Nov 15, 2012

உபுண்டு 13.04 -ன் பெயர் "Raring Ringtail"

உபுண்டு வினுடைய தற்போதைய பதிப்பு உபுண்டு 12.10, அடுத்த பதிப்பு உபுண்டு 13.04 , அதனுடைய பெயர் "Raring Ringtail" என்று மரியாதைக்குரிய Mark Shuttleworth அவர்கள் அறிவித்திருக்கிறார்.


ஆதாரம் மற்றும் மேலும் தெரிந்து கொள்ள:


Nov 11, 2012

மடிக்கணினியில் உபுண்டு 12.04 LTS -னை நிறுவினேன்




நான் முழுமையாக லினக்ஸைப் பயன்படுத்த தொடங்கியது நான்  பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பயில தொடங்கியபொழுதுதான்.  2009 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்.   முதன்முதலாக நான் நிறுவி பயன்படுத்திய உபுண்டு லினக்ஸ் 9.04 அதன் பின்பு வந்த எந்த பதிப்பினையும் எனது மடிக்கணினியில்  நிறுவ முடியவில்லை.  உபுண்டு 10.04 LTS நிறுவ முற்பட்டும் முடியவில்லை காரணம் Video Driver பிரச்சனை.

அதன் பிறகு வெளியிடப்பட்ட உபுண்டு 10.10 னைத் தான் நிறுவ முடிந்தது, உபுண்டு 10.10 நிறுவியதிலிருந்து நவம்பர்-8-2012 வரை உபுண்டு 10.10 பதிப்பைத் தான் பயன்படுத்தி வந்தேன்.

உபுண்டு 10.10 லினக்ஸ் பதிப்பில் எவ்வளவோ வேலைகள் செய்து பலனடைந்தேன்.  எந்த நிரல்களையும், மென்பொருளையும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நிறுவ முடிந்தது.  இரண்டு வருடங்களாக எனக்கு எந்த வித தொல்லையும் தராமல் சொன்னதைச் செய்யும் குழந்தை போல் அவ்வளவு அருமையாக இயங்கியது.  உபுண்டு 10.10 பதிப்பினை  நீக்க மனமில்லாமல் நீக்கினேன்.  என்னுடைய நண்பர்களில் ஒருவராகவே உபுண்டு 10.10 இயங்குதளம் இருந்தது.  இரண்டு வருட பயன்பாட்டில் எந்த ஒரு தொல்லையும் என்னை சங்கடப்படுத்தும் அளவிற்கு ஏற்படவில்லை..அவ்வளவு அற்புதமாக இயங்கியது.

உபுண்டு 12.04 LTS பதிப்பினை நேற்று (நவம்பர் - 10 - 2012) நிறுவினேன். கடுமையான மின்வெட்டின் காரணமாக இரண்டு முறை நிறுவுதல் நடந்து கொண்டிருக்கும் பொழுது மின்சாரம் நின்று போனது, ஆகையால் மீண்டும் முதலிலிருந்து நிறுவ வேண்டிய நிலை.

மூன்றாவது முறை தொடங்கி வெற்றிகராமாக உபுண்டு 12.04 LTS  பதிப்பினை எனது Compaq 515 மாடல் மடிக்கணினியில் நிறுவி முடித்தேன்.  காரணம் மூன்று மணி நேரம் மின்சாரம் தொடர்ந்து வந்தது...

உபுண்டு 12.04 LTS பதிப்பு பயன்படுத்த மிகவும் அற்புதமாகவும் , ஆர்வமாகவும் இருக்கிறது.

அகலக்கற்றை இணைய இணைப்பு அண்ணன் நீலகண்டன் அவர்கள் வைத்திருக்கிறார் அவரினுடைய உதவியால் தேவையான மென்பொருள்களை நிறுவி முழுப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தேன்.

தற்போதைய உபுண்டு 12.04 LTS :


லினக்ஸ் கேள்வி-பதில்கள் - பகுதி - I

கேள்வி : லினக்ஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவ குறைந்தது எத்தனை Partition -கள் தேவை?
பதில் : ஒன்று. லினக்ஸை கணினியில் நிறுவுவதற்கும் மற்றும் பூட் ஆவதற்கும் குறைந்தது ஒரு partition இருந்தால் போதுமானது. அந்த ஒரு partition , root partition ஆகும் ( / என்று குறிப்பிடப்படும்).  இருந்தாலும் குறைந்தது root, swap ஆகிய இரண்டு partition -கள் நிறுவுதலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கேள்வி : Booting Messages (பூட்டிங் செய்திகள்) களை எந்த கட்டளைக் கொண்டு பார்வையிட முடியும்?
பதில் : dmesg  , நமது லினக்ஸ் இயங்குதளம் கணினியில் Boot ஆகி முடிந்த உடன் முனையத்தில் (Terminal) கொடுத்தால், Booting Messages களை காணமுடியும்.


கேள்வி : கடைசியாக நாம் இயக்கிய ஐந்து கட்டளைகளை  தெரிந்துக் கொள்ள பயன்படுத்தப்படும் கட்டளை?
பதில் : history | tail -5



கேள்வி : Mail Server -னை வன்வட்டில் (HDD) உருவாக்க எந்த partition அவசியம் உருவாக்கி இருக்க வேண்டும்? root, swap, boot இந்த மூன்றும் அல்லாமல்.
பதில் : /var

கேள்வி : அனைத்து வழங்கல்களிலும் கிடைக்கக் கூடிய Partition Tool (பார்ட்டிசிய கருவி) எது?
பதில் : fdisk, parted .  இவையிரண்டும் பொதுவாக அனைத்து வழங்களிலும் கிடைக்கிறது.




Nov 5, 2012

பெரும்பாலான விண்டோஸ் 8 இயங்குதளங்கள் நிறுவியிருக்கும் கணினிகளில் நாம் லினக்ஸைப் பயன்படுத்தலாம், Linux Foundation அதற்கான தீர்வை கண்டுபிடித்திருக்கிறது


Linux Foundation -னுக்கு நன்றி

Unified Extensible Firmware Interface (UEFI) :


UEFI என்பது இயங்குதளத்திற்கும், Firmware க்கும் இடையில் உள்ள ஒரு மென்பொருள்  இடைமுகப்பு ஆகும்.  இது BIOS Firmware இடைமுகைப்புக்கான ஒரு மாற்று. BIOS க்கான மாற்று என்றுக்கூட எடுத்துக் கொள்ளலாம்.

அனைத்துவிதமான IBM-PC களிலும் இது தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.  பயன்பாட்டு ரீதியாக பார்க்கும் பொழுது பெரும்பாலான UEFI Images -கள் BIOS Services க்கு மரபு ரீதீயான ஆதரவை வழங்குகிறது.

மற்றொரு இயங்குதளத்தினுடைய உதவிகள் இல்லாமலையே கணினியினுடைய பழுது மற்றும் கண்டறிதல் வேலைகளினை தூரத்திலிருந்தே செய்ய அனுமதிக்கிறது.

EFI (Extensible Firmware Interface) னினுடைய உண்மையான விவர குறிப்புகள் இன்டெல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.

இதைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இந்த சுட்டிக்கு செல்லவும்.

மைக்ரோசாப்டின் குறுக்குப் புத்தி:

மைக்ரோசாப்ட் நிறுவனம் UEFI தொழில்நுட்பத்தினை தூக்கிப் பிடிப்பதற்கான காரணமே விண்டோஸ் 8 இயங்குதளம்  நிறுவியுள்ள கணினியில், லினக்ஸ் இயங்குதளத்தினை இரட்டை நிறுவுதாலாக நிறுவிப்  பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும்,

இனி வரும் காலங்களில் லினக்ஸை இரட்டை நிறுவுதலாக  நிறுவிப் பயன்படுத்தும் முறையினை  தடை செய்வதற்க்காகவுமேயாகும்.

ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் என்ன நியாயம் கற்பிக்கிறது என்றால்,  திருட்டு மென்பொருள்கள் மற்றும் இயங்குதளங்கள் பயன்படுத்துவதினை தடுப்பதற்குத்தான்  இந்த UEFI தொழில்நுட்பம் எனக் கூறுகிறது.

இந்த பிரச்சனை ஒரு 7-8 மாதங்களுக்கு முன்பே ஆஸ்திரேலிய லினக்ஸ் பயனாளர்கள் குழுக்களால் விவாதிக்கப்படு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. தீர்வு என்னவோ இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது.

இந்தப் பிரச்சனைக்கு  தீர்வு கண்டதன் மூலம் இனி வரும் காலம் லினக்ஸிற்குத்தான் என்பதை வெள்ளோட்டமாக  உலகுக்கு மெய்பித்துக்  காண்பிக்கப்பட்டுள்ளது.

UEFI பிரச்சனைக்கு Linux Foundation தீர்வு கண்டுபிடித்து முடிவு கட்டியிருக்கிறது:

முன்னிருப்பாகவே விண்டோஸ் 8 இயங்குதளம் நிறுவி வரும் கணினிகளில் , பெரும்பாலான ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்களை பயனாளர்கள் இரட்டை நிறுவுதலாக பயன்படுத்துவதற்கு Linux Foundation தீர்வு கண்டுபிடித்திருக்கிறது.

UEFI அல்லாத BIOS உள்ள கணினியில் அனைத்து லினக்ஸ் இயங்குதளங்களையும் மிகவும் எளிதாக எந்த பிரச்சனையுமின்றி விண்டோஸ் இயங்குதளத்துடன் நிறுவிப் பயன்படுத்தலாம்.  ஆனால் UEFI தொழில்நுட்பத்துடன் முன்னிருப்பாக நிறுவி வரும் விண்டோஸ் 8 உள்ள கணினிகளில் லினக்ஸை நிறுவுவது கொஞ்சம் கடினம்.

இந்த  UEFI Secure Boot தொழில்நுட்பம் gatekeeper -ரைப் போல செயல்படும். security key உள்ள இயங்குதளத்தினை மட்டுமே Boot ஆக அனுமதிக்கும்.

Gate pass இல்லையென்றால் உள்ளே நுழைய அனுமதியில்லாதது போல , security key இல்லையென்றாலும் உள்ளே நுழைய அனுமதியில்லை.

Secure Boot னுடைய மற்றுமொரு Advantage என்ன வென்றால்,  கணினி Boot ஆகும் பொழுது செயல்படும் வைரஸ் மற்றும் மால்வேர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.

ஆனால், பிரச்சனை என்னவென்றால் இந்த கடுமையான பாதுகாப்பு அம்சத்தினால் , Unsigned மென்பொருள்கள் , லினக்ஸை நிறுவுவதற்கு பயன்படும் நிரல்கள் போன்றவைகளையும் சேர்த்து தடை செய்கிறது.  இதற்குத்தான் Linux Foundation தீர்வு கண்டுபிடித்திருக்கிறது.