Aug 28, 2012
Aug 12, 2012
PDF வடிவத்தில் உள்ள கோப்பினை JPEG, JPG, PNG கோப்புகளாக மாற்றலாம்
படம் - 1
நாம் ஒரு சில நேரங்களில் PDF வடிவில் உள்ள கோப்புகளை JPG, JPEG, PNG போன்ற படக் கோப்புகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். உதாரணமாக PDF கோப்பினை வலைப்பதிவிலோ அல்லது இணையத்திலோ படமாக மாற்றி ஏற்ற வேண்டிய நேரத்தில் இந்த ஒற்றை வரிக் கட்டளை மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
முனையத்தை திறந்து CD கட்டளையைப் பயன்படுத்தி மாற்ற வேண்டிய PDF கோப்பு எங்கு இருக்கிறதோ அந்த அடைவிற்குள்(Folder) செல்லவும். சென்ற பிறகு கீழ்காணும் கட்டளையினை தட்டச்சு செய்து Enter Key -னை அழுத்தவும்.
convert PDF_Filename.pdf ImageFileName.jpg (JPG வடிவில் மாற்ற வேண்டும் என்றால்)
convert PDF_Filename.pdf ImageFileName.jpeg (JPEG வடிவில் மாற்ற வேண்டும் என்றால்)
convert PDF_Filename.pdf ImageFileName.png (PNG வடிவில் மாற்ற வேண்டும் என்றால்)
குறிப்பு: convert கட்டளையினைப் பயன்படுத்த வேண்டுமென்றால் ImageMagick எனும் மென்பொருள் நிறுவப்பட்டு இருக்க வேண்டும். இதை நிறுவ முனையத்தில்
sudo apt-get install imagemagick எனக்கொடுக்கவும்.
அவ்வளவுதான் PDF கோப்பு இருந்த அடைவுக்குள்ளேயே மாற்றப்பட்ட படக் கோப்புகள் இருக்கும். படக் கோப்பினை எடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டியதுதான்..
Subscribe to:
Posts (Atom)