முனையத்தை நாம் பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்துவோம். இன்னும் சொல்லப் போனால் முனையம் இல்லாமல் லினக்ஸ் இல்லை. இவ்வாறு பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படும் முனையத்தில் time கட்டளையினை stopwatch ஆக பயன்படுத்தலாம்.
முனையத்தை திறந்து (முனையத்தை திறக்க Ctrl+Alt+T ஒரு சேர அழுத்துங்கள்) time read என தட்டசு செய்து Enter Key னை அழுத்துங்கள்.
அழுத்தியவுடன் வெளியீடுகள் எதுவும் கிடைக்காது. ஆனால் பின்புலத்தில் நேரத்தை கணக்கிட்டு கொண்டு இருக்கும். Ctrl+D Key ஒருசேர அழுத்தியவுடன் வெளியீடு கிடைக்கும். அதில் real என்பதற்கு நேராக உள்ள நேரம்தான் Stopwatch -ன் நேரம்.
real என்பதற்கு நேராக உள்ள நேரம் ஒரு கட்டளையினை ஆரம்பித்து முடிப்பதற்கு இடைப்பட்ட காலம் ஆகும். அதைத்தான் இங்கு நாம் Stopwatch ஆக பயன்படுத்துகிறோம்.