Jan 26, 2013

Full Circel Magazine - 69 வெளியிடப்பட்டுவிட்டது



இந்த மாத இதழில்:

# உபுண்டு செய்திகள்
# எப்படி: பைத்தானில் நிரல்கள், Libre Office மற்றும் Unity Gnome 2 Style
# Sony Google TV ஒரு ஆய்வு

http://fullcirclemagazine.org/issue-69/

http://dl.fullcirclemagazine.org/issue69_en.pdf


Jan 17, 2013

'Edit Connections' -ல் காட்டப்படாத Mobile Broad Connections -களை நீக்குவது எப்படி?


படம் -1 

நான் பெரும்பாலும் என்னுடைய உபுண்டு இயங்குதளத்தில் கைப்பேசி மூலமாகத்தான் இணையத்தை இணைத்து பயன்படுத்துவேன்.

பி.எஸ்.என்.எல் (BSNL), ஏர்டெல் இரண்டு நிறுவனங்களினுடைய இணைப்பையும் பயன்படுத்தினேன்.

Mobile Broadband Connections -ல் இரண்டு முக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டது.

ஒன்று: நான் Bluetooth மூலமாக கைப்பேசியினை இணைப்பதால் ஒவ்வொரு முறையும் புதிதாக Bluetooth இணைப்பை ஏற்படுத்தித்தான் Mobile Broadband Connection ஐ கொண்டு வர முடிந்தது.  இது தேவையில்லாத ஒன்று.



இரண்டு:  இப்படி ஓவ்வொரு முறையும் இணைக்கும் இணைப்புகளின் பட்டியல் Network Connections Menu வில் ஒரு நீண்ட பட்டியலாக உருவாகி விட்டது.  இதை நீக்கலாம் என நினைத்து Edit Connections -> Mobile Broadband சென்று பார்த்தால் அங்கு எந்தவொரு இணைப்பின் பெயரும் காட்டவில்லை. 



இரண்டாவது பிரச்சனையினை தீர்த்துவிட்டால் முதல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து விடும்.  கூகுளில் தேடியபொழுது  http://askubuntu.com/questions/124861/how-do-i-remove-mobile-broadband-connections-that-dont-appear-under-edit-conne  இந்த இணைப்பில் தீர்வு கிடைத்தது.

தீர்வு:
முனையத்தை திறந்து sudo nautilus எனக் கொடுத்து Nautilus File Manager ஐத் திறந்து கொண்டேன்.  அதில் FileSystem ஐ சொடுக்கி /etc/NetworkManager/system-connections/  Directory யினைத் திறந்து அதனுள் இதுவரை இணைத்திருந்த Mobile Broadband Connections ன் இணைப்புகள் அனைத்தும் இருக்கும்.  தேவையில்லாதவற்றை நீக்கிவிட்டால்.  பிரச்சனை முடிந்தது.