லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தும் அனைவரும் gEdit - Text Editor -னைப் பயன்படுத்தி இருபோம். gEdit நிரல்கள் எழுதுவதற்கு மிகவும் சிறப்பானதொரு உரை எழுதியாகும். GNOME Desktop Environment -ல் gEdit இருப்பியல்பாகவே கொடுக்கப்பட்டு வருகிறது.
லினக்ஸ் இயங்குதளங்களைப் பொறுத்த வரையில் gEdit -னை விட சிறப்பான உரை எழுதிகள் இருக்கின்றன. எடுத்துக்காடிற்கு Vim, Emacs, Nano போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
நாம் மேற்கண்ட Vim, Emacs, Nano உரை எழுதிகளையெல்லாம் முழுவதும் கட்டளைகளைக் கொண்டே செயல்படுத்த வேண்டும். ஒரு சில பயனாளர்கள் இது போன்று கட்டளைக் கொண்டு செயல்படுத்துவதை விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு gEdit ஒரு மாற்றாகும்.
gEdit நிரல்கள் எழுதுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். புதிதாக நிரல்கள் எழுதி பழகும் மாணவர்கள், பயனாளர்கள் gEdit -னைப் பயன்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக நிரல்கள் எழுதிப் பழகுவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த gEdit Text Editor -னை விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தினால் நன்றாக இருக்குமல்லவா. ஆகையால் இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைத்தது. தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
முதன்முதலாக நிரல்களை எழுதிப் பார்க்கும் மாணவர்கள், பயனாளர்கள் Windows இயங்குதளத்தினுடைய Notepad -னைப் பயன்படுத்த வேண்டாம். நிரல்கள் எழுதும் ஆர்வத்தையே Notepad கெடுத்துவிடும் என்பது என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்துக்கொண்டது. ஒரு வரி எண்ணைக் கூட பிரதிப்பலிக்காத Editor.
அதற்குப் பதிலாக jEdit, gEdit, Notepad++ போன்ற உரை எழுதிகளைப் பயன்படுத்தலாம்.
8 comments:
Web Developer-களுக்கு பயன்படும் ஒரு மென்பொருள் நண்பா
பகிர்வுக்கு நன்றி
நன்றி wesmob
ஆஹா அருமையான பதிவு இதோ தரவிறக்கம் செய்து பயன் படுத்துகிறேன்
நன்றி தோழா....
//...நிரல்கள் எழுதும் ஆர்வத்தையே Notepad கெடுத்துவிடும்.
நிச்சயமாக.
நன்றி தோழர் ந.ர.செ.ராஜ்குமார்.
நன்றி தோழர் ந.ர.செ.ராஜ்குமார்.
we can also use vim for windows...
awesome editor. better than gedit
we can also use vim for windows...
awesome editor. better than gedit
Post a Comment