எழுத்தாளர் டான் அசோக் இம்மாத(ஜனவரி, 2018) 'உயிர்மை' இதழில் எழுதிய '2ஜி என்னும் சமூகநீதிப் போர்!' கட்டுரை. சும்மா தெரிக்க விட்டிருக்காப்புல. நன்றி டான் அசோக்.
Jan 7, 2018
Jan 1, 2018
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் பொன்மாலைப் பொழுது என்கிற நிகழ்வு நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற, முக்கியமான ஆளுமைகளை பல்வேறு துறைகளிலிருந்து அழைத்துவந்து உரையாற்ற வைக்கின்றனர். வாரம் தவறாமல் அந்த காணொளிகளை யூடியூப்பில் பார்ப்பேன். ஒரு நாள் 'தி இந்து-தமிழ்' நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அற்புதமா பேச்சு. அந்த பேச்சு முழுவதும் திராவிடக்கட்சிகள் தமிழகத்திற்கு செய்த திட்டங்களையெல்லாம் விளக்கி, திராவிடக்கட்சிகளுக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார். அற்புதமான பேச்சு. வாய்ப்பிருந்தால் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். இணைப்பு இங்கே.
அந்த உரையில் தி இந்து தமிழ் நாளிதழின் சார்பாக தமிழகமே பெருமைப்படும் அளவிற்கான ஒரு ஆய்வு பணியை செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் அது புத்தகமாக வெளிவரும் என்று கூறியிருந்தார். அப்போது அது என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகரித்து விட்டது. கொஞ்ச நாளில் 'தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்' புத்தகம் பற்றிய அறிவிப்பு தி இந்துவில் வெளிவந்தது. மகிழ்ந்து போனேன். உண்மையிலேயே படித்து பாதுகாக்கப்பட்ட வேண்டிய ஆவணம்தான்.
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிட கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சட்டமன்ற பணியின் அறுபதாண்டு ஆகியவைகளையொட்டி இந்த புத்தகம் வெளியிட்டப்பட்டிருக்கிறது.
திராவிட இயக்கங்கள் என்ன செய்தது தமிழ்நாட்டிற்கு? திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன என திராவிடத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கும், அவதூறுக்கும் சரியான பதிலடியை கொடுக்கும் விதமாக பல்வேறு அறிஞர்கள், பல மாநிலங்களின் அரசியல் ஆளுமைகள் என அனைவரிடமிருந்தும் கருத்துக்களை சேகரித்து மிகப்பெரிய ஆவணப்பெட்டகமாக கடுமையான உழைப்போடு இந்த புத்தகத்தை தி இந்து தமிழ் குழு உருவாக்கியிருக்கிறது. இந்த புத்தகத்தை உருவாக்கிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
வைரஸ் காய்ச்சல் வந்து அலுவலகத்தில் 10 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊரில் தங்கியிருந்த நேரம். நண்பர் பிரசன்னா அழைத்து கதிர் 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' புத்தகம் வாங்கி விட்டேன் என்று கூறினார். எழும்பூர் இரயில் நிலையத்திற்கு உறவினர்களை வழியனுப்பச் சென்றுவிட்டு, அப்படியே பெரியார் திடலுக்கு போய்விட்டு திரும்பும் வழியில் ஒரு பெட்டிக்கடையில் வாங்கியிருக்கிறார்.
எனக்கு மேலும் ஆர்வம் அதிகரித்தது. அலுவலகத்திற்கு புத்தகத்தை எடுத்துவரச் சொல்லி வாங்கி பார்த்தேன். பிறகு மெரினா புக்ஸ் இணையதளத்தில் 4-புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒரு புத்தகத்தை நண்பர் ஜெகன் எடுத்துக்கொண்டார். இன்னொரு புத்தகத்தை தன்னுடைய உறவினருக்கு கொடுப்பதற்காக பிரசன்னா வாங்கி கொண்டார். எங்கள் ஊரில் இருக்கும் அண்ணன் ஒருவருக்கு ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டேன். திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் அவர். இன்னொரு புத்தகம் எனக்கு.
புத்தகம் வெளிவந்த பிறகு சில முக்கியமான கட்டுரைகளை தி இந்துவில் நடுப்பக்கத்தில் வெளியிட்டு வந்தார்கள். அதில் சண்முகநாதனின் பேட்டி பலத்த வரவேற்பை பெற்றது.
புத்தகத்தின் விலை ரூ.200 ஆனால் இருக்கும் செய்திகளோ விலைமதிப்பில்லாதது. புத்தகத்தின் எந்த பக்கத்திலும் சொல்லப்பட்ட கருத்துக்களே திரும்பவும் இடம்பெறாமல், அனைத்தும் புதிய புதிய தகவல்களாக இடம் பெற்றிருப்பது புத்தகத்தின் சிறப்பு.
தெற்கிலிருந்து ஒரு சூரியன்! - ஃபர்ஸ்ட் லுக்கை திராவிடர் கழக தலைவர், ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டார். தொடக்கமே அதிரடியாக இருந்தது. திராவிடத்தின் ஊற்றுக்கண்ணே பெரியால் திடல்தானே!
திமுக தோழர்கள், திராவிட இயக்க ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள் என அனைவரும் வாங்கி, படித்து, பாதுகாக்க வேண்டிய அரிய கருவூலம் இந்நூல் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை, இதனை பாரம்பரியம் மிக்க 'தி இந்து குழுமம்' வெளியிட்டிருப்பது பெருமைக்குரியது. என்று திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
- கே.அசோகன், ஆசிரியர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
- தே.ஆசைத்தம்பி, பத்திரிக்கையாளர், நடுப்பக்க ஒருங்கிணைப்பாளர், 'தி இந்து' தமிழ்
- வ.ரங்காசாரி, பத்திரிக்கையாளர், நடுப்பக்க ஆலோசகர், 'தி இந்து' தமிழ்
- ச.சிவசுப்பிரமணியன், பத்திரிக்கையாளர், தலைமை உதவி ஆசிரியர், 'தி இந்து' தமிழ்
- சமஸ், பத்திரிக்கையாளர், நடுப்பக்க ஆசிரியர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
- கோபாலகிருஷ்ண காந்தி, ராஜதந்திரி, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர், காந்தியின் பேரன்
- சுப.வீரபாண்டியன், பெரியாரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர், தமிழ்ப் பேராசிரியர்
- விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர், எழுத்தாளர்
- தேவ கௌடா, கர்நாடக முதல்வர், முன்னாள் பிரதமர்
- ஆர்.விஜயசங்கர், பத்திரிக்கையாளர், ஆசிரியர், ஃபிரன்ட்லைன்
- அமர்த்தியா சென், பொருளியல் அறிஞர், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்
- ழீன் தெரெசே, பொருளியல் அறிஞர்
- டேவிட் ஷூல்மன், இஸ்ரேலிய அறிஞர், சங்க இலக்கியத்தை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்தவர்
- பிரேர்ணா சிங், ஆய்வறிஞர், ப்ரௌன் பல்கலைக்கழகம், அமெரிக்கா
- முகமது யூசுஃப் தாரிகாமி, சமூகவியல் அறிஞர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
- யோகேந்திர யாதவ், சமூவியல் அறிஞர், ஆம்ஆத்மி கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்
- அமன்தீப் சிங் சந்து, பஞ்சாபைச் சேர்ந்த, பத்திரிக்கையாளர், எழுத்தாளர்
- பிரதீப் பாஞ்சுபாம், மணிப்பூரைச் சேர்ந்த ஊடகவியலாளர், 'இம்பால் ஃப்ரீ ப்ரெஸ்' நாளிதழின் ஆசிரியர்
- கர்க சட்டர்ஜி, வங்கத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர், இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்
- வைபவ் ஆப்னாவே, ஆய்வறிஞர், மாராத்தி ஆவணப்பட இயக்குநர்
- பால் சக்கரியா, மலையாள எழுத்தாளர், சமூவியல் அறிஞர்
- சித்தலிங்கையா, கன்னடக் கவிஞர், சமூவியல் அறிஞர்
- கல்பனா கண்ணபிரான், வரலாற்றறிஞர், இயக்குநர், சிஎஸ்டி, ஹைதராபாத்
- கே.கே.மகேஷ், பத்திரிக்கையாளர், சிறப்புச் செய்தியாளர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
- க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்
- கி.வீரமணி, திராவிடர் கழக தலைவர்
- கலி.பூங்குன்றன், துணைத்தலைவர், திராவிடர் கழகம்
- கே.சந்துரு, நீதித்துறை வல்லுநர், மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்
- ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வறிஞர், எம்ஜடிஎஸ், சென்னை
- வெ.சந்திமோகன், பத்திரிக்கையாளர், முதுநிலை உதவி ஆசிரியர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
- சுபகுணராஜன், வரலாற்று ஆய்வாளர், முன்னாள் கலால் துறை அதிகாரி
- ஓவியா, பெண்ணியச் செயல்பாட்டாளர், எழுத்தாளர்
- சல்மா, கவிஞர், முன்னாள் பேரூராட்சித் தலைவர், சிறந்த நிர்வாகிக்கான விருது வென்றவர்
- தொல்.திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
- எஸ்.ராஜன், வழக்கறிஞர், ஊராட்சி மன்றத் தலைவர்
- கோம்பை அன்வர், வரலாற்றாய்வாளர், ஆவணப்பட இயக்குநர்
- ராஜன் குறை, சமூக ஆய்வாளர், டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்
- தொ.பரமசிவன், ஆய்வாளர்
- அனந்த கிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
- வி.ஆர்.முரளிதரன், சென்னை ஐ.ஐ.டி, பொருளாதார துறைப் பேராசிரியர்
- ஆர்.விரப்பன், பொறியியல் நிபுணர்
- எம்.எஸ்.சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
- நாகநாதன், முன்னாள் மாநில திட்டக்குழு துணைத்தலைவர்
- இரா.கண்ணப்பன், ஐ.நா சபை ஈராக் பாகுரா அலுவலகத் தலைவர்
- மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர், செயல் தலைவர் தி.மு.க
- கவிஞர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர், கலைஞரின் மகள்
- சண்முகநாதன், கலைஞரின் செயலாளர்
- யோகா, புகைப்பட கலைஞர்
- கரு.முத்து, பத்திரிக்கையாளர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
- சிற்பி செல்வநாதன், சிற்பி கணபதி ஸ்தபதியின் சகோதரர் மகன்
- இமையம், எழுத்தாளர்
- மேனா உலகநாதன், பத்திரிக்கையாளர்
- ஆர்.நல்லக்கண்ணு, மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவர்
- காதர் மொகதீன், தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- செல்வ புவியரசன், பத்திரிக்கையாளர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
- துரைமுருகன், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர்
- பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தின், திமுக செயலாளர்
- ஏ.எஸ்.பன்னீர்செல்வம், பத்திரிக்கையாளர், 'தி இந்து'
- பேராசிரியர் க.அன்பழகன், பொதுச்செயலாளர், திமுக
- ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
- ஹண்டே, அதிமுக
- பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்
- கே.சுப்ராயன், இந்திய கம்யூனிஸ்ட்
- பாலபாரதி, மார்க்சிஸ்ட்
- வேலாயுதம், பாஜக
- ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்
- நாஞ்சில் குமரன் ஐ.பி.எஸ்
- சீனிவாசன், இந்தியா சிமெண்ட்
- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
- கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம்
- எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் கர்நாடக முதல்வர்
- சேகர், விவசாயி
- என்.ராம், மூத்த பத்திரிக்கையாளர், 'தி இந்து' பதிப்பகக் குழுமத் தலைவர்
- டி.ஜே.எஸ்.ஜார்ஜ், சமூகவியல் அறிஞர், மூத்த பத்திரிக்கையாளர், தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்
- சுகுமாரன், கவிஞர், மூத்த பத்திரிக்கையாளர், பொறுப்பாசிரியர், காலச்சுவடு
- வாஸந்தி, மூத்த பத்திரிக்கையாளர்
- நக்கீரன் கோபால்
- முரசொலி செல்வம்
- வைரமுத்து, கவிஞர், பாடலாசிரியர்
- கலாப்ரியா, மூத்த கவிஞர், இலக்கிய விமர்சகர்
- எம்.எஸ்.எஸ்.பாண்டியன், வரலாற்றறிஞர்
- ராதிகா, நடிகை
சினிமா துறையிலிருந்து.....
- சிவாஜி கணேசன்,
- கவிஞர் கண்ணதாசன்
- எம்.எஸ்.சுவாமிநாதன்
- பாரதிராஜா
- கமல்ஹாசன்
- ரஜினிகாந்த்
- மணி ரத்னம்
- ஏ.ஆர்.ரஹ்மான்
பொதுமக்கள் சார்பாக.....
- கொள்கை பிடிப்பு குஞ்சலம், புயந்துரை, நாகை
- மாசிலாமணி, செண்பகராமன்புதூர், நாகர்கோவில்
- கமலம், கீழப்பழுவூர், அரியலூர்
- டான் அசோக், மதுரை
- மதுரைவீரன், தஞ்சாவூர்
- சாம்ராஜ, கோணாங்கிநாயக்கன அள்ளி, தருமபூரி
- செல்வராஜ், மேட்டூர், தென்காசி
- மு.அப்துல்கலாம், மதுரை
- இளங்.கார்த்திகேயன், மகாதேவப்பட்டணம்
என மிகப்பெரிய ஆளுமைகளிலிருந்து, சாதரண பொதுமக்கள் வரை அனைவரும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றியும், திராவிடர் இயக்கத்தின் சாதனைகளைப் பற்றியும் எடுத்துக்கூறியிருக்கின்றனர். பேட்டி, கட்டுரை, அனுபவ பகிர்வு ஒரு கலவையாக, படிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல் தமிழகத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இணையம் மூலமாக அரசியலையும், வரலாற்றையும் தெரிந்து கொள்ள முற்படும் இன்றைய இளைஞர் அனைவரும் படித்து உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம்.
கலைஞரின் பேட்டி, வணக்கம் தலைவர் இல்லம், ஆறு தருணங்கள், அறிவாலாயத்தின் கதை, மத்தியில் கூட்டாச்ச மாநிலத்தில் சுயாட்சி, கருணாதிதியின் கட்டுமானங்கள், கலைஞர் எழுதியி அண்ணா இதய மன்னா என்று தனியாக பல சிறப்பு கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தியாவில் கலைஞரைப் போல வரலாறு கொண்ட ஒரு அரசியல் தலைவர் இருக்க வாய்ப்பில்லை என்பது இந்த புத்தகத்தைப் படித்த முடித்த பின்பு தெரிந்து கொண்டேன். என்ன உழைப்பு! உழைப்பு என்றால் கலைஞர்தான். கலைஞர் அடிக்கடி சொல்வாராம் ஒரு நாள் இரண்டு நாளுக்குச் சமம் என்று. நானெல்லாம் சனி, ஞாயிறு விடுமுறையை வெட்டியாகவே வீணடித்துக்கொண்டிருக்கிறேன்.
தமிழகத்தில் எளிமையான அரசியல் தலைவர் என்றால் அது காமராஜர்தான் என்பது பிரச்சாரம் செய்யப்பட்ட ஒன்று. ஆனால் தமிழகத்தில் எளிமையான தலைவரென்றால் அது அறிஞர் அண்ணாதான் என்று சமஸ் அந்த காணொளியில் கூறியிருந்தார். உண்மையும் அதுதான். சில புதிய புரட்சியாளர்கள் காமராஜரை தூக்கிப்பிடிப்பது கூட அண்ணா, கலைஞரை இருட்டடிப்பு செய்யவே. இந்த புத்தகம் அந்த இருட்டடிப்பில் சூரிய வெளிச்சத்தைப் பாய்ச்சும். 2017 -ஆம் ஆண்டு நான் வாசித்த புத்தகங்களில் சிறந்த புத்தகமாகவும் எனக்கு பிடித்த புத்தகமாகவும் இதை கருதுகிறேன். இந்த புத்தகத்தில் நான் அடிக்கோடிட்டு வைத்துள்ள செய்திகளை தனியாக தொகுத்து ஒரு பதிவு செய்யலாம் என திட்டம் வைத்திருக்கிறேன். திராவிடர் இயக்க ஆதரவாளனாக நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகள் அனைத்திற்கும் வலுவான செய்திகளுடனும், ஆதாரத்துடனும் இதில் பதில் இருக்கிறது.
வாழ்க திராவிடம்!
புத்தகம் வாங்க
தமிழ் திசை,
கஸ்தூரி பில்டிங்,
859 அண்ணா சாலை, சென்னை-2
விலை : ரூ.200
பிற்சேர்க்கை:
தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூல் 5 படிகள் வாங்கி அக்கா, தங்கை, அத்தை மகள், மச்சான் எல்லாருக்கும் அன்பளிப்பாகத் தந்தேன். ஏற்கனவே இதைப் படித்து விட்டதாகச் சொன்ன அப்பா, இன்னொரு படியை யாருக்காவது கொடுக்கலாம் என்று எடுத்துச் சென்றார். புத்தகம் பரிசு தருவதே அரிது. அதிலும் கலைஞரைப் பற்றிய புத்தகமா, உனக்கு என்ன ஆச்சு, அரசியலில் குதித்து விட்டாயா என்று புருவம் உயர்த்தினார்கள்.
"உங்களுக்குத் திமுக, கலைஞர் மேல் ஒரு அபிமானமும் இல்லையென்றாலும் தமிழக வரலாற்றை அறிந்து கொள்ளவாவது படியுங்கள். இல்லை, உங்கள் வரவேற்பறையில் சும்மாகவேனும் வைத்திருங்கள்" என்று கூறினேன்.
வேறு வழியில்லை. வீட்டில் இருந்து அரசியல் கற்பிக்க வேண்டியது தான். இல்லாவிட்டால், வாட்சாப்பின் மூலம் அரசியல் கற்பவர்கள் திமுக மோசம் என்று சொல்லி இன்னும் மோசமான கட்சியைப் பொறுப்பில் அமர்த்துவார்கள். இவர்களோடு சேர்ந்து நாமும் செத்து விளையாட வேண்டி இருக்கிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே!
Thanks: https://www.facebook.com/ravidreams
புத்தகம் வாங்க
தமிழ் திசை,
கஸ்தூரி பில்டிங்,
859 அண்ணா சாலை, சென்னை-2
விலை : ரூ.200
பிற்சேர்க்கை:
தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூல் 5 படிகள் வாங்கி அக்கா, தங்கை, அத்தை மகள், மச்சான் எல்லாருக்கும் அன்பளிப்பாகத் தந்தேன். ஏற்கனவே இதைப் படித்து விட்டதாகச் சொன்ன அப்பா, இன்னொரு படியை யாருக்காவது கொடுக்கலாம் என்று எடுத்துச் சென்றார். புத்தகம் பரிசு தருவதே அரிது. அதிலும் கலைஞரைப் பற்றிய புத்தகமா, உனக்கு என்ன ஆச்சு, அரசியலில் குதித்து விட்டாயா என்று புருவம் உயர்த்தினார்கள்.
"உங்களுக்குத் திமுக, கலைஞர் மேல் ஒரு அபிமானமும் இல்லையென்றாலும் தமிழக வரலாற்றை அறிந்து கொள்ளவாவது படியுங்கள். இல்லை, உங்கள் வரவேற்பறையில் சும்மாகவேனும் வைத்திருங்கள்" என்று கூறினேன்.
வேறு வழியில்லை. வீட்டில் இருந்து அரசியல் கற்பிக்க வேண்டியது தான். இல்லாவிட்டால், வாட்சாப்பின் மூலம் அரசியல் கற்பவர்கள் திமுக மோசம் என்று சொல்லி இன்னும் மோசமான கட்சியைப் பொறுப்பில் அமர்த்துவார்கள். இவர்களோடு சேர்ந்து நாமும் செத்து விளையாட வேண்டி இருக்கிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே!
Thanks: https://www.facebook.com/ravidreams
Subscribe to:
Posts (Atom)