விண்டோஸ்+லினக்ஸ் இருக்கும் கணினிகளில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பின் லினக்ஸை மீட்டெடுத்தப் பிறகு , விண்டோஸ் இயங்குதளத்தை GRUB மெனுவில் தேர்வு செய்து உள் நுழையும் போது மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று ஒரு சிறிய பிழைச் செய்தி நமக்கு பெரும்பாலும் கிடைக்கிறது. அந்த பிழைச்செய்தியினை எப்படி சரி செய்வது என்பதை இங்கு காண்போம்.
முனையத்தை திறந்து sudo blkid எனும் கட்டளையைக் கொடுத்து இயக்கவும். நீங்கள் எந்த கோலனில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவியுள்ளீர்களோ அந்த கோலனின் UUID யினைக் Copy செய்யவும், இரட்டை மேற்கோள் குறியில்லாமல் Copy செய்யவும்.
குறிப்பு: பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளங்கள் /dev/sda1 அல்லது /dev/sda2 இவற்றில் ஏதாவது ஒன்றில்தான் நிறுவப்பட்டிறுக்கும்.
grub.cfg கோப்பினை திறக்கவேண்டும். அதற்கு sudo nautilus என முனையத்தில் கொடுத்து இயக்கவும். Nautilus File Manager திறக்கப்படும் அதில் File System -> boot -> grub.cfg திறக்கவும்.
menuentry "Windows 7 (loader)" எனும் வரியினைக் கண்டுபிடித்து அதன் தொடர்ச்சியாக கீழே இருக்கும் வரிகளில் --set-root என்பதை தொடர்ந்து இருக்கும் பழைய UUID ஐ அழித்துவிட்டு மேலே முனையத்தில் blkid கட்டளை மூலம் கண்டுபிடித்து Copy செய்து வைத்திருக்கும் UUID யினை பழைய UUID இருந்த இடத்தில் Paste செய்யவும்.
கவனம்: --set-root என்பதற்கும் UUID என்பதற்கும் இடையில் single space இருக்க வேண்டும்.
Paste செய்த பின் கோப்பினை சேமித்த பிறகு கணினியினை மறுதொடக்கம்(Restart) செய்தால் நீங்கள் எப்பொழுதும் போல விண்டோஸ் இயங்குதளத்தை தேர்வு செய்யும் போது பிழைச்செய்தி கிடைக்காமல் இயங்குதளத்தைப் பயன்படுத்தலாம்.
===========