான்கு Primary
Partition களை
அனுமதிக்கிறது.
அதற்கு
மேல் Extended Partition களாக
உருவாக்கி அதை சிறிய சிறிய
Logical Partition களாக
உருவாக்கிக் கொள்ளலாம்.
Logical Partition களினுடைய
தகவல்களை சேமிப்பதற்காக
Extended Partition தனியாக
ஒரு Partition Table -ஐ
வைத்திருக்கிறது.
இந்த
Partition மற்றும்
Format களைப்
பற்றி எளிதாக புரியும் படி
சொல்ல வேண்டுமானால்,
நாம்
ஒரு வீடைக் கட்டி அதை
பயன்பாடுகளுக்கு ஏற்ப தனித்தனி
அறைகளாக பிரிக்கிறோமல்லவா
அதுதான் Partition பிரிப்பது.
அந்த
அறைகளை பயன்பாட்டிற்கு ஏற்ப
அறைக்குள் இருக்கும் பொருட்களை
வரிசைப்படுத்தி கட்டமைக்கிறோமல்லவா
அதுதான் Format செய்வதென்பது.
ஒரு
வன்வட்டினை (Hard Disk)
அடிக்கடி
Partition பிரித்தல்
கூடாது, அது
வன்வட்டின் ஆயுளுக்கு ஏற்றதல்ல
என்று பொதுவாக சொல்வார்கள்.
இது
வீட்டினுடைய அறைகளை அடிக்கடி
இடித்துவிட்டு கட்டுவது போல
ஆகும்.
வட்டிற்கு
பெயரிடுதல் (Disk
Naming):
IDE Hard Disk க்குக்கான
கோப்பு பெயர்கள் முறையே
/dev/hda
விலிருந்து
/dev/hdd
வரைக்
கொடுக்கப்படுகிறது.
Primary Master - /dev/hda
Primary Slave - /dev/hdb
Secondary Master - /dev/hdc
Secondary Slave - /dev/hdd
பொதுவாக
ஒரு IDE
Connector -ல்
இரண்டு Devices
இணைக்கலாம்.
முதலில்
இருப்பது 'Master',
இரண்டாவதாக
இருப்பது 'Slave'.
இப்பொழுது
வரக்கூடியவைகள்
அனைத்தும் SATA
வகையினைச்
சேர்ந்தது.
--தொடரும்--