உபுண்டு லினக்ஸில் Pendrive, External Hard Disk or any storage medias ஆகியவைகளை இணைக்கும் போது அவைகள் தானாகவே Auto Mount ஆகி Nautilus File Manager திறக்கும். இவை தேவையில்லையென்று நாம் கருதினால் மிக எளிதாக அதை Disable செய்யலாம்.
இதை செய்வதற்கு dconf-editor எனும் Tool நிறுவப்பட்டிருக்க வேண்டும். நிறுவப்பட்டிருக்கவில்லையெனில் முனையத்தை(Terminal) திறந்து sudo apt-get install dconf-tools எனக்கொடுத்து நிறுவிக்கொள்ளலாம்.
அதன் பிறகு Dash Home சென்று dconf-editor ஐ திறந்து கொள்ளவும். அதில் இடது புறமாக இருப்பவற்றில் org->gnome->desktop->media-handling சென்று automount-open என்பதற்கு நேராக உள்ள டிக்கை எடுத்து விடுங்கள். முடிந்தது இனிமேல் எந்த வகையான Storage Devices களை இணைத்தாலும் அவைகள் Mount ஆகும் ஆனால் File Manager -ல் திறக்கப்படாது. விண்டோஸ் இயங்குதளங்களில் பென்டிரைவினை இணைத்தவுடன் autoplay ஆகிறதல்லவா அதைப்போன்றதுதான் இது.
இதை பகிர்ந்து கொண்டதன் அவசியம்:
என்னுடைய Compaq 515 மடிக்கணினி வாங்கி 4 வருடங்கள் ஆகிவிட்டது. அண்மையில் Over heating பிரச்சனையினால் இயங்க முடியாமல் நின்று விட்டது. அதனால் மடிக்கணினியினுடைய வன்வட்டினை கழற்றி 2.5' External Hard Disk Case ஒன்றினை ரூ.350 க்கு வாங்கி அதன்மூலமாக அதை வேறொரு மடிக்கணினியில் இணைத்து பயன்படுத்தி வருகிறேன்.
என்னுடைய வன்வட்டில் மொத்தம் 8 பார்ட்டிசியன்கள். உபுண்டு லினக்ஸ் இருந்ததால் அதற்கானவைகளையும் சேர்த்து. ஒவ்வொரு முறை உபுண்டு லினக்ஸில் இணைக்கும் பொழுதும் 8 பார்ட்டிசியன்களும் mout ஆகி Nautilus File Manager -ல் திறப்பது எனக்கு தொந்தரவாக அமைந்தது. அதனால் நேரமும் வீணாகியது. இந்த வன்முறையை எப்படி நிறுத்துவது என தேடிய போது கிடைத்த தீர்வுதான் நீங்கள் மேலே பார்த்த பதிவு.