Apr 26, 2014

உபுண்டு 14.04 LTS - எனது பார்வையில்


உபுண்டு 14.04 LTS பதிப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த பயனாளர்களில் நானும் ஒருவன். அதோடு தோழர் பா.சக்திவேல் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் 'அண்ணே உபுண்டுவை டவுன்லோட் பண்ணிட்டீங்களா?' என அடிக்கடி விசாரித்துக் கொண்டிருந்தார். ஏப்ரல் 18-ஆம் தேதி அன்றுதான் தரவிறக்கத்தை ஆரம்பித்தேன். மின்வெட்டு கடுமையாக இருந்த காரணத்தினால் Torrent மூலமாக தரவிறக்கம் செய்தேன். என்னிடம் அகலக்கற்றை இணைய இணைப்பு இல்லை அண்ணன் சோம.நீலகண்டன் அவர்களினுடைய கணினியில் இருந்த அகலக்கற்றை இணைப்பைத்தான் பயன்படுத்தி வருகிறேன். அதனுடைய வேகம் 50-56 KB/Sec என்ற அளவில் இருந்தது. ஆகையால் நேற்றுதான்(25.04.2014 மதியம் 12.30 மணியளவில்) தரவிறக்கத்தை முடித்தேன்.

தரவிறக்கம் முடிந்த உடன் பென்டிரைவ் மூலமாக dd கட்டளையைப் பயன்படுத்தி உபுண்டு 14.04 ஐ பூட்டபிளாக மாற்றினேன். முதலில் லைவ் மோடில் இயக்கிப் பார்த்தேன். அதன்பிறகே என்னுடைய மடிக்கணினியில் நிறுவினேன். நான் பயன்படுத்தி பார்த்த பின்பு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இங்கு நான் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் உபுண்டு 12.04 LTS உடன் ஒப்பீடு செய்தே, ஏன் என்றால் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உபுண்டுவினுடைய பதிப்பு 12.04 ஆகும். அதன்பிறகு வந்த உபுண்டு 13.10 ஐ நான் பயன்படுத்திப் பார்க்கவில்லை.

நிறுவுதலுக்கான இடைமுகப்பில் மாற்றம் செய்திருக்கிறார்கள். உபுண்டுவிற்குள் உள்நுழைவதற்கான திரையில்(Login Screen) Ubuntu 2D வசதியை தேர்வு செய்வதற்கான வழியில்லை. இயல்பிருப்பாக Unity Environment ற்குள்ளே செல்கிறது. Libre Office 4.3 பதிப்பை கொடுத்திருக்கிறார்கள். தமிழை உள்ளீடு செய்வதற்கான Ibus வசதி இல்லை. அதற்குப் பதிலாக வேறொன்றை கொடுத்திருக்கிறார்கள். தமிழை ஒலியியல் முறையில் உள்ளீடு செய்வதற்காக m17n பொதியை நிறுவ வேண்டியுள்ளது. அதன்பின்பே தமிழை ஒலியியல் முறையில் தட்டச்சு செய்ய முடிகிறது.

Nautilus File Manager ஐ பயன்படுத்துவதற்கு ஏற்ப அழகான இடைமுகப்புடன் வடிவமைத்து இருக்கிறார்கள். தமிழ் எழுத்துருக்கள் உபுண்டு 14.04 இல் அவ்வளவு தெளிவாக இல்லை. தமிழ் எழுத்துக்கள் சிறியதாக தெளிவில்லாதது போல தெரிகிறது Nautilus, gEdit உட்பட. Gnome Classic வசதிக்கு Gnome Flashback என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் Login செய்யும் போதும் Apport Error திரை காண்பிக்கப்படுகிறது.

மடிக்கணினியினுடைய Tochpad இல் Scrooling செய்வதற்கு Mouse Settings சென்று மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. இந்த பதிப்பிலும் என்னுடைய மடிக்கணினியினுடைய திரையின் ஒளி அளவை கூட்டி குறைக்க முடியவில்லை. குறிப்பிடத்தக்க பிழை என்னவென்றால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த பிழைதான். Titlebar இல் எழுத்துக்கள் செவ்வக வடிவ பெட்டியில் இரண்டு குறுக்குநெடுக்கான கோடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் Gnome Classic Environment இல் இந்த பிழை இல்லை. ஆகையால் இது Unity யினுடைய பிழையாகத்தான் தெரிகிறது.

நெருப்பு நரி உலாவி 28.0 கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் Google Chrome 34.0 பதிப்பை நிறுவி பயன்படுத்தினேன். ஆக மொத்தம் எனக்கு உபுண்டு 14.04 LTS பதிப்பு ஏனோ பிடிக்கவில்லை.

ஆகையால் Remasterys மூலமாக ஏற்கனவே Backup எடுத்து வைத்திருந்த உபுண்டு 12.04.2 LTS பதிப்பையே நிறுவிவிட்டேன். உபுண்டு 12.04 LTS பதிப்பில் எப்படி 12.04.1, 12.04.2, 12.04.3, 12.04.4 என அடுத்தடுத்த பதிப்புகள் வெளியிடப்பட்டதோ அதே போல 14.04 LTS லும் வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். அதுவரையில் எனது மடிக்கணினியில் 12.04.2 LTS தான்!

-- வாழ்க லினக்ஸ்!  வளர்க உபுண்டு!! --

Apr 25, 2014

உபுண்டு 14.04 LTS இல் சிறிய பிழை


Unity Environment  இல் கோப்பினுடைய பெயர் Title Bar இல் தெரியும் போது செவ்வக வடிவில் தெரிகிறது. உபுண்டு 14.04 இல் இது ஒரு பிழையாக தெரிகிறது. இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்கணும்.