பொதுவாக கோப்புமுறைமையானது கோப்புகளை நிர்வகிக்கவும், ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப் படுகிறது. லினக்ஸ் இயங்குதளத்தைப் பொறுத்தவரையில் அனைத்துமே கோப்புகள்தான். நூற்றுக்கும் அதிகமான கோப்பு முறைமைகளை லினக்ஸ் இயங்குதளம் ஆதரிக்கிறது.
கோப்பு(File) என்றால் என்ன?
வன்வட்டில்(Hard Disk) சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தரவு உருப்படிகளின் (Data Items) சேகரிப்பே கோப்பு எனப்படும். கோப்பானது ஒரு படமாகவோ, பாடல்களாகவோ, காணொளிகளாகவோ, ஒலியாகவோ இருக்கலாம். கணினியில் நாம் எதை சேமித்தாலும் அது ஒரு கோப்பாகத்தான் சேமிக்கப்படும்.
கணினியில் உள்ள கோப்பானது கணினியினுடைய Devices களுடன் நெருங்கிய தொடர்புக் கொண்டிருக்கும். உதாரணமாக வன்வட்டு, Floppy disk போன்றவைகள். File(கோப்பு) தான் File system த்தினுடைய அமைப்பில் இறுதியாக இருக்கும்.
அடைவு(Directory) என்றால் என்ன?
கோப்புகளினுடைய சேகரிப்பே அடைவு ஆகும். அடைவுகள் இரண்டு வகைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது.
- Root Directory
- Sub Directory
Root Directory:
லினக்ஸ் இயங்குதளத்தைப் பொறுத்தவரையில் கண்டிப்பாக ஒரே ஒரு Root Directory தான். Root Directory யானது / (முன்னோக்கிய சாய்வு குறியீடு) ஆல் குறிப்பிடப்படுகிறது.
அதாவது நம்முடைய லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ள கோப்புகள் மற்றும் அடைவுகளினுடைய மொத்த வேர் Root Directory ஆகும். Root Directory -யினை எந்தவொரு வழியிலும் நம்மால் Rename மற்றும் Delete செய்ய முடியாது. லினக்ஸ் இயங்குதளத்தினுடைய அனைத்து அடைவுகள் மற்றும் கோப்புகளும் இதன் கீழ்தான் அமையும்.
Sub Directory :
Root Directory யின் கீழ் உள்ள அனைத்து அடைவுகளும் Sub Directory ஆகும். Sub Directory க்கு மறுபெயர் இடுவது மற்றும் உப அடைவினை நீக்கம் செய்வது போன்ற செயல்களை மேற்க்கொள்ளலாம்.
அடைவுகள் (Directory) நம்முடைய கோப்புகளினுடைய தகவல்களையும், நிரல்களையும் திறமையாக ஒருங்கிணைக்க பயன்படுத்தப் படுகிறது.
லினக்ஸ் ஆதரிக்கும் கோப்பு முறைமைகள் :
லினக்ஸ் இயங்குதளமானது நூற்றுக்கும் மேற்பட்ட கோப்பு முறைமைகளை ஆதரிக்கிறது. விண்டோஸ் இயங்குதளம் FAT, NTFS இந்த இரண்டு முறைமைகளையும் தவிர வேறு எதையும் ஆதரிக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லினக்ஸின் கோப்பு முறைமைகளில் முக்கியமானது.
Ext2 : இந்த கோப்பு முறைமையானது ஒரு யுனிக்ஸ் கோப்பு முறைமையாகும். blocks, inodes மற்றும் Directories என்ற கருத்தாக்கங்களைக் கொண்டது.
Ext3 : இந்த கோப்பு முறைமையாது Ext2 கோப்பு முறைமையுடன் பதிவு செய்யும் (Journalling) திறன்களையும் மேம்படுத்திய பதிப்பு ஆகும். Journalling முறை வேகமாக கோப்பு முறைமைகளை மீட்டெடுக்க அனுமதிக்கிறது.
Ext4 : ext4 கோப்பு முறைமை ext3ஐ அடிப்படையாக கொண்டது மற்றும் சில வளர்ச்சியும் உள்ளது. நீண்ட கோப்பு முறைமைகள் மற்றும் நீண்ட கோப்புகளை, விரைவான மற்றும் மிக தகுதியான ஒதுக்கப்பட்ட வட்டின் இடத்திற்கு துணைபுரிகிறது, ஒரு அடைவினுள் துணை அடைவுகளின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை, விரைவு கோப்பு முறைமை சரிபார்க்கிறது, மற்றும் அதிக வலுவுடன் பயணிக்கிறது. முன்னிருப்பாக(Default Selection) ext4 ஐ தேர்வு செய்ய பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.
XFS : XFS அதிகமாக ஏறக்கூடியது, அதிக-செயற்பாடு கோப்பு முறைமை கோப்புமுறைகள் 16 எக்ஸாபைட்டுகள் வரை துணைபுரிகிறது (சரியாக 16 மில்லியன் எக்ஸாபைட்டுகள்), கோப்புகள் 8 எக்ஸாபைட்டுகள் வரை (சரியாக 8 மில்லியன் டெராபைட்டுகள்) மற்றும் அடைவு அமைப்புகள் பத்து மில்லியன் உள்ளீட்டுகளை பெற்றுள்ளன. XFS மெட்டாதரவு ஜர்னலிங்கிற்கு துணைபுரிகிறது.
ISOFS(ISO 9660) :
CDROM னால் பயன்படுத்தப் படும் கோப்பு முறைமை.
SYSFS :
இது ஒரு ram-based கோப்பு முறைமையாகும், இந்தக் கோப்பு முறைமை Kernel Objects னை முதன்மை நினைவகத்தில் ஏற்ற உதவுகிறது. ஆகையால் கடைநிலை பயனாளர் இந்த கோப்பு முறைமையினை மிகவும் எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ProcFS :
kernel -ல் உள்ளிணைப்பாக உள்ள தரவு கட்டமைப்புகளுக்கு(Data Structures) இடைமுகப்பு போல செயல்படுகிறது. Runtime -ல் sysctl கட்டளையினைப் பயன்படுத்தி குறிப்பிட்ட Kernel parameter களை மாற்றம் செய்வதற்கும் மற்றும் System பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக செயலியினுடைய (processor) தகவல்களை cpuinfo கட்டளையினைப் பயன்படுத்திப் பெறலாம்.
NFS :
Server/Client கருவாக்கத்தில் (Concept) ஒரு கோப்பினை, பல பயனாளர்களும், பல கணினிகளும் பகிர்ந்துக் கொள்வதற்கு Network File System அனுமதிக்கிறது.
mount (Terminal -ல் mount என தட்டச்சு செய்து பார்க்கவும்) கட்டளையினைப் பயன்படுத்தி நம்முடைய லினக்ஸ் கணினியில் என்ன வகையான கோப்பு முறைமைகள் Mount ஆகியிருக்கிறது. என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
தொடரும்........