உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 39 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.
Jul 31, 2010
Jul 8, 2010
லினக்சில் MySQL தகவல்தளம் (Database)
MySQL என்பது Oracle,MS-Access,FOXPRO,SQL server தகவல்தளங்களைப் போன்று ஒரு தகவல்தள மென்பொருளாகும்(திறவூற்று தகவல்தள மென்பொருள்-Open Source Database).நான் பொறியியல் படித்துக்கொண்டிருப்பதால் இந்த பருவத்திற்கு DBMS என்ற பாடம் எனக்கு உள்ளது.இந்த பாடத்திற்கு ஆய்வகமும் உள்ளது.இந்த பாடத்தின் ஆய்வகத்திற்கு நாங்கள் Oracle மென்பொருளைப் பயன்படுத்தி பயிற்சிகளை செய்கிறோம்.
நாங்கள் பயன்படுத்தும் ஆரக்கிள் மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது.பெரும்பாலும் அனைத்து பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் தகவல்தளம் சம்பந்தமான பாடத்திற்கு ஆரக்கிள் மென்பொருளைப் பயன்படுத்தியே செய்முறை வகுப்புகளை நடத்துகின்றனர்.நான் பாலிடெக்னிக் படிக்கும் பொழுது கூட எனக்கு ஆரக்கிள் மென்பொருள்தான் கற்றுத்தரப்பட்டது. MySQL என்ற தகவல்தளம் இருப்பது கூட எங்களுக்கு சொல்லித்தரப்படவில்லை.விண்டோஸ் இயங்குதளத்திலும் இந்த MySQL தகவல்தள மென்பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அத்தனை மென்பொருள்களுக்கும் அதற்கு சமமான மென்பொருள்கள் லினக்ஸிலும் இருக்கிறது.நாம்தான் தேடிக்கண்டுபிடித்து நிறுவி பயன்படுத்த வேண்டும்.இதற்கு முன் MySQL தகவல்தள மென்பொருளைப் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஒரு சில முறை மட்டும் கிடைத்தது விண்டோஸ் இயங்குதளத்தில் MySQL மென்பொருளை நிறுவிவைத்திருந்தாலும் அடிக்கடிப் பயன்படுத்திப் பார்ப்பதில்லை இப்பொழுதுப் பாடத்திட்டத்தில் இருப்பதால் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.நான் பயன்படுத்திப் பார்த்த அளவில் ஆரக்கிள் மென்பொருளுக்கும் MySQL மென்பொருளுக்கும் கட்டளைகளை இயக்குவதில் கொஞ்சம் வித்தியாசம் இருப்பதாக உணர்கிறேன்.MySQL மென்பொருளை உபுண்டு 9.04 இயங்குதளத்தில் நிறுவுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தேன் நிறுவமுடியவில்லை.இறுதியாக இந்த முயற்சியினை கைவிட்டுவிட்டு லினக்ஸ் மின்டில் நிறுவினேன்.என்னுடைய மடிக்கணினியில் லினக்ஸ் மின்ட் நிறுவவில்லை வன்வட்டில் பிரச்சனை.என்னுடைய நண்பர் செ.வெங்கட்ராமன் அவர்களுடைய மடிக்கணினியில் லினக்ஸ் மின்டினை நிறுவியிருக்கிறார்.
நான் எப்படி MySQL தகவல்தள மென்பொருளை நிறுவினேன் எப்படி பயன்படுத்தினேன் என்பதை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நான் லினக்ஸ் மின்டில் முதலில் நிறுவியது MySQL Client மென்பொருளைத்தான் ஆனால் இந்த மென்பொருளை சரிவர இயங்கவில்லை பிழைச்செய்திகளைக் காட்டியது.ஆகையால் MySQL Server பதிப்பு மென்பொருளை நிறுவினேன் இங்கு நான் கூறுகின்ற வழிமுறைகள் அனைத்தும் MySQL Server மென்பொருளுக்குண்டானதுதான்.

சரி செய்முறைக்கு செல்வோம்.
Mysql Client மென்பொருளை நிறுவி இயக்கிய பொழுது காட்டிய பிழைச்செய்தி (கீழுள்ள படத்தில் உள்ளது )
- முனையத்தில் apt-get install mysql-server-5.0 எனக் கட்டளையினைக் கொடுத்து என்டர் பொத்தானை அழுத்தவும்.(நீங்கள் இணைய இணைப்பில் இருக்க வேண்டும்)
- நிறுவுவதற்கு ஒரு சில நிமிடங்கள் பிடிக்கும் நிறுவிக்கொண்டிருக்கும் பொழுது இடையில் MySQL க்கு உண்டான root பயனாளரினுடைய கடவுச்சொல்லை இரண்டுமுறை உள்ளிடச்சொல்லிக் கேட்கும்.(Linux Mint இயங்குதளத்தினுடைய root பயனாளரினுடைய கடவுச்சொல்லைத்தான் கொடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை) கடவுச்சொல்லைக் கவனமாகக் கொடுக்கவும் மறந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
- நிறுவி முடித்தவுடன் முனையத்தில் mysql -u root -p கொடுத்து என்டர் பொத்தானை அழுத்தவும்.
- கடவுச்சொல்லை உள்ளிடவும்(mysql install ஆகும் பொழுது கொடுத்த கடவுச்சொல்) அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் MySQL மென்பொருளப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
------------------------------------------------------------------------------------
- MySQL னுடைய தளம் இங்கு சென்று MySQL மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளலாம்.விண்டோஸ்இயங்குதளத்தில் நிருவுவும் வடிவிலும் கொடுக்கப்பட்டு உள்ளது.
- MySQL தகவல் தளத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த தளத்தில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
- MySQL தகவல் தளத்தைப் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.
------------------------------------------------------------------------------------
எனது நண்பர் செ.வெங்கட்ராமன் பயன்படுத்திக்கொண்டிருக்கும் Linux Mint னுடைய பதிப்பு Elyssa (Linux Mint 5.0).இந்த பதிவினை எழுத மடிக்கணினி கொடுத்து உதவிய நண்பர் செ.வெங்கட்ராமன் B.E (E.C.E) அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

Subscribe to:
Posts (Atom)