படத்தின் மீது சொடுக்கி பெரிது படுத்திப் பாருங்கள். ஒவ்வொரு லினக்ஸ் வழங்கல்களும் எந்த குடும்பத்தில் இருந்து வந்தது எனத் தெரியும். ஒரு பதிவு கூற வேண்டிய செய்தியினை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.
Sep 27, 2011
Sep 19, 2011
உபுண்டுவின் கூகுள் குரோம் இணைய உலாவியில் இருந்த தமிழ் யுனிகோடு பிரச்சனைக்குத் தீர்வு
உபுண்டு லினக்ஸிலும் சரி, விண்டோஸ் இயங்குதளத்திலும் சரி நாம் இணையத்தில் உலாவுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தும் உலாவி நெருப்பு நரியும், கூகுள் குரோமும் தான். நான் அதிகம் குரோம் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் உபுண்டு இயங்குதளத்தில் கூகுள் குரோம் உலாவியினையும் நிறுவி வைத்திருந்தேன்.
ஏன் குரோம் பயன்படுத்துவதில்லை என்றுக் கேட்டால் தமிழ் எழுத்துருக்கள் பிரச்சனை. தமிழ் எழுத்துருக்கள் பிய்ந்தோ அல்லது கட்டம் கட்டமாகவோ தெரிந்தது. நிறைய தமிழ் வலைப்பூக்களில் Email Subscribe செய்து வைத்திருக்கிறேன். நிறைய நண்பர்கள் தமிழில்தான் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ஆகையால் கூகுள் குரோமினைப் பயன்படுத்துவதில்லை
ஒரு நாள் சரி முயற்சி செய்துதான் பார்ப்போம் என்று முடிவு செய்து கூகுளாரிடம் கேட்டேன் ஏதேதோ காட்டியது, எந்தெந்த இணையதளத்திற்கெள்ளாமோ அழைத்துச் சென்றது தீர்வுக் கிடைக்கவில்லை.
ஒரு வழியாக கூகுள் மூலமே கண்டுபிடித்தேன். ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதும் நண்பர் ஒருவர் இந்த இணைப்பினைக் கொடுத்து உபுண்டுவில் நிறுவியிருக்கும் கூகுள் குரோமினுடைய யுனிகோடு தமிழ் எழுத்துரு பிரச்சனைக்கு தீர்வு கூறியிருந்தார். அதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டேன்.
படம்-1
மிகவும் எளிமையான தீர்வு /usr/share/fonts/truetype/freefont எனும் அடைவிற்குள் உள்ள அனைத்து எழுத்துரு கோப்புகளையும் நீக்கி விட்டால். தமிழ் எழுத்துருக்கள மிக அழகாக உபுண்டுவின் கூகுள் குரோம் உலாவியில் காட்சியளிக்கும். குரோமினை நீங்கள் திறந்து வைத்திருந்தால் ஒரு முறை மூடிவிட்டு திறக்கவும்.
படம் -2
குறிப்பு:
/usr/share/fonts/truetype/freefont எனும் அடைவிற்குள் உள்ள எழுதுருக்களை நீக்க முடியவில்லை என்றால் முனையத்தை திறந்து sudo chmod 777 /usr/share/fonts/truetype/freefont/* எனக் கொடுத்து என்டர் கீயினை அழுத்துங்கள். பிறகு சென்று நீக்குங்கள். எழுத்துருக்கள் நீங்கும்.
எவ்வளவு அருமையாகவும், தெளிவாகவும் கூகுள் குரோம் இணைய உலாவியில் தமிழ் எழுத்துருக்கள் தெரிகிறது பாருங்கள்.
Sep 18, 2011
லினக்ஸ் கோப்புகளை, Partition -களை விண்டோஸ் இயங்குதளத்திலும் பார்க்கலாம், பயன்படுத்தலாம்
நாம் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள கோப்புகள் அனைத்தையும் உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தில் இருந்து கொண்டு எடுத்து பயன்படுத்த முடியும். இது லினக்ஸ் இயங்குதளங்களினுடைய சிறப்பு. ஆனால் நம்ம அண்ணன் பில்கேட்ஸ் வெளியிட்டிற்கும், வெளியிட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து கொண்டு லினக்ஸில் இருக்கும் கோப்புகளை நாம் எடுத்து பயன்படுத்த முடியாது. இதை விண்டோஸ் இயங்குதளங்களினுடைய ஒரு மாபெரும் குறை என்றே கூட கூறலாம். சுருக்கமாக சொல்லப்போனால் விண்டோஸினுடைய Partition களை லினக்ஸ் இயங்குதளத்தால் அணுக முடியும் ஆனால் லினக்ஸினுடைய Partition களை விண்டோஸ் இயங்குதளத்தால் அணுக முடியாது.
எவ்வளவோ கண்டுபிடிப்புகளையும், புதிது புதிதாக இயங்குதளங்களையும், மென்பொருள்களையும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் மென்பொருள் நிறுவனத்தால் இது போன்ற (விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்துக் கொண்டு லினக்ஸ் இயங்குதளங்களினுடைய Partition களை அணுகுதல்) ஒரு சிறப்புமிக்க செயல்களை கூட செய்ய முடியாதா என்ன.
இதற்குப் பின்னால் ஏதாவது அரசியல் இருக்கலாம். அல்லது அவர்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கும் Monopoly வியாபாரத் தந்திரத்திற்கு ஊறு விளைவிக்க கூடியதாக இருக்கலாம்.
எனக்கும் ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் விண்டோஸில் இயங்குதளத்தில் FAT16, FAT32, NTFS இந்த File Format களைத் தவிர வேறு எதுவுமே பயன்படுத்த முடியாதா?. இதில் NTFS கோப்பு முறை அண்மைய வருடங்களில் தான் கொண்டு வரப் பட்டது. ஒரு கோப்புமுறையினைக் கூட புதிதாக விண்டோஸ் இயங்குதளத்தில் கொண்டு வர முடியாதா? அல்லது கொண்டு வந்தால் விண்டோஸ் இயங்குதளத்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதா?. ஆனால் லினக்ஸ் இயங்குதளங்களை எடுத்துக்கொண்டால் 100 மேற்ப்பட்ட கோப்பு முறைகளை கையாளும் வகையில் வடிவமைத்திருக்கின்றனர்.
லினக்ஸில் தற்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கோப்பு முறை ext4 கோப்பு முறை. இந்த ext4 கோப்பு முறை பல சிறப்புகளைக் கொண்டது. இதைப் பற்றிக் கூற வேண்டுமானால் தனியாக ஒரு பதிவில்தான் கூற வேண்டும் இப்பொழுது வேண்டாம். லினக்ஸினுடைய இருப்பியல்பான கோப்பு முறைகள் ext2, ext3, ext4. அதாவது ext வகையாறாக்கள். இந்த கோப்பு முறைகளைத் தவிர வேறு கோப்பு முறைகளக் கொண்டும் லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் மேலே கண்ட மூன்று கோப்பு முறைகளைத் தவிர வேறு கோப்பு முறைகளில் நிறுவி விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்த முடியுமா?.
இதுவரை பதிவினுடைய தலைப்பிற்கு சம்பந்தமில்லாத தகவல்களைப் பார்த்தோம். இப்பொழுது பதிவினுடைய தலைப்பிற்குள் செல்வொம்.
உபுண்டு லினக்ஸ் மட்டுமல்லாது மற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் என்ன வென்றால் லினக்ஸ் இயங்குதளத்தில் இருந்துக் கொண்டு விண்டோஸ் இயங்குதளத்தினுடைய கோப்புகளை எடுக்க முடியும் என்பது. அதாவது விண்டோஸ் இயங்குதளத்தினுடைய கோலன்களை ( C: D: E: F: .........) அணுக முடியும். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து கொண்டு லினக்ஸில் இருக்கும் ஒரு கோப்பினை எடுக்க முடியாது.
உதாரணமாக உபுண்டு லினக்ஸில் இணையத்தினைப் பயன்படுத்தி ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்கிறோம் அதை விண்டோஸிற்கு கொண்டு வந்து பயன்படுத்த வேண்டுமானால் தரவிறக்கம் செய்த அந்த கோப்பினை விண்டோஸினுடைய கோலனுக்குள் Copy & Paste செய்து பயன்படுத்த வேண்டும்.
இந்த பிரச்ச னையைத் தீர்க்கத்தான் ext2fsd எனும் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளின் அளவு 2.5 MB தான். இதை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.
இந்த ஓப்பன் சோர்ஸ் மென்பொருளின் இணையதள முகவரி : http://www.ext2fsd.com/ .
எப்படி பயன்படுத்துவது:
தரவிறக்கம் செய்த கோப்பு .zip முறையில் சுருக்கப்பட்டு இருக்கும் , முதலில் Extract செய்ய வேண்டும். முதல் படி முடிந்து விட்டது.
பிறகு விண்டோஸினுடைய Command Prompt னை திறக்க வேண்டும்.
விண்டோஸினுடைய Command Prompt னை திறக்க எளிய வழி Windows Key + R கொடுத்து கிடைக்கும் விண்டோவில் cmd என தட்டச்சு செய்து Enter key னை அழுத்தவும்.
Command Prompt -ல் CD கட்டளையினப் பயன்படுத்தி ext2fsd மென்பொருளை எங்கு Extract செய்து வைத்திருக்கிறீர்களோ அங்கு செல்லவும்.
உதாரணமாக:
நான் E:\SOFTWARES\ext2fsd என Extract செய்து வைத்திருந்தேன். இதற்காக நான் Command Prompt -ல் கொடுத்த கட்டளை.
E: (என்டர் கீயினை அழுத்தினேன்)
CD SOFTWARES (என்டர் கீயினை அழுத்தினேன்)
CD ext2fsd (என்டர் கீயினை அழுத்தவும்)
நீங்கள் எங்கு Extract செய்து வைத்திருக்கிறீர்களோ அதற்குத் தகுந்தாற் போல் கொடுத்துக் கொள்ளுங்கள்.
படம்-1
இந்த கட்டளையெல்லாம் கொடுத்து முடித்த பிறகு நீங்கள் ext2fsd அடைவிற்குள் இருப்பீர்கள். இப்பொழுது cd Setup எனக் கொடுத்து என்டர் கீயினை அழுத்துங்கள். இப்பொழுது Setup என்னும் அடைவிற்குள் இருப்பீர்கள்.
dir எனக் கட்டளைக் கொடுத்தால் உள்ளே உள்ள கோப்புகள் அனைத்தையும் காட்டும்.
படம்-2
setupu.bat என தட்டச்சுச் செய்து என்டர் கீயினை அழுத்துங்கள். அழுத்தியவுடன் நிறுவுதலுக்குண்டான அமைப்புக் கட்டளைகள் காட்டப்படும். நீங்கள் நிறுவியிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தினைப் பொறுத்து நிறுவுதல் கட்டளைக் கொடுக்கவும்.
உதாரணமாக: நீங்கள்
Windows XP நிறுவியிருந்தால்
setup wxp i386 எனக் கொடுக்கவும்.
Windows 7 நிறுவியிருந்தால்
setup wlh i386 எனக் கொடுக்கவும்.
கட்டளைகளைக் கொடுத்து என்டர் கீயினை அழுத்தினால் உங்களுக்கு driver successfully installed என ஒரு செய்திக் கிடைக்கும்.
படம்-3
அவ்வளவுதான் Command Prompt -ல் வேலைகள் முடிந்து விட்டது. Command Prompt -னை Minimize செய்து வைத்து விட்டு. நீங்கள் Extract செய்தவைத்திருக்கும் ext2fsd Folder க்குள் சென்று Ext2Mgr என்று ஒரு கோப்பு இருக்கும். அதை Double Click செய்யுங்கள்.
படம்-4
Click செய்தவுடன் படம்-4 உள்ளதைப் போன்று Ext2fsd Manager கிடைக்கும் அதில் வன்வட்டினுடைய அனைத்து Partition -களும் காண்பிக்கப்படும் லினக்ஸ் Partition கள் உட்பட.
படம்-5
அதில் உங்களுக்கு லினக்ஸினுடைய எந்த Partition ஐ விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதன் சுட்டியினை வைத்து Right Click செய்யுங்கள். உங்களுக்கு கிடைக்கும் தேர்வில் Change Drive Letter என்பதை சொடுக்குங்கள். நீங்கள் சொடுக்கியவுடன் படம் -6 ல் உள்ளது போன்ற திரை கிடைக்கும்.
படம்-6
அதில் Add எனும் பொத்தானை அழுத்துங்கள். அழுத்தியவுடன் படம் -7 ல் உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.
படம்-7
இதில் Drive Letter னை அதுவே Default ஆக அமைத்துக்கொள்ளும். இதை நீங்கள் விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் ஒரு நிபந்தனை ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் Drive Letter களை நீங்கள் கொடுக்கக் கூடாது. ஆகையால நீங்கள் இதில் ஒன்றும் மாற்றம் செய்ய வேண்டாம்.
இந்த திரையில் உள்ள OK எனும் பொத்தனை அழுத்துங்கள். அழுத்தியவுடன் படம்-8 ல் உள்ளது போன்ற திரைக் காண்பிக்கப்படும்.
படம்-8
இந்த திரையில் அமைக்கப்பட்ட Drive Letter Mount Points எனும் வரிசைப் பெட்டியினுள் காண்பிக்கப்படும். அவ்வளவுதான் Done எனும் பொத்தானை அழுத்துங்கள்.
படம்-9
அழுத்திய பிறகு Menu bar க்குச் சென்று Tool என்பதினை சொடுக்கி Refresh and Reload என்பதைத் தேர்வு செய்து சொடுக்குங்கள்.
படம்-10
படம்-11
லினக்ஸினுடைய Partition -ல் உள்ள கோப்புகளை பார்வையிட My Computer செல்லுங்கள். அதில் நாம் அமைத்த Drive Letter உடன் கோலன் உருவாகியிருக்கும். அதை திறந்து லினக்ஸினுடைய கோப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Sep 15, 2011
Subscribe to:
Posts (Atom)