Jan 20, 2015

சென்னை புத்தகக் காட்சி - 2015

இடது புறமாக இருப்பவர் பா.மணிகண்டன், நடுவில் இருப்பவர் ம.பாண்டியராஜன், வலது புறமாக இருப்பவர் இரா.கதிர்வேல்
நீண்ட நாளைக்குப் பிறகு எனது ஆசை நிறைவேறியது. சென்னை புத்தகக் காட்சி - 2015 யில் நான் என்னுடைய நண்பர்களுடன் கலந்து கொண்டேன். 3000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருக்கிறேன். இந்த வருடத்திற்குள் அவையனைத்தையும் படித்து முடித்து விட வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நெருங்கிய நண்பர்களான பா.மணிகண்டன், ம.பாண்டியராஜன், அன்பு.பாலசுப்பிரமணியன் ஆகியோர்களை புத்தகக் காட்சி மூலமாக சந்திக்க முடிந்தது. நாங்கள் மூவரும் புத்தகக் காட்சியில் சந்திக்க மிகவும் சிரத்தையோடு ஒருங்கிணைப்பு செய்தது நண்பர் பா.மணிகண்டன். பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் புத்தகக் காட்சியில் கலந்து கொள்ள அழைத்த உடனேயே நண்பர் ம.பாண்டியராஜன் அவர்கள் நிச்சயமாக வருகிறேன் என ஒத்துக்கொண்டார்.

நண்பர்களுக்கு நன்றி!

Jan 16, 2015

LaTex இல் தமிழ்

LaTex என்பது ஒரு Document Preparation System மற்றும் Document Markup Language ஆகும். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிப்பீடியா பக்கத்திற்குச் செல்லவும். இதில் தமிழ் மொழியையும் பயன்படுத்தலாம். தமிழைப் பயன்படுத்துவதுப் பற்றி இங்கு பார்ப்போம்.

XeLaTex Package ஐ நிறுவுதல்


தமிழ் வசதியினைக் கொண்டு வருவதற்கு xelatex பொதி கட்டாயம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். முதலில் synaptic package manager ஐப் பயன்படுத்தியோ அல்லது கட்டளை வரி மூலமாகவோ xelatex ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.



கீழ்காணும் உதாரண நிரலை gedit Text Editor இல் எழுதிக்கொள்ளுங்கள். கோப்பினை .tex எனும் Extension உடன் சேமியுங்கள். அதன்பின் முனையத்தில் xelatex filename.tex என கொடுத்து compile செய்யுங்கள். பிழைகள் ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டப்படும். பிழைகள் இல்லையென்றால் நாம் கொடுத்திருக்கும் நிரல் வரிகளுக்கு ஏற்ப pdf கோப்பினை உருவாக்கி கொடுக்கும்.

உதாரண நிரல்:

\documentclass{article}
\usepackage{fontspec}
\newfontfamily{\tamil}[Script=Tamil]{Lohit Tamil}
\newfontfamily{\tamilpriyankafont}[Script=Tamil]{TAU_Elango_Priyanka}
%English does not need any script specifiction! Just define the font.  % - means commend line
\newfontfamily{\eng}{Century Schoolbook L}
\begin{document}
{\tamil வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!! {\tamilpriyankafont ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களைப் பயன்படுத்துவோம்!}}
\end{document}


.tex கோப்பினை Compile செய்தல்
compile செய்த பின் .tex கோப்பின் வெளியீடு


References: