அண்மையில்தான் உபுண்டு 12.04 LTS பதிப்பு வெளியிடப்பட்டு பயனாளர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உபுண்டு 12.04 LTS பதிப்பினுடைய முக்கியமான, குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால், இதுவரை வெளியிடப்பட்ட உபுண்டு LTS பதிப்புகளுக்கு மூன்று வருடம் மட்டுமே ஆதரவு கொடுக்கப்பட்டு வந்தது. இந்த 12.04 LTS பதிப்பிலிருந்து ஐந்து வருடமாக மாற்றப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி.
இவ்வாறு மகிழ்ச்சியடைந்துக் கொண்டிருக்கும் வேளையில், Mark Shuttleworth அவர்கள், உபுண்டுவினுடைய அடுத்த பதிப்பானது 12.10 க்கான Code Name வெளியிட்டிருக்கிறார்.
உபுண்டு 12.10 க்கான Code Name - Quantal Quetzal
Quetzal - என்பது வானவில்லில் காணப்படும் பச்சை நிற இறகுகளைக் கொண்ட, Western Mexio -வில் காணப்படும் ஒரு வகை பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது.